Thursday, September 01, 2016




இன்சூரன்சு அரசுடைமையில் ,

விஜயராகவன் அவர்களின் ,

மிகசிறந்த பங்கு ........!!!




எஸ்.எஸ். விஜயராகவன் .தமிழகத்து இளைஞர் . அறிவு ஜிவி . இடதுசாரி மனோபாவம் கொண்டவர். 50 ம் ஆண்டுகளில் மத்திய அரசின் நிதி துறையில் பணியாற்றினார்.

சிம்லாவில் உள்ள இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வேலை . இன்சூரன்சு  துறையில் அப்போது கிட்டத்தட்ட 240க்கும் மேற்பட்ட கம்பெனிகள்  இருந்தன. அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பணி அவருடைய துறையைச சேர்ந்ததாகும். நிலைமை அவரை நிரம்ப வருத்தியது.ஒருஇருவதுகம்பெனிகள்தான்ஒழுங்காகஇருந்தன.மற்றவை,  பிராடு ,பித்தலாட்டம்,நிதி மோசடி , என்று மக்கள் பணத்தை சூறையாடிக்கொண்டிருந்தன.

இளம் விஜயராகவானால் தாங்கி கொள்ளமுடியவில்லை. தனியார் கம்பெனிகள் செய்யும் மோசடிகளையும்,பித்தலாட்டங்களையும் ஆவணப்படுத்தினார்.அறிக்கை யாக்கினார்.அதனை என்ன செய்ய ? 

அப்போது "காங்கிரஸ் சோசலிசம் "என்றபத்திரிக்கைநடந்துவந்ததுஅதன் ஆசிரியராக மாளவியா என்பவர் இருந்தார். விஜய ராகவன் தான் எழுதியதை  அவருக்கு அனுப்பினார். அதனை படித்துப்பார்த்த மாளவியா பத்திரிகையில் தொடர் கட்டுரையாக பிரசுரித்தார்.இது  இந்திய அரசியல் வானில் பெரும்   சூறாவளியைகிளப்பியது.இன்சூரன்சு துறையை சீர்திருத்த வேண்டும் ,அரசு உடனடியாக தலையிட வேண்டும் , இன்சூரன்ஸ் துறையை அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. 

அப்போது நிதி அமைச்சராக இருந்தவரசி.டி தேஷ்முக். உடனடியாக சிம்லாவிலிருந்த விஜய ராகவனை ரகசியமாக தன வீட்டிற்கு வரவழைத்தார். மாலை நேரங்களில் அவரோடு இது பற்றி விவாதித்தார். என்ன என்ன செய்யவேண்டுமென்பதுபற்றி விவாதித்தார்கள். இந்த விவாதத்தில் விஜய ராகவனுக்கு உதவியாக நாகர் கோவிலை சேர்ந்த நாராயணன் என்ற இளைஞர் உதவியாக இருந்தார்.( பின் நாளில்  இந்த நாராயணன்  எல்.ஐ.சி.ன் சேர்மனாக இருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.)

விஜய ராகவன் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் தொடர்ந்தன. ராமகிருஷ்ண டால்மியா என்ற இன்சூரன்சு கம்பெனி முதலாளி கைது செய்யப்பட்டார்.இந்திய வரலாற்றில் முன்னும்பின்னும் எப்போதும் இல்லாத அளவுக்கு ஓரு முதலாளி தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்  ராமகிருஷ்ண டா;லிமியா மட்டுமே. விஜயராகவன் அவ்வளவு நேர்த்தியாக ஆவணங்களை தொகுத்திருந்தார்.

இன்சூரன்ஸ் சட்ட திருத்தம், மற்றும் அரசுடமை ஆக்குவது பற்றி நிதி அமைசருக்கு விஜயராகவன் சட்ட திருத்தம் கொண்டுவர ஆலோசனைகளை அளித்தார்.

நிதித்துறை செயலாளர் எச  .எம் படேல், கவுல்,எ.ராஜகோபாலன் ஆகியோரோடு ரகசியமாக ஆலோசனை நடத்திய அமைசர் தேஷ்முக் இன்சூரன் துறையை அரசுடமையாக்கும் முடிவை மேற்கொண்டார்.

இதே போல் தபால்  துறையின் வசம் இருந்த இன்சூரன்சும் மக்களுடையது என்று வாதிட்டு அதிலும் சீர்திருத்தங்களை  செய்ய விஜயராகவன் ஆலோசனைகளை தந்தார்.

அலுவல் காரணமாக முகாம் ( camp ) சென்றிருந்த விஜயராகவனை பாம்பு தீண்டிவிட்டது. விஷ முறிவு மருந்து கொடுத்த மருத்துவர்கள் அவர் இரவு முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டும் என்று கூறினர்.

தூங்காமல் இருக்க துணையாக கார்ல் மார்க்சின் நுலை இரவு முழுவதும் விஜய ராகவன் படித்துக் கொண்டிருந்தார்.

விஷமுறிவு மருந்து .பயன் தரவில்லை. அவர் உயிர் பிரிந்தது.

அவர் கையில் இருந்த மார்க்சின் நூல் பிரியவே இல்லை .



ஆசிரியர் இயக்கத்தின் முத்த தலைவர்களில் ஒருவரான ச.சீ .ராஜ கோபாலன், மற்றும் மார்க்ஸ் நூலக அமைப்பாளரான ச .சீ கண்ணன் ஆகியோரின் இளைய சகோதரர் தான் தோழர் . விஜயராகவன் . 

இறக்கும் பொது அவர் வயது 34 !!! 

 


0 comments: