Saturday, April 09, 2016

ஆணவ கொலைகாரர்களுக்கு 

என்ன தண்டனை கொடுக்கலாம் ?



உடுமலையில் சங்கரையும், கௌசல்யாவையும் பட்டப்பகலில் ,நட்ட நடுரோட்டில் வெட்டிய காட்சியை குறைந்தது ஐந்துலட்சம்பெராவது தொலைக்காட்சியில் பார்த்திருப்பார்கள். குலை நடுங்க அதிர்ந்திருப்பார்கள்  . அதன் பிறகு .....

பார்த்தவர்கள் பார்த்தவர்களாகவே தான் இருப்பார்களென்று அந்த கொலைகாரப்பவிகளுக்கு தெரியும். எதையும் அவர்களால்செய்ய முடியாது என்பதும் தெரியும்.  இப்படிப்பட்ட கொடூரமான சம்பவங்களில் ஈடுபடுபவர்களை நீதிமன்றம்,வழக்கு என்று  இழுத்து ஒன்றுமில்லாமல் செய்ய முடியும் .

1944ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு எட்டு வயது இருக்கலாம். நெல்லை மாவட்டத்தின் உட்பகுதியில் உள்ள   குக்கிராமம்.

இந்தியா சுதந்திரம் பெறவில்லை . அருகில் உள்ள குடியிருப்பில் சிலர் வசித்து வந்தனர் நாங்கள் சிறுவர்கள் அந்த பக்கம் போகக்கூடாது என்று எங்களுக்கு சொல்லி இருந்தனர் அங்குள்ள ஒன்றிரண்டு பேர் கிராமத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த தண்டணை கால் நரம்பினை வெட்டிவிடுவது.,அதாவது குதிகாலுக்கும்   பாதத்திற்கும் இனைபாக இருக்கும் நரம்பை வெட்டி அந்த புண் ஆறும் வரை சிக்கிச்சை கொடுப்பார்கள் . பின்னர் விடுவிப்பார்கள். அவர்களுடைய கால் பாதம் தொங்கியபடி இருக்கும்.  கால்எலும்பு  இருப்பதால் .   நிற்க முடியும்.    பாதத்தை நினைத்தபடி அசைக்க முடியாது. ஆயுளுக்கும் அது தான் நிலைமை .

மற்றொரு தண்டனையும் உண்டு .  பத்து அல்லது பதினைந்து கிலோ எடை உள்ள பட்டிய கல்லை செதுக்குவார்கள்  அதில்துளை இட்டு  இரும்பு  சங்கிலியைகட்டுவார்கள் சங்கிலியின்மறுமுனைதண்டனைக்கு உரியவனின் காலில் பிணத்திருக்கும் . அவன் அந்த கல்லையும் இழுந்துக்கொண்டுதான் நடக்கவேண்டும்.  ஐந்து ஆறடி நீளம் உள்ள சங்கிலி ஆதலால் கல்லை மார்பளவு துக்கிகொண்டு சென்று குளியல் மற்றும் காலைகடன் களை  செய்து கொள்ளவேண்டும்.இது பிரிட்டிஷ் சட்டத்தில் உள்ளதா? இந்திய சட்டத்தில் உள்ளதா ? இல்ல கட்ட பஞ்சாயத்தா ? தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட தண்டனையை அனுபவத்தவர்களை நான் என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன் .   ,கொலை ,    கொள்ளை ,வழிப்பறி ,என்று மீண்டும் மீண்டும் ஈடுபடுபவர்களை இப்படி தண்ண்டிப்பார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன். 

ஆணவக் கொலைகாரர்களை இப்படி தண்டிக்கவேண்டும் . 

மனித உரிமைக்காரர்கள் கொஞ்சம் கண்டுக்காமல் இருந்தால் நடக்கலாம் .

 

0 comments: