Wednesday, January 13, 2016

மார்க்க்ஸ் மற்றும் 

அம்பேத்கர் வந்தாலும் .....!!!


(இரண்டு மாதத்திற்கு முன்னாள் ஒரு இடுகை போட்டிருந்தேன். அதனை மீண்டும் பதிவிடுகிறேன் )



மார்க்ஸ், அம்பேத்கர் வந்தாலும் 






உயர் மத்தியதர வர்க்கம் முக்கால் அழுதது . பெட்ரோல் விலை அநியாயத்துக்கு உயர்ந்து விட்டதாம்..  காரணம் என்ன என்பதை சிந்திக்கத்தேரியாத மூடர்கள் .  குறைத்தார்கள் .

ஹோட்டலில் உணவருந்தினால் பில் கொடுப்போம். 18 ரூ ஆனால் 20 ரூ நோட்டை நிட்டுவோம்.அவன் இரண்டு ஒத்த ரூ நாணயத்தை தருவான் வாங்கி கையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தால் குருட்டு,நொண்டி ,கிழடுகள் கையேந்தி நிற்கும். கையில் உள்ள இரண்டு ரூபாயில் ஒன்றை பையில் போட்டுக் கொண்டு ஒன்றை எரிந்து விட்டு கர்ணன் பரம்பரையில் வந்தவன் போல நடை போடும் புத்தி நம்முடையது .

அதேபோல் தான் 50 காசு.90 காசு என்று பிச்சை போடுவது போல பெற்றோல்விலையை குறைத்தார்கள். மொத்தம் 6அல்லது 7 ரூ குறைத்திருப்பான்.  மகிழ்ந்து திளைத்து நிற்கிறோம்.-நமக்கு குறைந்து விட்டதல்லவா?

பொருளாதார புளுகுணிகள் புது புது வார்த்தைகளால் நம்மை மயங்க வைப்பார்கள். நமக்கு புரியக்குடாது என்பது தான் அவர்கள் எண்ணம்..
பெட்ரோல் விலை  உயர்வு என்பது CASCADING EFFECT  உள்ளதாம். பெட்ரோல் விலை உயர்ந்தால் கட்டணம் உயருமாம். கட்டணம் உயர்ந்தால் கச்சபொருள் விலை உயருமாம்.  அதனால் உற்பத்தியான பொருள் விலை குடுமாம். 
பெட்ரோல் விலையை காட்டி ரயில்  கட்டணத்தை உயர்த்தினார்கள். இப்போதும்  ரயில் கட்டணம் குறைக்கப்படவில்லையே. முனியாண்டியும்,முத்துச்சாமியும் தானே கொடுக்கப் போகிறார்கள் .
இதை சொல்லிதானே பஸ் கட்டனத்தை உயர்த்தினார்கள் கருணாநிதியும் ஜெயலலிதா அம்மையாரும்.

ரூபாய்க்கு முணு படி ன்னு புளுகி ஆட்சியைப்பிடித்தார்கள் . இன்று 1/2 படி அரிசி 25 ஓவா. கருணாநிதி இப்போது புலம்புகிறார் . ஒரு கிலோ துவரம் பருப்பு  180 ரூ. நல்ல விளைச்சல் இருந்தாலும் பச்சைப்பயறு 170ரூ . என்கிறார்..

நாம் கேட்க வேண்டியதை ,அவரிடம் நாம் கேட்க வேண்டியத அவர் கேட்கிறார்.

நமக்கு வேறு முக்கியமான பணிகள்  உள்ளன. . . 
குஜராத் காரர் அல்ல,வாஜ்பாயும், அத்வானியும் நினைத்தாலும் சம்ஸ்கிருதம் செல்வாக்கு பெறாது அதன நவீனப்படுத்த இந்த பரிவாரங்கள் அனுமதிக்காது
நமக்கு பாதிரியார் சொல்லிகொடுத்த புளுகு முட்டைகள் இருக்கிர்ர்ர்றதே..
சம்ஸ் கிரு தம்.பாப்பான்,பாப்பனியம் .ஆறுமாதமாய் எதிர்த்துக் கொண்டு இருக்கிறோம். 

இப்போது மாட்டிறைச்சி. மின் கிலோ 700 ரூ ஞான்ஆட்டிறைச்சி 500,600 ஞான்.
மாட்டிறைச்சி 300 ரூ ஞான். மைதா மாவு பஞ்சம் போக்கி பணியாரம்  உருண்ட  ஒன்னு 5 ரூ ஞான் . முனியாண்டியும் முப்புடாத்தியும் அததின்னுப்போட்டு வேலைக்கு போறான் .நாம அவனோட உரிமையை காப்பாத்த மாட்டிறைச்சி விருந்து வைக்கிறோம்.  

இந்தா இதுபுரட்டாசி மாதம்> ஐப்பசி ,கார்த்திகை வந்தாசுனா நமக்கு வேற சொலி வந்திரும். ஆமா அலங்கானல்லுரு  குலச்சாமி ,பண்பாடு, தமிழர் விரம் நு காப்பாத்த "ஜல்லிக்கட்டு " நடத்தனும்லா !

நமக்கு கருத்து சதந்திரம் உண்டு டே! 

எத ஏப்பம் சொல்லணும்கராத  அதானியும்,அம்பானியும் கார்பரேட் கம்பெனிகளும் தான் முடிவு பண்ணுவாங்க!

மார்க்ஸ் , அம்பேத்கர்,நு யார் வந்தாலும் இநதியாவை காப்பாத்த முடியுமா ???, 
யோசிச்சுதான் பதில் சொல்லணும் !!!!!

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
மகிழ்வோடு நவில்கின்றேன்
கனிவோடு ஏற்றருள்வீர்

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.