Friday, December 13, 2013

நாத்திகம், பகுத்தறிவு , பார்ப்பன எதிர்ப்பு .....!


சர்வதேச அளவில் நடந்த செமினார் ஒன்றுக்கு அழைக்கப்பட்டென் ! Interfaith seminaar ! எல்லா மதத்தவர்களும் வந்திருந்தர்கள்.என்முறை வந்த போது " I am not a believer ! But I beleive those who believe in God ! Because the are my fellow human beings !  என்று ஆரம்பித்தேன் ! வெளி நாடுகளிலும் நாத்திகர்கள் உள்ளார்கள் ! சர்வதெச அளவில் Rationalist assn கள் உள்ளனர் ! கடவுள் இல்லை என்பவன் நாத்திகன்! அவனுக்கும் இல்லாத கடவுளுக்கும் பகை இருக்க வாய்ப்பில்லை ! தமிழகத்தில் தோன்றிய கடவுள் மறுப்பு வாதம் பார்ப்பன எதிர்ப்பாக சுருங்கியது தான் சோகம் ! கடவுளில்லை என்பதை மறுக்க முயற்சிகள் எடுப்பது சிரமம்! பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்பில் கடவுள் இல்லை என்பதையும் அரைப்பாடமாக வாவது  வைத்திருக்க நாம் முயற்சிக்கவில்லை! இன்று அமெரிக்காவில் அந்த முயற்சி நடைபெற்று வருகிறது ! சோவியத்தில் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்யமுடியும் ! புரட்சிக்கு முன்பு அது முடியாது ! நம் கல்லூரிகளில் பல்கலைக்கழக்ங்களில் தத்துவம் படிக்கும் மானவர்களுக்கு கூட நாத்திகம் பற்றி அறிவியல் பூர்வமாக கற்றுத்தர வழியில்லை ! காலையில் வானோலியில் ஐயப்பமார் பாட்டு, பஜனை, எல்லம்  உண்டு  !கடவுள் மறுப்பு பற்றி கிடையாது ! ஊடகங்கள், பத்திரிகைகள், எல்லாம் கடவுள் உண்டு என்று பிரச்சாரம் செய்ய முடியும் ! நாத்திகர்கள் பலவீனமானவர்களாக்கப்பட்டு விட்டர்கள் !  வெறும் பர்ப்பன எதிர்ப்பு என்பது பகுத்தறிவு வாதம் அல்ல ! புத்தியோடு பிழையுங்கள் தோழர்களே! 















2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆம் ஐயா, தமிழகத்தில் கடவுள் மறுப்பு என்பது பார்ப்பண எதிர்ப்பாகத்தான் மாறிவிட்டது.

இராய செல்லப்பா said...

கடவுள் மறுப்பு என்பது "இந்துக் கடவுள் மறுப்பு" என்று சுருங்கிவிட்டது அதைவிட ஆபத்தான விஷயம். இவர்களில் யாரும் "கிறிஸ்து இல்லை" என்றோ, "அல்லா இல்லை" என்றோ சொல்லும் தைரியம் அற்ற கோழைகள் என்பது நன்கு தெரிந்த விஷயமே! ஏனென்றால் அவர்களின் வோட்டுக்கள் இவர்களுக்கு வேண்டுமே!