Saturday, December 06, 2014

சம பந்தி போஜனமும் ,

சாதிமறுப்பு திருமணமும் ,

சாதியை ஒழிக்குமா ....?


"சம்பந்தி போஜனமும்,சாதி மறுப்பு திருமணமும் சாதியை ஒழிக்காது " என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்  ! 

தீண்டாமையை ஒழிக்க ராஜா ராம்மோகன் ராயும் காந்தியும் பாடுபட்டார்கள் ! ஆனால் இருவரும் அதற்கு அடிபடை சாதி என்பதையும் ,அதன் சல்லி வேரை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தத் தவறிவிட்டார்கள் ! 

பாரதி போற்றிய தலைவர்களுள் ராம்மோகனும் ஒருவர் ! அவர்பற்றிய கட்டுரை ஒன்றில் " எப்பேர்பட்ட சீர்திருத்தவாதி நீ ! சாகும்போது கூட உன் மார்பில் புரளும் "முப்புரி நூலை " எடுக்க மறந்து விட்டாயே  " என்று கதறு கிறான் !

தாழ்த்தப்பட்டவன் அவன் ! வசதி உள்ளவன் ! தீர்த்த யாத்திரை செல்கிறான்  1 வந்ததும் வழக்கப்படி தன சாதியினருக்கு விருந்து வைக்கிறான் ! விருந்தில் "நெய் " விட ஏற்பாடு செய்கிறான் ! 

புனித நூல் படி தாழ்த்தப்பட்டவர்கள் "நெய்" உண்ணக்கூடாது ! நெய் பரிமாறுவதால் மேல்சாதி இந்துக்களை அவமானப்படுத்திவிட்டான் ! அவர்கள் ஆத்திரம் கொண்டு பரிமாற வைத்திருந்த பதார்த்தங்களை தூக்கி வீசுகிறார்கள் ! உண்ண  வந்தவர்களை அடித்து விரட்டு கிறார்கள் ! அண்ணல் அம்பேத்கர் இதனைகுறிப்பிடுகிறார் ! உயிருக்குப் பயந்து அவர்கள் ஓடிவிடுகிறார்கள் !

1936 ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்தது ! இன்றும் கார்ப்ரெட் காலத்தில் நடக்கத்தானே செய்கிறது ! 

கர்மவினை , ஆன்மீகம்,சாத்வீகம்,புலால் மறுப்பு என்றாலும் இவற்றிர்க்குபின்னால் ஒளிந்திருக்கும் சாதீயம் புலப்படத்தானே செய்கிறது!

 மனிதர்களிடையே ,தன்மையில்,திறமையில்,செயல்பாட்டில் வேற்றுமை இருக்கிறது என்பது உண்மைதான் ! அனைவரும் இந்தவிஷயத்தில் சமம் இல்லைதான் ! அதற்காக சமமானவர்கள் இல்லை என்பதாக நடத்தப்பட வேண்டுமா என்று கேட்கிறார் அம்பேத்கர் ! 

அரசியல் மேடையில் பல கொடுமைகள்  நடக்கின்றன ! அதனை விட சமுக தளத்தில் நடக்கும் கொடுமைகள்படு பயங்கரமானவை ! அரசியல் கொடுமையை எதிர்ப்பவனை விட சமூக கொடுமையை எதிர்ப்பவன்  தீரமிக்கவன் என்கிறார் அண்ணல் ! 

இந்துக்களுக்கு சாதி மாற  முடியாது ! ஒரு சாதியில் செரவேண்டும்  என்றால் அதில் நீ பிறந்திருக்க வேண்டும்   கிறிஸ்துவனோ ,இஸ்லாமியனோ இந்து வாக முடியாது ! அப்படி வந்தால் அவனை எந்த சாதியில்  புகுத்துவாய்  ! அந்த சாதி ஏற்றுக்கொள்ளவேண்டுமே ! அதனால் தான் மதமாற்றம் அனுமதிக்கப் படுவதில்லை  ! இந்துத்வா காரர்கள் மதமாற்றத்தினை இதனால் தான் எதிர்க்கிறார்கள்!

பிள்ளை மகன் ஒருவன் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவரை காதலித்து மணந்தான் ! ஆண்டுகள் ஓடின ! அவன் மகளுக்கு திருமண  வயது வந்தது !  தாய் தன சகோதரன் மகனை தேர்ந்தெடுத்தாள் ! தந்தை தன சகோதரி மகனை தேர்ந்தெடுத்தான் ! இது சாதீயம் என்பது ஒருமனநிலை என்பதை காட்டவில்லையா ?

சமபந்திபொஜனமும்,சாதிமறுப்பு திருமணமும் மட்டும் சாதியை ஒழிக்காது ! 

சாதியை ஒழிக்க என்னதான் செய்ய வேண்டும் ?

சாதியை கட்டிக்காக்கும் சாத்திரங்கள் புனிதமானவை என்ற எண்ணத்தை நொறுக்க வேண்டும் என்கிறார் அம்பேத்கர் !!!

கட்டுரையில் பாரதி கூர்ய்கிறான் !

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சாதியை கட்டிக்காக்கும் சாத்திரங்கள் புனிதமானவை என்ற எண்ணத்தை நொறுக்க வேண்டும்

சிவகுமாரன் said...

பாவேந்தன் சொன்னது போல் ஊரில் தெருவில் காதலென்றால் ஆதரிப்போம் வீட்டில் காதலென்றால் வெறுப்போம். இது தான் நிதர்சனம்.
ஆனாலும் காலம் மாறிவருகிறது.
சென்றவாரம், என் அக்காவின் (பெரியப்பா மகள் ) மகள் காதல் திருமணம் செய்தாள். எங்கள் சமூகத்தில் வரதட்சணை அதிகம். இந்த திருமணத்தை ஆதரிப்பதால் வரதட்சணை பிரச்சினை குறையும் என்ற நோக்கில் நாங்கள் இன்றைய தலைமுறையினர் அனைவரும் திருமணத்திற்கு ஆதரவளித்தோம்.