Monday, June 09, 2014

"சங்கமித்ரா"வும் 

"பெரியாரிய"த்தின் போதாமையும் ...!!!

"பாவடை" ராமமூர்த்தி  சங்கமித்ராவாக பரணாம வளர்சி அடையுமுன்பே என் நண்பன் ! அவன் பெரியார் சீடனாக மாறவதற்கான அவனின் வாழ்க்கை சூழல் மிக முக்கியமானதாகும் ! கூர்மையான புத்தியும், கம்பிரமான வாழ்நிலையையும் விரும்பியவன் அவன் ! 

தஞ்சை மாவட்ட நிலப்பிரபுத்துவ வாழ்க்கை முறையின் அழுத்தம் அவனை முற்றிலுமாக மாற்றியதில் ஆச்சரியமில்லை ! "படையாச்சி" வகுப்பைச் சேர்ந்தவன் அவன் ! சாதீய அடுக்கில் வட மாவட்டங்களில் "வன்னியர் " என்று அழைக்கப்ப்படுவோர் தஞ்சையில் இப்படி அழைக்கப்படுவார்கள் ! தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு அடுக்கு முன்னாலிருத்தப்பட்டவர்கள் ! தாழ்த்தப்பட்டவர்கள் நேரடியாக தீண்டாமைக்கு ஆட்பட்டவர்கள் !  இவர்கள் மறைமுகமாக ஆட்பட்டவர்கள் !என்னிடம்கதைகதையாகச்  சொல்லி        யிருக்கிறான் !

பண்ணையார் வீட்டு விருந்து ஒன்றில் நடந்ததைச் சொல்லியிருக்கிறான் ! அவர்கள் வீட்டி விருந்தில் தோட் டத்திலுள்ள களத்தில்தான் இவர்களுக்கு பந்தி வைப்பார்கள் ! பின்வாசலில் உள்ள தோட்டத்தில் சமையல் ! இவனோடு இவனுடைய உறவினர் பையன் நான்கைந்து வயது  சென்றிருக்கிறான் ! கத்தரிக்காய் ,வாழைக்காய் என்று காய்கறிகள் அரிந்து குவிக்கப் பட்டிருக்கின்றன !வெந்த முட்டைகள் உரிக்கப்பட்டு கூடை கூடையாக குவிக்கப்   பட்டிருக்கின்றன ! இவன் கூட வந்த சிறுவன் " ஐ! எம்பிட்டு முட்டை "என்று ஒடி எடுக்கப் போயிருக்கிறான் ! "ஏய் ! தொடாத!"என்று ஒரு அதட்டல் ! சிறுவன் நடுங்கி முகம் வெளிற கண்கள் கசிய  விக்கித்து நின்றுவிட்டான் !
" சாமா! எனக்கு அப்போது பத்துவயதிருக்கலாம் ! புரிந்தும் புரியாத வயது !இன்று ஐம்பத்து எட்டு வயதாகிறது ! அந்த குழந்த முகத்தில் தெரிந்த சாதீயத்தின் கோர முகத்தை நான் இன்னும் மறக்கவில்லை "
இதற்கு காராணம் சாதீயம் ! அதை கொண்டுவந்த மனுனீதி ! அதை உறவாக்கிய "பார்ப்பனீயம் " அதைஒழித்தால் தான் எங்களுக்கு மரியாதையான வாழ்க்கை " ! என் தொடையில் "கிள்ளி "னான் 
ஏதாவது முக்கியமான நியாயமான வாதத்தை சொன்னான் என்றால் இப்படிசெய்வது அவன் வழக்கம் !  
"சரிப்பா ! அதுக்குத்தான் ஸ்ரீரங்கம் பாப்பான் பூணுல அறுத்தீங்களே !"
"ஏன் ? நீ போட்டுக்கலை ! " முதுக தடவினான் ! "போட்டிருந்தா அதையும் அறுப்பேன் !"
"ஏன் ! ராஜாஜி  பூணுல அறுக்கவேண்டியது தானே !" எழுந்து விட்டேன் ! என் தொடையில் மீண்டும் கிள்ளி விடுவானோ என்று பயந்து !

