Sunday, August 31, 2014

விநாயக சதுர்த்தியும் ,

நானும் ........!!!


நான் குடியிருக்கும் அடுக்ககத்தில் 70  குடும்பங்கள்  உள்ளன ! கூட்டாஞ்சோறு  பொங்குவது மாதிரி தலைக்கு 500/-​ரூ வசூல் செய்து இந்த ஆண்டு கொண்டாடுகிறார்கள் !

காலையிலும் ,மாலையிலு ம்வழி பாடு இருக்கும் ! து ணைவியார் செல்வார் ! பொறுப்பாளர் "சார் வரவில்லையா ? " என்று கேட்டுள்ளார் !

"இங்கு எல்லாருமே இந்துக்கள் ! ஒன்றோ இரண்டோ கிறிஸ்துவர்களும்,இசுலாமியர்களும் இருந்தால் என்ன செய்வீர்கள் "

"அதிகமா இருக்கும் இந்துக்காளொடு சேர வேண்டியது தான் ! சார் என்ன நாத்திகரா ? "

அம்மையார் இல்லை என்றும் சொல்லாமல் இருக்கு என்றும் சொல்லாமல் மையமாக தலை  அசைத்துவிட்டு வந்துள்ளார் !

"இந்தியாவில் நாத்திகர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் ? " வீட்டிற்கு வந்ததும் என்னிடம் கேட்டார் !

1954-57 ம் ஆண்டுகளில் மேட்டூரில் பணியாற்றினேன் ! 1951ம் ஆண்டு  சேலம்  மாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் 50000  பேர் தங்களை நாத்திகர்கள் என்று பதிவு செய்திருந்தார்கள் !

61  ம் ஆண்டில் இதுமிகவும் குறந்து விட்டது ! சமூக செய்ல்பாட்டாளர் ஒருவரிடம் விசாரித்த் பொது இளம் தலை முறையினரை கவர ஏற்பாடுகள் இல்லை ! இருப்பவர்களையும் தத்துவார்த்த போதன செய்வது குறைந்து விட்டது ! மூத்தவ்ர்களை மரணம் ஆட்கொண்டுவிட்டது ! என்று விளக்கினார் ! 

இன்றைய கணக்கில் இந்தியாவில் சுத்த சுயம் பிரகாசமான நாத்திகர்கள் 1,00,000 பேர் இருக்கலாம் என்று கருது கிறேன் ! கிட்டத்தட்ட 120 கோடி மக்கள் தோகையில்  இது கணக்கிலேயே வராது ! 

அப்படியானால் மிச்சமுள்ளவர்கள் ஆத்திகர்களா ?  பளிச்சென்று பதில்  கூற  முடியாத கேள்வி இது !  

இறை நம்பிக்கை நிரந்தரமாக மனிதனை வசப்படுத்துவது இல்லை ! அவன் அவ்வப்போது பல கேள்விகளுக்கு தன்னை உட்படுத்தி  கொள்கிறான் !

"ஆண்டவன் ஆகாசமத்தில் தூங்கு கிறானே !
மாந்தரெல்லாம் மாநிலம் மேல்  ஏங்குகின்றாரெ !

நம் அனைவருக்கும் அவன் ஒரு தந்தை என்றாலே !
சிலர் கொடுப்பவர் சிலர் எடுப்பவர் என்று இருப்பதெதாலே !

கூன்,குருடு , நொண்டி ,செவிடு,ஊமை பிறப்பதெதாலே !
நிறை குறைகளுக்கோ இதுவரைக்கும்பதிலும் தெரியலே !!

என்று தமிழ்க் கவிஞன் கேட்டான் !

இதற்கும் பதில் சொல்லி விட்டர்கள் !"மறு பிறவி " என்று கூறிவிட்டார்கள் ! அந்த சின்னஞ்சிறு சிசு தன முற்பிறவியில் செய்த தவறின் பலனை இந்த பிறவியில் அனுபவிக்கிறது என்று விளக்கினார்கள் ! விளக்கினவனுக்கு பாதிப்பில்லை  ! பெத்தவனுக்கு ... !! இறைவன் ஏன் இந்த குழந்தையை இப்படிப் படைக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி விடை கிடைக்காமல்  திக்குமுக்காடுகிறான் ! அவன் நம்பிக்கை ஆட்டம் காணுகிறது !!   இறைவன் இல்லையோ என்று சந்தேகம் கொள்கிறான் !

உன் அனுபவத்தில் இறைவன் மீதான நம்பிக்கை சிதறும் போது "இறைவன் இல்லை " என்றுஓங்கி சொல்லவேண்டியது தானே ! சொல்ல பயப்படுகிறான் ! "ஒருவேளை  இருந்து தொலைத்துவிட்டால் "  !கோபபட்டு தண்டித்து விட்டால் !இவர்களை agnostics என்கிறார்கள் ! இவர்கள் தான் 99% சதம் உள்ளனர் ! இவர்கள் தெளிவு பெறாமல் குழப்பி வைப்பது தான் இந்த பூஜை, விழாக்கள் எல்லாம் ! 

