Thursday, August 14, 2014

தமிழ் கற்பது எளிமையானது ...!!!


நான் பலமுறை டெல்லி சென்றுள்ளேன் ! சில முறை டெல்லி தமிழ்ச் சங்கம் சென்றுள்ளேன் ! அதில் மிக விரைவில் தேர்தல்  நடக்க விருக்கிறது ! அது பற்றி எழுதப்போவதில்லை !

ஒரு முறை அவர்கள் அலுவலகம் சென்ற போது ஒரு சிறிய அறையில் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் !  பீஹார்,உத்திர பிரதேசம்,ஹரியானா, ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த மாணவ மாணவிகள் ! சுமார் பத்தி பேர் இருக்கலாம் !

எல்லாருமே ஐ.எ.எஸ் பரீட்சை எழுத்து பவர்கள் ! பணியில் சேர விருப்பமாக தமிழ் நாட்டை தேர்ந்தெடுத்துள்ளார்கள் ! வெற்றி பெற்றால் தமிழகத்தில் பணியில் சேர விரும்புபவர்கள் ! முன்கூட்டியே தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள் !

இதே போல் கல்கத்தாவில், மும்பையில் சில தமிழ் அமைப்புகள் நடத்துவதாக தெரிந்து கொண்டேன் !

சமீபத்தில் நாகபுரியில் ஒரு நண்பர் அவருக்குத் தெரிந்த பையனுக்கு தமிழின் ஆரம்ப பாடங்களை சொல்லித்தர முடியுமா ? என்று கேட்டிருந்தார் ! அவருக்கு ரயில்வே தொழிலாளி ஒருவரை அறிமுகப்படுத்திவிட்டேன் !

வடநாட்டுக் காரர்களுக்கு தமிழ் மொழி பற்றி  மிக வியப்பும் ஆச்சரியமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் ! அவர்களுடைய வரி வடிவம் "சதுர்வர்க்கம் " !  க,க்க ,gக ,gg க என்று நான்கு எழுத்துக்கள்  உண்டு ! அதனால் திணறுவார்கள் ! "அத்தான் "என்பதையும் "வந்தான்" என்பதையும் உச்சரிக்க தயங்குவார்கள் ! எந்த இடத்தில எந்த எழுத்தினை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் அவர்கள் குழம்பி போவார்கள் ! 

ரயில்வே தொழிலாளி  அனுபவம் மிக்கவர் ! அந்தப்பையனுக்கு வரி வடிவம் சொல்லிக் கொடுக்கவில்லை ! முதலில் பேச கற்று கொடுத்தார் ! மழலையாக ஆரம்பித்து பேச ஆரம்பித்தவன் தயங்கித் தயங்கி சரளமாக கொஞ்சம் ஆங்கில வார்த்தைகளை கலந்து பேச ஆரம்பித்தான் ! 

ஒரு கட்டத்தில் அவனுக்கு ஒரு சிலேட்டை கொடுத்து எழுத சொன்னார் ! வடமொழியில் க,ச,ட ,த.ப என்ற உச்சரிப்புக்கு நான்கு எழுத்துவேண்டும்! நான்கு உச்சரிப்புக்கு மொத்தம் இருபது எழுத்துக்களை கற்றுக் கொள்ள வேண்டும் ! தமிழில் ஐந்தே எழுத்து தான் ! "அத்தான்" என்றாலும் அதே தான் ! "வந்தான் " என்றாலும் அதே தான் ! பேச்சுப் பழக்கத்தில் உச்சரிப்பு மாறும் ! பழகப்பழக ஒரே எழுத்தாக இருந்தாலும் பழகிவிட்டால் சரியாகிவிடும் !

அந்தப் பையன் மகிழ்ச்சியில் " it is easy to learn tamil " என்று கூவினான் !

அதை தமிழில் எழுதி காட்டு என்றேன் !

எழுதினான் ! 

"தமிழ் கற்பது எளிமையானது " 

  

!


2 comments:

அ. வேல்முருகன் said...

எளிதும் இனிமையும்

Unknown said...

எளிதாக புரியும்படி கற்று கொடுப்பதற்கு உண்மையில் நல்ல திறமை வேண்டும்