Tuesday, April 19, 2016

சமயநல்லூர் செல்வராஜ் ...!!!





1972 ம் ஆண்டு கணக்கு கேட்டதற்காக தி.மு.க  கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்  கட்சியிலிருந்து  நீக்கப்பட்டார். தமிழகம் முழுவதிலும் இருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கொதித்து எழுந்தனர். தனியாக எம் .ஜி.ஆர் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். 

ஆர்வமிக்க சில ரசிகர்கள் மதுரையில் ஆரம்பித்தே விட்டனர். மதுரை   டி .பி .கே  ரோட்டில் உள்ள நகராட்சி விருந்தினர் மாளிகையின் முன்பு அன்று மாலையே கொடியேற்றி விட்டனர்.திமுக வின் இருவண்ணக்கொடியை கொண்டுவந்து அதில் அண்ணா வின  படத்தைஒட்டி கொடியேற்றினார்.இதற்கு தலைமை வகித்தவர் மதுரைகல்லூரி உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியராக இருந்த ஆசிரியர் சௌந்தர் ராஜனும். சமயநல்லூரைச் சேர்ந்த ஆரம்ப பள்ளி ஆசிரியரான செல்வராஜ் அவர்களும் தான்.

1977ம் ஆண்டு அ .தி.மு.க சட்டமன்ரதேர்தலில் போட்டி இட்டது. அதோடு மார்க்சிஸ்ட் கட்சியும், பார்வர்டு பிளாக்கும் இணைந்து போட்டி இட்டது.

நான் வசித்த சாந்திநகர் என்ற எல்.ஐ.சி காலனி சமயநல்லூர்(தனி) தொகுதியில் இருந்தது.அந்த தொகுதியில் அ .தி .மு.க  வேட்பாளராக செல்வராஜ் நிறுத்தப்பட்டார்.

அவருக்காக நாங்கள் தேர்தல்பணியில் இறங்கினோம். காலனி யில்வேட்பாளரை வீடு வீடாக அழைத்துச் சென்று ஆதரவு திரட்ட  முடிவு செய்தோம். ஒரு ஞாயிறு  பகல்நேரத்தில் அவர் வர ஏற்பாடாகியது.

அவர் வரும் பொது மதியம் 12மணி   ஆகிவிட்டது . சுட்டெரிக்கும் வெய்யிலில் அவரை அழித்துச் சென்றோம். சிறிது துரம் சென்ற பின்தான் கவனித்தேன் செல்வராஜ் காலில் மிதியடி இல்லாமல் நட ந்து வருகிறார் என்பதை. அவரை நிறுத்தி காலனி எங்கே என்று கேட்டென். லேசாக சிரித்துக் கொண்டே "இருக்கட்டும் ! நான் நடந்து வந்துருவேன் "என்றார் .

"காலணி எங்க ? '

"கார்ல விட்டுட்டு வந்திருக்கேன் "

நான் சிங்கப்பூர் சப்பல் போட்டிருந்தேன் .அதை கழட்டி" இத போட்டுக்கிட்டு வாருங்கள் " என்றேன் .

"இருக்கட்டும் "என்று தயங்கினார் .

"செல்வராஜூ ! இப்பம் இத போடலைனா நாங்க உங்க பின்னால வரமாட்டோம் " என்றதும் காலனியை பொட சம்மதிச்சார்.

தேர்தல் நடந்தது .

செல்வராஜ் வெற்றி பெற்றார்.

  எனக்கும் பாடம் கிடைத்தது ! 

"உச்சி வெயிலில் காலுக்கு  செருப்பில்லாமல் நடப்பது கடினமானது " என்று .

 
 
  






2 comments:

மோகன்ஜி said...
This comment has been removed by the author.
மோகன்ஜி said...

நீங்கள் செருப்பைக் கொடுத்துவிட்டு நல்ல பாடம் தான் கற்றீர்கள்!