Tuesday, October 13, 2015

மனிதாபிமானத்திலிருந்து , புரட்சி வரை ,

பத்து அம்ச கொள்கை உண்டு த.மு.எ.ச.  வுக்கு....!!!




எந்த ஆண்டு என்பதுநினைவில் இல்லை ,முப்பது ஆண்டுகள் இருக்கலாம். சாத்தூரில் நடந்தது. சாராய வியாபாரிகளிடையே நடந்த சண்டையை சாதிச்சண்டையாக்கினார்கள்.

 மேல் சாதி இந்துவும்,தலித்தும் கந்தக பூமியில் கறுப்பாகத்தானே இருப்பார்கள். வெட்டி சாய்த்துக் கொண்டார்கள். நகரம் ரணகளமாகியது. சுத்து பட்டு கிராமங்களிலும் சிக்கல் . விருது நகருக்கு தெற்கே தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து நின்றுவிட்டது. முன்று நாட்கள் கேள்வி கேட்க நாதி இல்லை.

பஸ் நிலையத்தில் கட்சிக்கொடிகள்  பறக்கத்தான் செய்தன.

அந்த இரண்டு இளைஞர்களும் இந்த மரண அமைதியை சகிக்க தயாராக இல்லை. 

ஐந்து வயதிலிருந்து பதினந்து வயதுள்ள பள்ளி மாணவ்ர்களை திரட்டினார்கள்.
"உயிரைப் பறிக்கத் தெரிந்த பெரியோர்களே, உயிரை கொடுக்க முடியுமா உங்களால்" "வாருங்கள் ! சாத்தூரை அமைதி பூங்காவாக மாற்றுவோம் " என்று பதாகைகளை ஏந்தி குரலேழுப்பிக்கொண்டு ஊர்வலமாக வந்தார்கள். அவ்களுக்குப் பின்னால் அந்த குழ்ந்தை களின் பெற்றோர்கள்  வந்தார்கள். 

அந்த இளைஞர்கள் பெயர் "மாதவராஜ், காமராஜ். " இருவரும் எங்கள் த.மு.எ.ச.வின் கிளை செயல் வீரர்கள்.

மதுரையிலிருந்து தேனி மாவட்டம் பிரியாத காலம் அது. மதுரை மாவட்ட மாநாடு தேனீ நகரத்தில் அந்த மேட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது . இரண்டுநாள் மாநாடு. முதல் நாள் இரவே சாதிக் கலவரம் ஆரம்பமாகிவிட்டது.மாநாட்டு மண்டபத்திலேயே போலீஸ் தங்க  வேண்டிய நிலை.அமைதிப் பேச்சுவார்த்தையில் கே.முத்தையா அவர்கள் கலந்து கொண்டார்கள். இரண்டாம் நாள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் செல்ல முடியவில்லை பஸ் போக்குவரத்து நின்றுவிட்டது.

ஏற்பாட்டாளர்கள் செய்வதறியாமல் தீகைத்தார்கள்.  200 பேருக்கு உணவுதங்குமிடம் வேணுமே. தேனியிலிருந்து செல்ல வழியில்லை. பெரியகுளம் பகுதியிலிருந்து ஒண்றிரண்டு பஸ் கள்  போவதாக செய்திகள் வந்தன
 பெரியகுளம் போக வழியில்லை. வழியிலும் கலவரம் நடக்கிறது. எழுத்தாளர்களும் கலைஞர்களும் கூடி முடிவெடுத்தார்கள். வந்திரந்த சார்பாளர்கள்,பார்வையாளகள் ,நண்பர்கள்  எல்லாரும் கலவரப்பகுதி வழியாக அமைதி ஊர் வலமாகச் செல்வது என்பதுதான்  முடிவு.

அந்த குன்றின் சரிவுகள் வழியாக 200 பேரும் கைகோர்த்து நடந்தார்கள்.

அவ்ர்கள் வாயிலிருந்து  "we shall  overcome "  "வேற்றி பெருவோம் நாம் " என்ற பாடல் மலைமுகடுகளில் எதிரொலிக்க  கம்பிரமாக நடந்தார்கள்.


த.மு.எ.சங்கம் அவசர நிலையில் செயல்படும் சங்கமும் தான்.

0 comments: