Friday, January 22, 2016


அந்த கவிஞனின் கடைசி கவிதை ....!



ரஷ்யாவின் கவிஞர்களில்  மாயகொவ்ஸ்கி முக்கியமானவன். ரஷ்ய அதிகாரவர்க்கத்தை எந்தவிதமான சமரசமும்  இல்லமல் எதிர்த்து நின்றவன்.


தன் மூப்பதாவது வயதில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான் .


ஆயிரம்கரணங்களை ஆயிரம்பேர் சொல்வார்கள்.!


சாவதற்கு முன்பு அவன் எழுதிய கடைசி  கவிதை இது !


உலகம் போற்றும்


"இரவு மணி ஓன்றாகிவிட்டது " என்ற அந்த கவிதை இதோ '



இரவு ஒருமணியாகிவிட்டது !

நீ உன் மெத்தையில் தூங்க பொயிருப்பய் !

இரவுமுழுவதும் நட்சத்திரங்களால் வெள்ளீயாய் ஒளிந்திருக்கும்.!

எனக்கு எந்த அவசரமும் இல்லை !

அவசரமாக தந்தி கொடுத்து உன்னை எழுப்பவேண்டியதில்லை !

உன்னை சங்கடப்படுத்தவும் தேவை இல்லை !

அவர்கள் சொல்வது பொல அந்த விஷயம் முடிந்துவிட்டது !

அன்றாட வழ்ழ்க்கையின் சுழற்சியில் அன்பு எனும் தோணி முட்டி மொதி மூழ்கிவிட்டது !

நம் துக்கம், வலி , வேதனை பற்றி ஏன் கவலைப்படுகிறாய் !

நீயும் நானும் தான் பிரிந்து விட்டோமே !

உலகம் அமைதியாக அடங்கி விட்டது !

நட்சத்திரங்களின் பாராட்டுகள்மூலம் இரவு வானத்தை தழுவிக்   கொண்டுள்ளது !

இந்த் நெரத்தில் காலத்தையும்,வரலாற்றையும், படைக்கப்பட்டவர்களையும் நோக்கி கேட்க

ஒற்றை மனிதன் எழுந்து நிற்கிறான் !

0 comments: