Monday, September 19, 2016






சமஸ்கிருதத்தை ,

பா.ஜ .க  வால் ,

நட்டமாக நிறுத்தமுடியாது ....!!! ---6




ராபர்ட் கால்வேடு ல் பாதிரியார் அயர்லாந்தில் பிறந்தவர் . மரபாய்ந்த கிறிஸ்தவ குடும்பத்தினரான அவர் தன 24 வயதில் இந்தியா வந்தார்நெல்லை மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் திருசபை பணியில் ஈடுபட்டார். மதமாற்றம் அவருடைய முக்கிய நோக்கமாக இருந்தது.

நொபிலிக்கு கிடைத்த அனுபவமே  கால்வேடு ம் பெற்றார்மதமாற்றத்திற்கு இடஞ்ச்சலாக இருந்ததும்.பிராம்மணியமும்,என்பதை உணர்ந்தார். அவர்களின் "விதி ,மறுபிறவி " கோட்பாடு இந்தமக்களை கவ்விப்பிடித்து வைத்திருப்பதை அறிந்தார்.

"நீ இன்று  அனுபவிப்பது போன பிறவியில் செய்த பாவ புண்ணியத்தின்  பலன்இந்த பிறவியில் நல்லது செய்து அடுத்தபிறவியிலாவது நன்மை அடைய காத்திரு " என்பது அவ்வளவு பலமாக அவர்கள் மனதில் பதிந்திருந்தது. 

இதற்கான சடங்குகளை செய்விக்கும் புரோகிதர்கள் (பிராமணர்கள்)மீதுள்ள நம்பிக்கை .

ராமேஸ்வரத்திலிருந்து -காசிவரை அவர்கள்    உசசரிக்கும்  சம்ஸ்கிருதம்.

இதனை உடைக்காமல் மத மாற்றம் சாத்தியமில்லை என்று கருதின கால் டுவேல்  மொழி  அறிஞரம் ஆவார்.அவர் எழுதிய  ஒப்பிலக்கண நூல் முக்கியமானது. "தமிழ்,தெலுங்கு ,கன்னடம்மலையாளமாகியவை திராவிட குடுமபத்தை சேர்ந்தவை. துளு வும் அப்படியே.பாகிஸ்தானிலும்,ஆப்கானிஸ்தானத்திலும் பேசப்படும் இரண்டு மொழிகளும் திராவிட மொழிகளே இந்த மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழ்.சம்ஸ்கிருதம் ஆரியமொழி. அது பிராமணர்களுக்கானது . "  என்று அறிவித்தார்.

( கால்துவேல் மொழி அறிஞர்தான்   அதே சமயம் .அவர் கிஸ்துவ பிரசுசாராரு ம் கூட  . அவருடைய கருத்துக்களில்  கிறிஸ்துவ நன்மை மேலோங்கி இருக்கும் என்று சார்லஸ் -இ-க்ரோவர் என்பவர் விமரிசித்தார் தென் இந்திய கிராமிய பாடல்கள் என்ற நூலை எழு திய  குரோவர் மொழி ஆராய்சசி ஆளர் )   

இதே சமயத்தில் கிழக்கிந்திய  கம்பெனியிட மிருந்து பிரிட்டிஷாரின்  நேரடி பார்வையிலஇந்தியாவந்தது.படிப்பறிவுள்ள மேல்சாதி பிராம்மணர்கள் அரசு உத்தியோகம். பதவி களை  ஆக்கிரமித்தனர் .செல்வாக்கோடு வாழ்ந்தனர் . பிரிட்டிஷாரின் கல்வி கொள்கையால் மிக கொஞ்ச்மாக வேணும் பயன் பெற்ற பிரம்மானர் அல்லாத மேல்சாதியினர் தங்களுக்கும்பதவிகள் கேட்டனர்.தங்கள் நலனை  பாதுகாக்க நலஉரிமை சங்கத்தை ஆரம்பித்தனர்.. பின்னாளில் இதுதான் நீதி கடசியாக  வளர்ந்தது.இந்திய சுதந்திரத்திற்கான முழக்கம் பலமாக கேட்க ஆரம்பித்தது.இது பிரிட்டிஷாருக்கு பயத்தை ஏற்படுத்தியது நீதி  கட்ச்சியோ பிராம்மண எதிர்ப்பை முதன்மைப்படுத்தி சுதந்திர கோரிக்கையை பின்னுக்கு தள்ளியது.இது ஆளும் பிரிட்டிஷாருக்கு மகிழ்சசியை அளித்தது.

இதனால் பிரிட்டிஷார்- நீதி கடசி- கிறிஸ்தவம் என்று ஒரு அணி கிடைத்தது. பிராமண எதிர்ப்பும் ,சம்ஸ்கிருத அழிப்பும் சிறப்பாக நடந்தது.

இந்த அணியின் காரணமாக பிராமணர் அல்லாத பிற மேல்சாதிஒற்றுமை சாத்தியமானது.பிராமணர் அல்லாதவர்களுக்கான சில சலுகைகளும்,உரிமைகளும் கிடைத்தன.

(தொடரும்)  

1 comments:

சிவகுமாரன் said...

இது போன்ற தகவல்களை உங்களால் மட்டுமே தர முடியும். நன்றி அய்யா