Thursday, October 02, 2014

ஐக்கிய நாடுகள் சபையில் 

தலைவர்கள் பேச்சு ..........!!!



ஐக்கியநாடுகள் சபையில் இந்திய பிரதமர் பேசுவதற்காக அமேரிக்கா சென்றார் ! அவருடைய பேச்சின் சாரம்சத்தை இந்துத்துவா ஆதரவு பத்திரிகைகள்  வானளாவ புகழ்ந்து எழுதி வருகின்றன !

அவருடைய பேச்சு பற்றி முழுமையாக எழுதுவதற்குமுன்னால்  ஐநா சபையில்பேசிய சிலதலவர்களின் அந்தக்கால பேச்சினை நினவு குறுவது சரியாக இருக்கும் !

50 ம் ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி இந்தியாவுக்கு சங்கடத்தை உருவாக்கியதில் பிரிட்டனுக்கும்,அமெரிக்காவிற்கும் முக்கிய பங்கு உண்டு ! 

ஒருகட்டத்தில் இஸ்லாமிய நாடுகளைத் தூண்டிவிட்டு அமரிக்கா பாகிஸ்தானின் உதவியோடு ஐநா பாதுகாப்பு சபையில் மிகப்பெரிய நெருக்கடியை இந்தியாவிற்கு உண்டாக்கியது !

நேரு வே சென்று இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது ! பிரதமர் என்ற முறையில் அவர் போகாமல் அவருக்கு நம்பகமான ஒருவரை அனுப்ப முடிவு செய்யப்பட்டது !

வீ கே கிருஷ்ண மேனன் அனுப்பப் பட்டார் ! 

ஐநா வின் வரலாற்றில் பொண்ணெழுத்துக்காளால் பொறிக்கப்படவேண்டிய உரையை மேனன் அவர்கள் நிகழ்த்தினார் ! கிட்டத்தட்ட 9 மணிநேரம் தொடர்ச்சியாக பேசி பாகிஸ்தானின் வாதங்களை தவிடு பொடியாக்கினார் என்பார்கள் !

மற்றொரு சம்பவமும் நினைவு தட்டுகிறது !

பனிப்போர் காலம் ! அமேரிக்கா  "யூ2" என்ற விமானத்தை அனுப்பி சோவியத் நாட்டை வேவு பார்த்தது ! இந்த விமானம் 50000 மீட்டர்   உயரத்தில்  பறந்து படங்களை எடுக்கும் ஆற்றல் உள்ளது ! அன்றய  நிலையில் இந்த விமானத்தை தாக்க முடியாது என்று நம்மபப்பட்டது !

சோவியத்தின் தலைவர் குருஷேவ் எச்சரித்துப் பார்த்தார் ! அமேரிக்கா நாங்கள் விமானம் எதையும் அனுப்பவில்லை என்று சாதித்தது !

பிரச்சினை  ஐநாவிற்கு வந்தது ! குருசேவ் சபைக்கு வந்தார் ! அங்கு அவர் ஆற்றிய உரை இன்றும் பேசப்படுகிறது ! 

"அமெரிக்க இரண்டு விமானனகளை அனுப்பியது ! நாங்கள் எங்கள் ஏவுகணைகள் மூலம் தாக்கினோம் ! ஒன்று தப்பிவிட்டது ! மற்றொன்று தாக்கப்பட்டது ! விமானி பாரச்சுட் மூலம் குதித்தார் ! அவரை உயிரோடு பிடித்து வாக்குமூலம் வாங்கியுள்ளோம் ! இதோ அந்தவிமானியின் படம் ! அவர்பெயர் "பவல் " என்று மேசையில் தூக்கி எறிந்தார் ! நாற்காலியிலிருந்து  எழுந்து "பூட்ஸ்" கால்களால் மேசையை எட்டி உதைத்து " அமெரிக்காவிற்கு "இது ஒரு எச்சரிக்கை " என்று கூறி முடித்தார் ! 

ஐநா சபையில் வாஜ்பாய் இதற்கு முன்பு "இந்தி"யில் பேசியுள்ளார் ! நமது பிரதமர் மோடி அவர்களூம் இந்தியில்பெசினார் !

ஐநா வில் அங்கிகரிக்கப்பட்ட மொழிகள் ஐந்து உள்ளன ! அதில்பெசினால்  உடனுக்குடன் மொழிபெயர்ப்பு கேட்கும் ! நமக்கு எநத மொழி வேண்டுமோ அந்த மொழியில்  (ஐந்துக்குள் ) கேட்கலாம் !

வேறு  மொழியென்றால்  மொழி பெயற்பிற்கான செலவை அந்தந்த நாடுகள்  ஏற்க வேண்டும் !  

தவிர பேச்சை முன் கூட்டியே கொடுத்து  மொழிபெயர்ப்பாளரை தயார் செய்ய வெண்டும் ! 

நமது பிரதமர் குறிப்புகள் இருந்தாலும்  (extempore ) தன்முனை ப்பில் பேசினார் ! பிறநாட்டு சார்பாளர்கள் சரியான மொழிபெயர்ப்பு இல்லாமல் தங்கள் தலயில்மாட்டியிருந்த கருவிகளை எடுத்துவிட்டு "மௌனப்படம் " பார்த்தார்கள் !

அதுவும் ஒருவகையில் நல்லதாகப் போயிற்று ! பல இடங்களில் " காஷ்மீர் " என்பதற்குப் பதிலாக "பாகிஸ்தான்" என்று குறிப்பிட்டாராம் ! அவருடன் சென்றிருந்த வெளிஉறவுத்துறை அதிகாரிகள் அதனத்திருத்தி  பத்திர்கையாளர்களுக்கு கொடுத்துள்ளனர் !

பதிவுலக நண்பர் ஒருவர் " பிரதமர் அவருடைய தாய் மொழியான "குஜராத்தி " மொழியில் பேசியிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார் !

எந்த மொழியானால் என்ன ! வந்திருந்த அயல்நாட்டு சார்பாளர்கள் செவிகொடுத்து கேட்கவேண்டுமே !!! 







1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இந்தியில் பேச வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை ஐயா