Friday, December 13, 2013

கம்யுனிஸ்ட் கட்சியும் பார்பனீயமும்......!

ஒன்றாயிருந்த கம்யுனிஸ்ட் கட்சி 1964ல் இரண்டாகப் பிரிந்தது ! கிட்டத்தட்ட 1956 லிருந்து கட்சிக்குள் தத்துவார்த்தப் பிரச்சினையில் விவாதம் நடந்து கொண்டிருந்தது !

புரட்சி, அதன் தலமை என்ற விவாதம் ஒருபக்கம் ! தேசீய ஜனனாயகமா மக்கள் ஜனனாயகமா என்ற கேள்வி ஒருபக்கம் !

தேச பகத முதலாளிகளையும் இணைத்துக்கொண்டு ஆட்சி செய்யலாம் எனபது ஒருபக்கம் ! தொழிலாளர்கள் தலமையில் முதலாளிகள் ,நிலப்பிரபுக்கள் கொண்ட ஆட்சி என்று ஒரு பக்கம் !

Capitalist path ,non capitalist path என்ற சர்வதேச விவாதம் ஒரு பக்கம் ! தொழில் வளர்ச்சியே இல்லாத நாடுகளில் குறிப்பாக நிலப்பிபுத்துவமே இன்னும் பூரணத்துவம் பெறாத நாடுகளில் நிலப்பிரபுத்துவம் எற்பட்டு, முதளாளித்துவம் வந்து தோழிலாளி வர்க்கம் உருவாகி புரட்சி எற்படும் வரை காத்திருக்காமல் நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவ அரசுக்கு போகாமல் சொசலிச அமைப்பை உருவாக்கக்கூடாதா என்ற விவாதம் ஒருபக்கம் !

அன்று கட்சி அணிகள் இது பற்றி ஏராளமான குறிப்புகளை படித்து விவாதித்து தெளிவு பெற்றாக வேண்டிய நிலையில் இருந்தனர் !

இந்த நிலமையில் தான் Defence of India Rules (D.I.R) என்று போட்டு கட்சியின் இரண்டாம் மட்ட தலமையை காங்கிரஸ் அரசு கைது செய்து அடைத்தது !

அப்போது தமிழக தலைவ்ர் ஒருவரிடம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று கேட்கப்பட்டது! 

"அது ஒன்றுமில்லை ஐயா ! கேரளத்துப் பாப்பானுக்கும், மஹராஷ்ட்ற பாப்பானுக்கும் நடக்கும் சண்டை "என்றார்!!

எவ்வளவு எளிமையான (முட்டாள் தனமான ) விளக்கம் !!

ட்சியும் ,பார்ப்பனீயமும் .......!!!

1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு ஐயா...