குடும்பம் உறவினர் என்றால் கொள்ளைபிரியம் அவனுக்கு ! அவ்ந்தந்தை,தாத்தா,பாட்டன், பூட்டன் என்று இருபத்தி ஒரு தலமுறையச் செர்ந்தவர்கள் விவரத்தசிசெகரித்து குடும்பமரம் ( Familytree ) ஒன்றை தயாரித்திருந்தான்  ! "சாமா! எனக்குப் பிறகு ... !" என் தோளில் சாய்ந்து கொண்டான் !ஆதுரமாக அவன் முதுகில் தட்டி கொடுத்தேன் !

அவன் மன அமைதியை,குடும்ப வாழ்க்கையை, நிம்மதியை புரட்டிப் போட்ட சங்கதி! அறிவுபூர்வமாக சிந்தித்து அதற்கும் ஒரு விடை தேடினான் ! 

அவன் P .ராமமுர்த்தி ! அவன் தந்தை பெயர் பாவாடை ! குலச் சாமி பெயர் !"மேல் சாதி சிறுவன் கூட "எ! பாவாடை "என்றுகூவுவான் ! 

P .ராமமூர்த்தி தன பெயரை "பாவாடை ராமமூர்த்தி "என்று அறிவித்தான் ! ஸ்டேட் வங்கியில் asst Gl manager பதவியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றான் !

அப்போதெல்லாம் பொதுத்துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகிடையாது ! மேல் சாதி ஆதிக்கம் கொடிகட்டி பறந்த காலம் ! போராடி, வெறுத்து வெளியேவந்தவன் பாவடை !

பெரியாரின் இறை மறுப்புக்கொள்கையில் ஈடு பாடு கொண்டவன் ! நாத்திக வாதம் என்பது பிள்ளையார் சிலையை உடைப்பதோ ,ராமருக்கு செருப்பு மாலை அணிவிப்பதோஅல்ல என்று வாதிடுவேன் ! " இல்லை ! அது தெய்வ நம்பிக்கையை குறைக்க உதவும் "என்பான் ! "நீ அய்யரு ! அப்படிதான் பேசுவ ! என்பான் !

"ஏம்பா ! "கோரா " ஒரு நாத்திகர் தனே !?"

"அற்புதமான நாத்திகர் ! உலகத்திலேயே முதல் நாத்திக மாநாட்டை நடத்தியவர் !"

"கொபராஜு ராமச்சந்திர ராவ் என்ற "கோரா " சுத்தமான பார்ப்பனர் தானே !"

"ஆ" வென்று கத்திவிட்டேன் ! தொடையை தேய்த்துக் கொண்டேன்  !

"சாமா ! உனக்கு பெரியாரை  பிடிக்காதா  ? " 

"என் பிடிக்காது ! பொது வாழ்க்கைல முக்காதுட்டு தனக்காக செக்காதவர் ! அது மட்டும் போதாதே ! எதுக்கெடுத்தாலும் பாப்பான் பேரை சொல்லிசம்மாளிக்கறது தன பிடிக்கல !"

"என் ?நீ பாப்பான் கறதாலயா ?"

"நீ எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோ ! வியட்நாம்ல அமெரிக்க காரன் குண்டு போட்ட தமிழ்நாட்டு பாப்பாந்தான் காரணம்னு சொன்ன எப்படிப்பா !"

"என்னதான் சொல்லவர! " 

"போதாது "

"பெரியாரியம்போதாது  ங்கற " 

"ஆமா" 

"இட்டு நிரப்ப நீங்களும் வாங்க !"

"தானாக ஊறும் "கிணற்று நீர்" பெரியாரியம் " 

"மார்க்சீயம் ? "

"அதுமகா சமுத்திரம் ! கிணற்றுக்குள் அடங்காது ! "

பாவடை ராமமூர்த்தி என்ற சங்கமித்ரா மறைந்து விட்டான்  ! இருந்திருந்தால் விவாதம் தொடர்ந்திருக்கலாம் ! அவனை .........!






1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எத்துனை பயன்மிகு விவாதம்
நன்றி ஐயா