Tuesday, December 22, 2015

அரிசியல் நேர்மையும் ,

நிர்வாக நேர்மையும் .....!!!




ஐ.எ.எஸ்  அதிகாரி சகாயத்தின் நேர்மை இன்று பரவலாக பேசப்படுகிறது. அவரே கூச்சப்படும் அளவுக்கு பாராட்டுகளையும் பார்க்க முடிகிறது.


இப்படி நேர்மையான அதிகாரிகளுக்கு அரசியலிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கும் தலைவர்கள் வாய்த்தால்நாட்டின் தலைவிதியே மாறிவிடும் என்பதில் அய்யமில்ல.

கிட்டத்தட்ட 60 வது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. 

அப்போது சி.டி  தேஷ்முக நிதியமைச்சர். தனியாரின் வேட்டைக்காடாக இருந்த இன்சுரன்ஸ் துறை கணக்கில் கொள்ளப்பட்டது. 

மிக்கவும் ரகசியமாக திட்டம் தீட்டப்பட்டது. பிரதமர் நேரு வுக்குமட்டும் தெரியப்படுத்தப்பட்டது.அவருக்கும் தேதி,மற்ற விபரங்கள் சொல்லப்படவில்லை. பாட்டீல்,ராஜகோபாலன் என்ற இரண்டு அதிகாரிகளுக்கு தான் முழு விபரமும் தெரியும். இந்திய பூராவிலும் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகங்களில் அரசுஅதிகாரிகள ரகசியமாகநிருத்தி இன்சூரன்ஸ் துறை நாட்டுடமையாக்கப்பட்டது.

இதைக்கண்டு உலகமே வியந்தது.

அரசியலிலும், நிர்வாகத்திலும் உள்ள நெர்மையாளர்களால் இது நடத்தப்பட்டது.

இன்று எதோ அரசியலில் நேர்மை அழிந்து விட்டது போல  ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிகள் நடக்கிறது.

தனது எம்.பி பதவியில் வரும் சம்பளம் அலவன்சு அத்துனையையும் கட்சி க்குகொடுத்துவிட்டு,கட்சி கொடுக்கு 5500 ரூ பாயில் வாழ்ந்து வரூம் து.ராஜா போன்றவர்கள் இவர்கள் கண்ணில்படமாட்டார்கள்.

இரண்டுமுறை எம்,பியாக இருந்து சொந்தமாக ஒருவீடுகூட இல்லாத மறைந்த.,பி.மோகன் இவர்களுக்கு தெரியாது.

கல்லூரியில் என் பேத்திக்கு இடம் வாங்கித்தரவா நான் எம்.பி ஆனேன் என்று 
அறிவித்த நல்ல சிவன் -

இரண்டு முறை எம்.எல்.எ வாக இருந்தும் இன்றும் டீ கடையில் டீ குடித்துவிட்டு காலாற நடந்து வரும் நன்மாறன்,-

கழுத்தில்  ஐந்துகிராமில் ஒரு செயினைப் போட்டுக்கொண்டு வளைய வரும் எம்.எல்.எ  பாலபாரதி-

இவர்களெல்லாம்  அரசியல் நேர்மையில் சேர்த்தி இல்லை . ஏனென்றால் இவர்கள் இடது சாரிகள்.

சகாயம் அவர்களின் நிர்வாக நேர்மைக்கு தலைவணங்குகிறேன்.

ஊடகங்கள் என்னதான் புளுகினாலும்,மறைத்தாலும் அரசியலில் நேர்மையை கட்டிக்காக்க 

கம்யுனிஸ்டுகள் இருந்து கொண்டிருப்பார்கள்..

இது சத்தியம் !!!

3 comments:

msuzhi said...

கம்யூனிஸ்டு அரசியல்வாதிகளில் ஊழல் பேர்வழிகள் இல்லையா?

நேர்மை என்பது கட்சியின் அடையாளமா அல்லது தனிப்பட்ட மனிதரின் அடைளமா?

kashyapan said...
This comment has been removed by the author.
kashyapan said...

நான் மார்க்சிசத்தை நம்புகிறேன்.லட்சக்கணக்கானோர் அதன நமபுகிறார்கள் .அவர்கள் நடைமுறையில் செய்யும் தவறு அந்த தத்துவத்தின் தவறாகாது அப்பாதுரை அவர்களே. அப்பழுக்கற்ற முதல்வர் நிருபன் சக்கரவர்த்தியை கட்சியிலிருந்து நீக்கீய கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. உச்ச நீதிமன்றத்தில சிம்மம் போல் கர்ஜிக்கும் சோம்னாத் த சட்டர்ஜியை ஆட்டைக்கு வேண்டாம் என்று சொன்ன் கட்சி மார்க்சிஸ்கட்சி. தவறு செய்பவர்கள் எங்கும் எதிலும் உண்டு.கட்சிக்கு அவர்கள் அர்பணிப்பொடு செய்தவைகளயும் சீர்துக்கி பார்த்து நடவடிக்கை எடுகப்படும். கட்சியின் மூத்த தலைவர்கள் (பி.ஆர்.) உட்பட ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் தான். (கீர்த்தி ஆசாத் படும்பாட்டை கவனத்தில்கொள்ளுங்கள். ) வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.