Friday, May 09, 2014

"ஆதி சங்கரா " திரைப்படமும் -

சிருங்கேரி மடமும் .....!!!


கர்நாடக மாநில திரைப்பட இயக்குனர் மறந்த G .V .Iyer  சமஸ்கிருத மொழியில் தயாரித்த படம் "ஆதி சங்கரா "(1983) ! பலவிருது களையும், பாராட்டுகளையும்பெற்ற படம் ! அந்த படம் பற்றி தனியாக ஒரு இடுகை போட நினைக்கிறேன் ! வரும் !

ஆதி சங்கரரின் தத்துவத்தில் மிகவும் முக்கியமானது "அத்வைதம்" !" நாம் வேறு ! இறைவன் வேறு இல்லை ! நம் "உள்" இருக்கிறான் ! நமது "ஆத்மா"  என்பது அதன் துகள் ! நாம் அத்துணை பேரும் அதன் வெளிப்பாடு ! " 
என்பார்கள் !

இதனை ,பரப்ப சங்கரர் அமைத்த மடங்கள் நான்கு ! வடக்கே பத்ரி மடம், கிழக்கே பூரி, மேற்கே துவாரகை,தெற்கே சிருங்கரி என்று அமைத்தார் !

"ஆதிசங்கரர்" திரைப்படத்தில்ஒருகாட்சிவரும்பத்திரிகைகளும்,விமரிசாகர்களும்வெகுவாக பாராட்டிய காட்சியாகும்   அது !

 சங்கரர் யாத்திரையாக வருவார்  ! எதிரே  சுடுகாட்டினை கவனித்துக் கொள்ளும் புலையன் வருவான் ! சங்கருடைய சீடர்கள் "தள்ளிப்போ -தள்ளிப்போ " என்று அவனைப்பார்த்து அலறுவார்கள் ! அவன் சட்டை செய்யாமல் வருவான் !சீடர்கள் அவனை த்ள்ளிப்போகச் சொல்லும்படி சங்கரரிடம் வேண்டுவார்கள் !  

புலையனை நோக்கி "தள்ளிப் போ " என்கிறார் சங்கரர் !

" யார் தள்ளிப் போக வேண்டும்? ! இந்த உடம்பா ? இல்லை இந்த உடம்பிற்குள் இருக்கும் ஆத்மா வா ? " என்று பதில் கேள்விகேட்கிறான் புலையன் !

A wonderful and poignant scene in the film !

சங்கர மடங்களின் தலவர்கள் தங்கள் கைகளில் நீளமான ஒரு குச்சியை வைத்திருப்பார்கள் !அதன் நுனியில் வெள்ளை துணி கட்டப்பட்டிருக்கும் ! அதனை "அன்னக் கொடி "என்பார்கள் !

அந்தக் கோடி இருக்குமிடத்தில் யார் வந்தாலும் உணவு  அளிக்கப்படும் !

சிருங்கேரி  மடத்திலும் உணவு அளிக்கப்படுகிறது !

பிராமணர்களுக்கு தனியிடத்தில் !

மற்ற வர்களுக்கு  வேறிடத்தில் !
( உடுப்பியில் பிராமணர்களுக்கு தனி இடத்தில் கோவில்களில் உணவு 
 அளிக்கப்படுவதை  எதிர்த்து பங்களுருவில் மார்க்சிஸ்ட் கட்சி "பந்தி பேத"த்தை எதிர்த்து  போராடும் செய்தியைப் பார்த்தேன் )











1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தனி இடத்தில் உணவு
மனம் ஏற்க மறுக்கிறது ஐயா