Sunday, January 05, 2014

"எங்கே அவர்கள் " நாடகமும் ,

வேல . ராமமூர்த்தியும் ...........!!!


சுமார் முப்பது வருடமாவது இருக்கும் ! மதுரை மாவட்டம் நாடகப்பட்டறை ஒன்றை திருப்பரங்குன்றத்தில் நடத்தியது !வங்கி ,இன்சூரன்சு ,மத்திய மாநில அரசுகள்,தனியார் நிறுவனங்கள் என்று மாநிலம் முழுவதும் இருந்து ஊழியர்கள் வந்திருந்தனர் !
 பட்டறையை நடத்தும் பொறுப்பு அளிக்கப்பட்ட குழுவில் நானும் ஒருவன் !மூன்று  நாள் பட்டறை ! குழுக்கள் பிரிக்கப்பட்டது 1 அவர்களுக்குள்ளேயே விவாதித்து .கதை தேர்ந்த்தெடுத்து ,எழுதி,நாடகம் தாயாரிக்க வேண்டும்!

என்னுடைய குழுவில் தபால்தந்தி இலாகாவில் பணியாற்றும் ராமமுர்த்தி இருந்தார் ! குழு உறுப்பினர்கள் கதைகளைச்சொன்னார்கள்! என்பங்கிர்க்கு   நானும் சொன்னேன் ! அதனை நாடகமாக உருவாக்க முடிவாகியது !

திரைப்பட நடிகர் மனோஜ் குமார் அப்போது தூர்தர்ஷனில் சுதந்தி போராட்டகால நிகழ்ச்சிகளை தொடர் நிகழ்ச்சியாக  நடத்தி வந்தார் ! ஒவ்வொரு நாளும் ஒரு கதை !அந்தக் கதைகளில் ஒன்றைத்தான் சொன்னேன் !
குஜராத்தில் உள்ள அகமாதாபாத்தான் களம் ! மில் தொழிலாளிகள் அதிகம் உள்ள  நகரம் ! சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம்  ! போராட்டக்காரர்கள் ரகசியமாக சில பணிகளைச் செய்து கொண்டு 
இருந்தனர் ! ரமாகாந்த் தலைவர் ! போலீஸ் மோப்பம் பிடித்து விட்டது ! போலீஸ் வளையத்திளிருந்து அவரை தொழிலாளி ஒருவன் தப்பிக்க வைக்கிறான் ! அவரை கடற்கரை பகுதிக்கு அனுப்பிவிடுகிறான் ! இஸ்லாமிய மீனவர்கள் நிரம்பிய கிராமம் ! சுதந்திர போராட்டத்திலீடுபாடு கோண்ட முஸ்லிம் மீனவர் வீட்டில் அவர் தங்க  ஏற்பாடாகியுள்ளது !

போலிஸ் மோப்பம் பிடித்து விடுகிறது ! வீடு வீடாக கிராமத்தை சொதானை செய்கிறது ! முஸ்லீம் மீனவர் தன மனைவியிடம் அவரை எப்படியாவது காப்பற்ற வேண்டும் என்கிறார் ! அவரை பின் வாசல் வழியாக படகுத்துறைக்கு அனுப்பி விட்டு முன் கதை சாத்தி வைக்கிற்றர் ! போலிஸ் அவர்கள் தெருவுக்கு வரும் அரவம் கேட்கிறது ! கணவனும் மனைவியும் அடித்தாலும்,கொன்றாலும் எதையும் சொல்லக்கூடாது என்று முடிவு செய்கிறார்கள் !அப்போது தான் அந்ததாய்க்கு ஐந்து வயது மகள்  நினைவு வருகிறது ! குழந்தை  அவள்! பயந்து சொல்லிவிட்டால் !

அவர்கள் வீட்டில் பெரிய மரப் பெட்டி உள்ளது ! பாத்திரம் பண்ண்டங்களை வைக்க உதவும் !அதற்குள் சிறுமியை உட்காரச் சொல்லி மூடிவிடுகிறார்கள் ! சந்தேகம் வரமலிருக்க மேலே ஒரு சாக்கு மூட்டையையும் வைத்த விடுகிறார்கள் !

போலீசாரை சமாளித்து விடுகிறார்கள் ! மீனவர் தலைவர  ரமாகாந்தை   படகுத்துறையிலிருந்து அழைத்து வருகிறார் ! அவர் தன ஜோல்னா 
பையிலிருந்து ஒரு ஆப்பிளை எடுத்து" இந்தா இஸ்மாயில் ! உன் மகள் சாயிராவிடன் ம் கோடு "என் கிறார் !

நினவு தட்டிய கணவனும்மனைவியும் அவசர அவசரமாக மரப் பெட்டியை திறக்கிறார்கள். அதற்குள் சைரா தூங்கிக் கொண்டிருக்கிறாள் நிரந்தரமாக மூச்சுத்திணறி !

ரமாகாந்த்!  ,இஸ்மாயில் !சாயிரா !

எங்கே அவ்ர்கள் ?

என்ற கேள்வியோடு முடிகிறது !

இதனை நாடகமாக எழுதி இயக்கம் பொறுப்பு ராமமூர்த்திக்கு கொடுக்கப் 
படுகிறது !
 
இரவோடு இரவாக நாடகம் எழுதப்பட்டது ! மறுநாள் நாடகத்தை இயக்கும் பொறுப்பும் அவரூக்குத்தான் ! இதில் இஸ்மாயிலாக பழநியைச்ச்செர்ந்த
சோ.முத்து மாணிக்கம் நடித்தார் !

பட்டறையில் வந்த மிகச்சிறந்த நாடகமாக ராமமூர்த்தி இயக்கிய" எங்கே அவர்கள் "நாடகம் சிறப்பிக்கப் பட்டது ! 

ராமமூர்த்தான்  பின்னாளில் மிகச்சிறந்த எழுத்தாளரான வேல.ராமமூர்த்தி ஆனார் !

"மதயானை கூட்டம் " என்ற திரைப்படத்தின் மூலம் பத்திரிகைகள் பாராட்டும் நடிகரானார் !

அவருக்கு என் பாராட்டுகள் !!!



























































































 









































































































































































 


























 








































































போலீசாரை சம்மளித்து அனுப்பிவிடுகிறார்கள் ! 

3 comments:

hariharan said...

நான் மதயானைக்கூட்டம் பட்ம் பார்த்தெபோது வேல.ராமமூர்த்தி எப்படி இருப்பார் என்று தெரியாது, வேலுத்தேவராக நடித்தவர் தோழர்.எஸ்.ஏ.பெருமாள் மாதிரியே இருந்தார், அவர்தானோ என்று நினைத்திருந்தென்.அதன் பின்பு தான் தெரிந்துகொண்டென் அவர் வேல.ராமமூர்த்தி.

'பரிவை' சே.குமார் said...

திரு.வேல.ராமமூர்த்தி அவர்களைப் பற்றிய பகிர்வு அருமை...

அவரின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.

வாழ்த்துக்கள்.

பா. அசோக் said...

எங்கே அவர்கள் நாடக ஸ்கிரிப்ட் தேவைப்படுகிறது. வேல ராமமூர்த்தியிடம் இல்லை தங்களிடம் உள்ளதா! இல்லையெனில் கதாபாத்திரங்கள், கதையின் சுருக்கத்தை அனுப்ப முடியுமா?