Friday, October 17, 2014

அஸ்வகோஷும் -பிரபாவும் .....!!!அவர் ஒரு இடது சாரி சிந்தனையாளர் ! கோவையில் பிராலமான வழக்குரைஞர் ! அடிக்கடி தொலைபேசியில் பேசுவோம் !

பேச்சு ராகுல சாங்கிருத்யாயன் பற்றி வந்தது ! "ஆம்மாம் தோழர் ! அவரைப் படிசுட்டுதான் கிறுக்கு பிடிச்சு அலைஞ்சு கடசில மார்க்சிசத்துல வந்து சேர்ந்தேன் " என்றார் !

உண்மைதான் ! மூத்த தோழர்கள் அந்தக்காலத்தில் இரண்டு நூலைக் கொடுத்து படிக்கச்சொல்வார்கள் ! ஒன்று கார்க்கியின் "தாய் " நாவல் ! மற்றொன்று ராகுல்ஜியின்" வால்காவிலிருந்து கங்கை வரை " ! மனிதனை புரட்டிப்போடும் நூல்கள் !

ஒன்று உணர்வு பூர்வமாகவும் ,மற்றொன்று அறிவு பூர்வமாகவும் மனதை அலைக்கழிப்பவை ! மேலும் மேலும் அறீந்துகொள்ள தூண்டுபவை !

மூன்று  முறை ராகுல்ஜியை படித்துள்ளேன்! நவீன தத்துவ விசாரணை மேலும் முன் சென்றுள்ளது ! உண்மைதான் !

சமீபத்தில் மொழிபெயர்ப்பு பணி காரணமாக"வால்காவிலிருந்து கங்கை வரை" நூலை   மீண்டும் படிக்கும்வாய்ப்பு கிடைத்தது !

பொதுவாக "காதல்" கத்தரிக்காய் என்ற நம்பிக்கை கிடையாது ! இந்த பணப்பட்டுவாடா சமூகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்று நினைப்பவன் நான் !

ரோமியோவும்ஜூலியட்டும்,அந்தோனியும்கிளியோபாத்திராவும்,அம்பிகாபதி  அமராவதியும் ,லைலாவும்,மஜ்னுவும் ஒரு romaantic charector என்றெ கருதுகிறேன் ! அவ்ர்களை எழுத்தில்கொண்டுவந்த எழுத்தாளனின் வெற்றி என்பதைத்தவிர வேறில்லை  என்று கருதுபவன் நான்  ! 

இந்த நூல் இருபது பகுதிகளைக் கொண்டது!பதினொன்றாவது பகுதி "பிரபா" !ராகுல்ஜியின் இலக்கிய நயம்,தத்துவ நேர்த்தி ஆகியவற்றை ,அதன் மேன்மையை சொல்வதாக எனக்குப் படுகிறது !

ஆன்மீக தாகம் கொண்டவருக்கு குழப்பமான மன நிலை ஏற்படுவது உண்டுதான் ! அப்போது அவருக்கு கைகொடுப்பது "மதம் "!

நம்பாதையில் குறுக்கிடும் ஆற்றை கடந்து செல்ல "ஓடம் " வேண்டும் !மறு கரையை அடைந்ததும் ஓடத்திலிருந்து கரை ஏறி நம்பாதையை தொடருகிறோம் !

ஓட்டத்தை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு குதித்துக் கொண்டாடுவதில்லை ! கொண்டாடினால் நம் பயணம் தொடராது !

மதமும்   அப்படித்தான் ! 

அஸ்வகொஷும் ,அவன் காதலி பிரபாவும் இதனை விவாதிப்பார்கள் !அஸ்கொஷின் தத்துவ,கலை இலக்கிய ஞானத்தில் உருகிப் போனவள்  பிரபா ! உயிராய் காதலித்த அவனை தனதாக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருந்தும் அவன் இந்த சமூகத்திற்கு தேவை என்பதை உணருகிறாள் ! சரயு நதியில் இறங்கி தன காதலிலிருந்து அவனை விடுவிக்கிறாள் !

ராகுல்ஜியின் உன்னதம் இந்தப்பகுதியில் ஜோலிக்கத்தான் செய்கிறது !!!
4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் இந்நூலை வாங்கிப் படிக்கிறேன் ஐயா

சிவகுமாரன் said...

பள்ளி நாட்களிலேயே தாய் நாவல் படித்திருக்கிறேன். என் சிந்தனைகளில் மாற்றம் கொண்டு வந்த நாவல் அது. வால்காவிலிருந்து கங்கை வரை - படிக்க ஆசைப்பட்டு இன்று வரை படிக்கவில்லை.
படிக்கத் தூண்டியது இந்தப் பதிவு.

V Mawley said...

"வால்கா முதல் சிந்து வரை " 1975-ல் திரு. சித்திர பாரதி அவர்களிடம் வாங்கிப் படித்த்தேன்..இந்த நாவலை

தங்கள் குறிப்பிட்டததில் பெரு அடைகிறேன் ...

மாலி

V Mawley said...

"வால்கா முதல் சிந்து வரை " 1975-ல் திரு. சித்திர பாரதி அவர்களிடம் வாங்கிப் படித்த்தேன்..இந்த நாவலை

தங்கள் குறிப்பிட்டததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ...

மாலி