சுத்த சுயம் பிரகாசமான் ஆத்திகர்கள் மிகக்குறைவு ! " என்னைப் பொறுத்தவரைகடவுள் இருக்கறார் ! நான் நம்புகிறேன் ! " என்று இருப்பவர்  ஆத்திகரே !

"என் வாழ்க்கையை நடத்த கடவுள் தேவை இல்லை " என்பவர் நாத்திகரே !கடவுளே இல்லை  எனும் நாத்திகனுக்கு கடவுளோடு சண்டைபோட  வெண்டிய அவசியமில்லை !

 "கடவுள் உண்டு " என்பவன் அவன் நம்பிக்கையை விடப் போவதில்லை ! அவனுக்கு எவரோடும் பகைமை இல்லை !

இந்த இரண்டும் கெட்டான்கள் தான் குழப்பி குட்டிசுவராக்குகின்றன !!!!!!!
5 comments:

இரா எட்வின் said...

அருமை தோழர்

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை ஐயா
இரண்டும் கெட்டான்களால்தான் பிரச்சினையே

sury Siva said...

atheist, theist, agnostic

இம்மூவருமே தாம் எண்ணுவதற்கு உகந்த வகையில் தமது வாழ்க்கையினை நடத்தி முடித்து கொள்ளலாம். எந்த வித பிரச்னையும் இல்லை. இருக்க இடமும் இல்லை.இருப்பினும் இந்த இரண்டும் கெட்டான்கள் என்று நினைப்பவர்கள் யாவர் என்று பார்த்தால் ஆத்திக உணர்வுகளுக்கும் நாத்திக உணர்வுகளுக்கும் இடையே தடுமாறுவர்கள் மட்டுமே.வாயார உண்டபேர் வாழ்த்துவதும் நொந்தபேர் வைவதும் எங்கள் உலக வாய்பாடு எனும் தாயுமானவர் அருட்சொல் படி,உலக இயற்கை மனித இனம் தோன்றியது முதலே மட்டுமே. இருந்து வருவது வெள்ளிடை மலை.

பிரச்சினை ,ஒரு ஆத்திகரோ அல்லது நாத்திகரோ தன்னை, தன்னை மட்டுமே அறிவாளிமற்றவர் , அதாவது தாம் எண்ணியவற்றை, தான்

எண்ணியவாறு ஒத்துக்கொள்ளாதவர் அறிவிலி, அரை வாளி என்றுநினைப்பது, அதற்க்கு ஏற்றவாறு சொல், செயல் புரிவது ஒன்றே ஆகும்.நிற்க.வினைப்பயன் படித்தான் ஒருவன் வாழ்வு இருக்கும் என்று

நம்புபவருக்கு ஒரு வார்த்தை.உங்களது கொள்கை படி, ஒருவன் ஆத்திகனாக இருப்பதும், நாத்திகனாக இருப்பதுமே அவனவன் தலை எழுத்து தானே.இரண்யன் தான் இறைவனை , இறை இல்லை என வாழவேண்டும் எனவே வரம் கேட்டு வந்தவன் தானே. அப்படித்தானே புராணங்கள் கூறுகின்றன.

ஆக, நாத்திகர்களை குறை சொல்லாதீர்கள். யான் அறிந்த வகையில், எனது பல நாத்திக நண்பர்கள் நேர்மையான அறம் என்றால் என்ன என வள்ளுவன் சொன்ன வாழ்வினை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று நாம் கொண்டால்,இவர்களுடன் தான் நட்பு சிறந்தது எனச் சொல்லிடலாம்.அதே சமயம்,எனது ஆத்திக நண்பர்கள் பலர், தாம் சுய முயற்ச்சியால் ஈட்டிய பெரும் பயனை செல்வத்தை எல்லாம் ,மனித உயர்வுக்காக, மற்றவருக்காக செலவிட்டு தாம் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.ஆக,சுய லாபம் , சுய நோக்கு இல்லாத ஆத்திகமோ, நாத்திகமோ,தவறு இல்லை.இறுதியாக,வாழ்வின் இலக்கோ பயனோ ஆத்திகத்திலோ நாத்திகத்திலோ இருப்பதாக நான் நினைக்கவில்லை.

நினைக்க வேண்டியது எண்ண வேண்டியது, உள் வாங்கிட வேண்டியது எல்லாமே

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.மனத்துக்கண் மாசிலன் ஆதல்.சுப்பு தாத்தா.kashyapan said...

வெகுநாட்களூக்குப் பிரகு சந்திக்கிறொம் ! நன்றி எட்வின் அவர்களே! ---காஸ்யபன்.!

kashyapan said...

சுப்புதாத்தா அவ்ர்களே!Rationalist Assn of America செயல் வீரர் அப்பாதுரை உங்களுக்கும் ,எனக்கும் நண்பர் ! "இந்த நூற்றாண்டின் இறுதியில் அல்லது அடுத்த நூற்றாண்டி ஆரம்பத்தில் உலக மக்கள் கடவுள் இல்லை என்று உணரும் வாய்ப்பு அதிகம் " என்பார்! நாத்திகர்களின் பணி அதன இன்னும் விரைவு படுத்துவது தான் ! அந்த திசை வழி செல்வோம்!---காஸ்யபன்.