Sunday, January 12, 2014



" உன்னைப் போல் ஒருவன் " 


திரைப்படம் பற்றி .......!!!


"ஒரு புதன் " கிழமை என்று இந்தியில் ஒரு திரை ப்ப்டம் வந்தது ! அதைக் "கசாமுசா " என்று காப்பியடித்து செய்யப்ப்ட்டாதாக சொன்ன படம் கமல ஹாசனின் "உன்னைப் பொல்  ஒருவன் " ! நான் அதைப்பற்றி எழுதவில்லை !


60 களில் ஜே,கே எழுதிய குறுநாவல் ,அவரால் திரைப்பட மாக்கப்பட்டது ! அந்த ஆண்டு சிறந்த பிராந்திய திரைப்படமாக அகில இந்திய அளவில் விருது அளிக்கப்பட்ட படம் அது !


லாகர்னே விழாவிலும் விருது அளிக்கப்பட்டது !


அன்றைய தமிழ்நாட்டு திரைப்பட விசுவாசிகள் அது திரை  அரங்குகளில் ஓடாமல் பார்த்துக் கொண்டார்கள் ! ஏனென்றால் ஜெயகாந்தன் என்ற கம்யுனிஸ்ட் இயக்கிய படம் !


அப்போது நான் மதுரையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்! மதுரை எல் .ஐ.சி.ஊழியர்கள் அதன மதுரையில் ஒருகாட்சி,ஒரே ஒரு அரங்கிலாவது திரையிட வேண்டும் என்று முடிவு செய்தனர் !


அவர் களுடைய மன மகிழ மன்றத்தின் மூலம்  திரையிட ஏற்பாடாகி யது ! 

அந்த மன்றத்தின் பொருளாளராக அப்போது நான் இருந்தேன் !


மதுரை சென்றல் தியேட்டரில் திரையிட ஏற்பாடகி  டிக்கெட்டுகளை  விற்றோம் !

தியட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்த பொது விற்பனை வரி  இலாகாவிலிருந்து சோதனை செய்ய வந்து விட்டார்கள் !


எங்களைப் பிடிக்காத" திராவிடக் குஞ்சுகள்" மொட்டை எழுதி சதி செய்துள்ளனர் என்பதை பின்னர் புரிந்து கொண்டோம் !


அப்போது ரெவின்யு போர்டு மெம்பராக சபா நாயகம் என்பவர் இருந்தார் ! அவருடைய சகோதரர் எல்.ஐ.சி.யில் முக்கிய அதிகாரியாக இருந்தார் !


எங்களுக்கு கேளிக்கை  வரி ,கம்பவுண்டிங்க் வரி என்று கிட்டதட்ட  3000 /-ரூ கட்டச் சொன்னர்கள் ! நாயாய் அலைந்து நடுத்தெருவில் நின்று முறையீடு செய்தபின் அதனை 1190 /- ரூ  யாக  ஆக் கினார்கள் !    


எங்கள் மனமகிழ் மன்ற விரிவாக்கத் திட்டத்திற்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் நாங்கள் 1292 /-ரூ லாபம் கிடைக்கும் என்று நம்பினோம் ! மிச்சம் 102 /- ரூ யோடு தப்பினோம் ! 


"உன்னைப் போல் ஒருவன் "மிக அற்புத மான படம் ! 


வாழைப்பழ காமிக்க புகழ் வீரப்பன் அதில் நடித்தார் ! அவர் கம்யூணிஸ் கட்சி உறுப்பினர் எப்பதால் அந்த மகாகலைஞனை ஒதுக்கி வைத்தார்கள் ! 


மற்றொரு நடிகர் பிராபாகரன்  ! குருவி ஜோசிக்காரனாக வந்து சிறப்பாக நடித்தவர் ! 


இந்தப் படத்திற்கு  இசை  அமைத்தவர் வீணை பாலசந்தர் அவர்கள் !


கதா நாயகியாக நடித்தவர் காந்திமதி !ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகை !

வேறொரு பிரபல நகைச்சுவை நடிகையின் ஆதரவாளர்கள் அவரை வளர விடாமல் தடுத்தார்கள் !


அன்று இடது சாரி நடிகர் களுக்கு ஆதரவாக இருந்தவர் காலம் சென்ற S ,V .சஹஸ்ரநாமம் அவர்களும் அவருடைய சேவா ஸ்டெஜும் தான் ! 


இந்த மூன்று  கலைஞர்களும் அந்த குழுவை அடைந்தனர் ! 


சேவா ஸ்டேஜ் குழு நடத்திய "வடிவேல் வாத்தியார் " நாடகத்தில் அந்த மூவரும் நடித்தது இன்னமும் கண்முன்னால்  நிற்கிறது !


இன்று தமிழ் திரை  உலகை மாற்ற இளைஞர்கள் படை ஒன்று வளர்ந்து வருகிறது !


அவர்களின் முன்னோடிகளை அறிமுகப்படுத்தவே இந்த இடுகை !!!

\


3 comments:

அப்பாதுரை said...

ரொம்ப நாளாக இந்தப் படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. டிவிடி கிடைக்குதா?

இளைஞர் படை வருதா? கூடவே இருபது பேர் பொருத்தமே இல்லாத டிரஸ் போட்டுக்கிட்டு இடுப்பை உசத்தி உசத்தி ஆடிக்கிட்டே வராங்களானு சொல்லுங்க..பயம்ம்ம்ம்மா இருக்கு.

'பரிவை' சே.குமார் said...

ஒரு நல்ல படத்தைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

புதிய செய்திகள் ஐயா
நன்றி