Monday, January 26, 2015

தோழமை நெஞ்சங்களே ......!!!
தோழமை நெஞ்சங்களே என்று அழைக்கப்படும் போது நட்பையும் தாண்டி நெருங்குகிறோம் !

மேற்கு வங்கத்தை சேர்ந்த நண்பர் சன்யால் அவர்கள் "hello Comrade " என்று கட்டி அணைத்துக்  கொள்வார் ! என் நெஞ்சில் பீரிட்டுக்கிளம்பும் வாஞ்சையை விவரிக்க முடியாது !

நான் ஹைதிராபாத்தில் பணியாற்றும் போது மத்யூஸ் என்ற கேரளத்து நண்பன்  "சகாவே "என்றுதான் அழைப்பான் !நெஞ்சம் விம்மும் !

அருமை நண்பர் இரா.தே. முத்து அவர்கள்  "சக ஹிருதயர்களே " என்று அழைத்திருந்தார் தன பதிவில் ! பின்னுட்டமாக சிலர் அதனை குறைபட்டுக்கொண்டு பின்னூட்டமிட்டிருந்தனர் ! "சக ஹிருதயர்கள் " என்பது சம்ஸ்கிருத வார்த்தை என்று காரணமும் சொல்லியிருந்தனர் !

ஒரு காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்ய கிளர்ச்சி செய்தோம் ! என் உறவினர் ஒருவர் கண்டித்தார் ! "அம்மை மீனாட்சிக்கு சம்ஸ்கிருதம் மட்டுமே புரியும் என்றால் ஊமையன் எந்த மொழியில் வணங்க  வேண்டும் " என்று கேட்டேன் !

தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற அட்டை தொங்க விடப்பட்டிருக்கிறது தற்போது!

வேத காலத்தில் கையாளப்பட்டு வந்த மோழி வேறு ! பிராகிருதம், கிரந்தம்,மற்றும் பேச்சுமொழியில் இருந்தவை அவை ! இந்த மொழியில் என்னுடைய "நல வாக்கை ! மொழிப்ர்ய்ர்க்க வேண்டாம் என்று புத்தர் கூறியுள்ளார் ! 

கி.மு 4ம் நூற்றாண்டில் பாணினி என்ற புலவர் பிராகிருதம்,கிரந்தம் பேச்சு மொழி ஆகியவற்றை திருத்தி மற்றும் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் வரிவடிவத்தையும் இணைத்து சமஸ்கிருத மொழி க்கான இலக்கணத்தை உருவாக்கினார் என்பது மொழியியல் அறிஞர்களின் கணிப்பு ! கிட்டத்தட்ட இதே காலத்தில் தான் தமிழுக்கும் வரிவடிவம் வந்ததாக கருது கிறார்கள் !

பௌத்தர்கள் தங்கள்மத நுல்களை இதன்பிறகு சமஸ்கிருதத்திலும் பாலிமொழிகளிலும் எழுதி வைத்தனர் !

சமஸ்கிருதத்தின் ஆகப்பெரும் படைப்பு "ராமாயணம்", "மகாபாரதம்" ஆகும் ! ராமயணத்தை எழுதிய வால்மீகி அந்தணன் அல்ல ! மகாபாரதத்தை எழதிய வியாசன் அந்தணன் அல்ல ! உலகப்புசழ் பெற்ற கவிஞன் காளிதாசன் அந்தணன் அல்ல! 

சம்ஸ்கிருதம் "தேவ பாடை"யும் அல்ல ! அப்படி இருந்தால் சமணரும்,பௌத்தரும் தங்கள் பிரார்த்தனைக்கு உபயோகித்திருக்க மாட்டார்கள் ! 

இவை கிறிஸ்தவத்தை பரப்ப வந்த "பிரிட்டோ பாதிரியாரும், கால்டுவெல் பாதிரியாரும் விரக்தியில் சொன்னவை !

கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்த இவர்கள் மெல்சாதி  இந்து எவனும் இவர்களை மதிக்கவில்லை ! பல வேலைகளை செய்து பார்த்தார்கள் ! 

மதுரை பாத்திமா கல்லுரியிலிருந்து செல்லும் சாலையில் பிரிட்டோ சிலை உள்ளது ! தலையில் தலைப்பாகை, காதில் குண்டலம் ,மார்பில் முப்புரி நூல பார்த்தால் தெரியும் ! தானும் ஐயர்தான் என்று சொல்லி தங்கப்பல்லக்கில் வந்து உபதேசம் செய்து பார்த்தார் !கால்டுவெல் பாதிரியார் ஒருபடி மேலேபோய் தென் தமிழக வேதக் கோவில்களில் பாதிரியாரை "ஐயர் " என்று கூப்பிட வைத்தார் ! சில பங்கு கோவில்களில் இன்றும் இந்த பழக்கம் நீடிக்கிறது ! தங்கள் மத பிரச்சாரத்திற்கு வசதியாக " பார்ப்பனர்கள், தேவபாடை சம்ஸ்கிருதம் " என்று கிளப்பிவிட்டனர் !

இதனை அரசியல் லாபத்திற்காக சிலர் பயன்படுத்திக் கொண்டனர் ! பிரித்தாளும் பிரிட்டிஷார் தங்களுக்கு சௌகரியமாக இருந்ததால் கண்டு கொள்ளவில்லை  ! 

கேரளம்,ஆந்திரம்,தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் சம்ஸ்கிருதம் எல்லாராலும் கற்றுக்கொள்ள[படுகிறது ! 

"அம்பெத்கரைட்ஸ் " பாலி  மற்றும் சமஸ்கிருதத் தில் முனைவர் பட்டம் பெற்று இன்றும் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றுகிறார்கள் ! 

சம்ஸ்கிருதத்தை வைத்து மதவாதிகள் அரசியல் செய்கிறார்கள் !

அதனை கடுமையாக எதிர்ப்போம் !

அதற்காக "ராஜனை விட ராஜவிஸ்வாசியாக மாற வேண்டியதில்லை "!!!

 

1 comments:

-'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு ஐயா...