Friday, April 01, 2016

"பரமனின் "

தி.மு.க ......!!!மதுரையில் "பாத்திமா" கல்லுரியை தெரியும் .அதன் இடது பக்கம்  ஆலமரத்தின் வழியாக ரயிலவே  கேட்டை கடந்தால்.எல்.ஐ.சி காலனி,ரயிலார் நகர், போஸ்டல். என் ஜி ஓ காலனி என்று வரும். அங்குள்ள கிணற்று  நீர்   brackish ஆக இருந்ததால் அவர்கள் அரசரடி தண்ணிர் தொட்டியில் இருந்து தண்ணிர் கோண்டு வருவார்கள்.

பரமன் ட்ரை சைகிள் முலம்   தன்ணீர் கொடுப்பான். 30 - 40 விடுகளுக்கு சப்பளை அவன்தான். தேனி ரோட்டிலிருந்து திரும்பினால் காமராஜர் பாலம் வரை மேடுதான் . தூரத்தில் ஆற்றுக்கு அக்கரையில் "தீக்கதிர்"  ஆபிஸ் மேல் கமபத்தில் அரிவாள் சுத்தியல் நட்சத்திர கொடி பறப்பது தெரியும்.

அரசரடி மூக்கிலிருந்து பாத்திமா கல்லுரி வரை மேடுதான். 20-25லிட்டர் 20 கேனை இழுத்து  வருவது சிரமம் தான்.பரமன் அதைத்தான் செய்து வந்தான், காலை நான்கு மணியிலிருந்து மதியம் ஒருமணி வாரை ட்ரிப் அடிப்பான்.  மாலை திமுக கூட்டம் நகரத்தில் எங்கு நடந்தாலும்டிரை சைக்கிளோடு போய்விடுவான். சிறு சிறு பணி  களை ச் செய்வான்கூட்டம்முடிந்ததும் அங்கேயே   ட்ரைசைக்கிளில் வேட்டியை அவிழ்த்து போத்திப்படுத்திருந் விட்டு  காலை நான்கு மணிக்கி தண்ணிபிடிக்க ஆரம்பிப்பான்.67 தேர்தலில் நான் எனவிட்டு வாசலில் அமர்ந்து வாக்களர் ஸ்லிப் எழுதும் பொது தான் நான் கட்சிக்காரன் என்பதை தெரிந்து கொண்டான். மிக நெருக்கமாக பழகினோம்.

அண்ணா வின் வெற்றி அவன் வெற்றி.சென்னை செல்ல அவனுக்கு விருப்பம் தான். பஸ்  ஏற்பாடு செய்திருந்தார்கள். மதுரை தஞ்சை,புதுச்சேரி.சென்னை சென்று வர 35 ரூ. 

"நம்ம வசதிக்கு முடியாதுண்ணே ! கூட்டம்பெரும்கூட்டம்வரும் .சாலியா இருக்கும் "

"பரமா ! இது ஒரு வரலாறு !

"கண்கள்பளபளக்க" அண்ணா அண்ணா "என்று ஜெபித்தான

அவன் தெரு பூராவும்  ஆரஞ்சு  மிட்டாய் வாங்கி கொடுத்து கொண்டாடினான்.. 

அவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை !

அண்ணாவுக்கு உடல் நலம் இல்லாமல் போனது. பரமன் பட்ட வேதனையை சொல்லி மாளாது.என்ன செய்ய ? மரணம் தவிர்க்கமுடியாததாயிற்று .

"அண்ணெ ! 25 ரூ கோடுங்க அண்ணே ! "சென்னைக்கு ரயிலேறி விட்டான் .

அரைமணி நேரம் கழித்து அவன் தம்பி அண்ணன் சென்னை செல்கிறார். 25 ரூ வாங்கிவரச் சொன்னார் என்றான்.புரிந்து கொண்டேன். அவனையும் அனுப்பி வைத்தேன்.

"எந்த ஆறு என்பது நினைவில்லை . ரயிலின் கூரையின் மீது வந்தவர்கள் கர்டர் பாலத்தில் அடிபட்டு கிடக்கிறார்களென்று சேய்தி  வந்தது.பரமனுக்கு ஒன்று மில்லைஅவந்தம்பி தலையில் அடிபட்டு வீட்டில்  இருக்கிறான் . 

"தம்பி ! இப்படி ஆயுடுச்சே ! 'என்று அவனைப்பார்த்து வருத்தப்பட்டேன்,"எனக்கு அடிதான பட்டுது  அண்ணாவுக்கு "அவனால்  பேச முடியவில்லை . "உயிர்" தொண்டை அடைக்க மேலே கையக்காட்டினான்    .

நான் ஒய்வு பெற்று வந்து விட்டேன். 

தம்பி கோலா கம்பெனியில் மலையாய்  குவிந்திருக்கும் உடைந்த பாட்டிகளிலிருந்து நல்ல பாட்டிலை பொறுக்கும் இடத்தில்கூலி வேலை  செய்கிறான்.

பரமனை தேடினேன் கிடைக்கவில்லை. 


அவனுடைய தி.மு.க வையும் காணவில்லை !

இனி காணவும்முடியாது !!!


0 comments: