Wednesday, September 27, 2017

(மீள் பதிவு )






" புளுகுணிகள் "





நான் வசிக்கும் அடுக்ககத்தில் ஐந்து மாடிகள் உள்ளன> அந்த மனிதர் ஐந்தாவதுமாடியில் இருந்தார்.  ஜிப்பா,பைஜாமாபோட்டிருப்பார். சிலசமயம் வடநாட்டு பஞ்ச்கசம் அணிந்திருப்பார். நெற்றியில் சந்தனகோடு நடுவில் குங்குமம்.சுத்தமான சுயம் சேவக். இவரைப் பொறுத்தவரை  தான் சுயம் சேவக் என்பதை காட்டிக்கொள்வதில் பிரியம் கொண்டவர்.


எங்கள்  யார்ட்டிவீ ட்டி லாவது  பூஜைமணி அடிக்கும்   சத்தம் கேட்டால் அந்த வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்து விடுவார்அவருக்கு தெரிந்த பாடல்கள்,ஸ்லோகங்கள் என்று பாட ஆரம்பித்து விடுவார்.சில சமயம்பிரவசனங்கள்செய்ய ஆரம்பித்து விடுவார்.பாதி  தப்பாக இருக்கும். இங்கு விநாயக சதுர்த்தி, விஜய தசமி என்று கூட்டு வழிபாடு நடக்கும்.பந்தலில் அமர்ந்தால்  லேசில் எழந்திரிக்க மாட்டார்.   


நான் காலையில் "இந்து" பத்திரிக்கை படிப்பவன். ஹைதிராபாத் பதிப்பு. நேற்றைய பதிப்பு நாளை வரும். தலையங்கம், நடுப்பக்க  கட்டுரை, சிறப்பு கட்டுரை ஆகியவற்றுக்காக வாங்குவேன். சிலசமயம் வரவில்லை என்றால் கீழே சென்று செக்க்யுரிட்டியிடம் இருந்து பெற்றுக்கொள்வேன்.


ஒருநாள் அப்படி வாங்கி வரும்போது இந்தமனிதர்  எதிர்ப்பட்டு விட்டார். "இந்து" பத்திரிகையா? என்று விசாரித்தார்.


"ஆம்" "


"நானும் வாங்க வேண்டும் "


"வாங்குங்களேன் "


"இந்து" தர்மம் பற்றியும் இந்து மதம் பற்றியும் நிறைய கட்டுரைகள் வரும் .அதனால்தான்"


இந்த கிறுக்கன் என்ன சொல்கிறான் என்று யோசித்தேன்..பத்திரிகையின் பெயர் " இந்து"ஆகவே அப்படித்தான் இருக்குமென்று நினைத்து விட்டான்.நின்றால்  ஆபத்து என்று கருதி லிப்டுக்குள் புகுந்து  விட்டேன்.


மதியம் தான் கட்டுரைகளை படிப்பது வழக்கம் . ஒருநாள்  அப்படி படித்துக்கொண்டிருந்தேன்.இந்தமனுஷன் எட்டி பார்த்தார் .  " வாருங்கள்"என்றேன்  அமர்ந்தார்.


"நான் சிறு வயதிலேயே "இந்து" ஆசிரியர் சொற்பொழிவை "ரஷிம்பாக்கில்" கேட்டிருக்கிறேன்.அருமையாக பேசுவார் : "


"யாரு ? அவர் N .ராம் .அவருக்கு வயது 60 அல்லது 61 தானே இருக்கும் !" 


ரஷீம் பாக் பாக் எனபது ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் இருக்கும் இடத்திலுள்ள மைதானம்.


"ஆமாம் இல்ல ! அவருடைய தந்தை நாராயண் !'


"அவர் பெயர் நரசிம்மன்."


"ஆமாம் .அவர்தான்.  மைதானத்தில் பெரும் கூட்டம். அவர் அற்புதமாக பேசினார்.அருகில் அவர்மகன் சின்ன பையன் ராம் பூணுல் போட்டு நின்று கொண்டு சுலோகம் சொன்னான் " 


என்முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்கஆரம்பித்து விட்டது. "இந்தாங்க ! போன் " என்று கூறி முத்து மினாடசி கை  பேசிய நீட்டினாள். எடுத்துக்கொண்டுவெளியேறினேன். போன் சத்தமேயில்லை ." அந்த ரூம்ல போய் இருங்க .இந்த ஆளு போனப்புரேம் வாருங்க " .என்று சமாளித்தார் .


மறை ந்த தலைவர் ஏ.பாலசுப்பிரமணியம் கூறுவார் ." ஒரு கூடை செங்கல்லும் "பிடாரி"னா என்ன செய்யமுடியும்டா சாமா ? "என்பார் 


"ஒரு அரசன்  இருந்தான். தனக்கே தனக்கு என்று அரண்மனை கட்டினான் .அவன் குடிபுகுமுன் அங்கு பேய் குடிபுகுந்து விட்டது. மலையாள தேசத்திலிருந்து மந்திரவாதியா அழைத்து  பேய் ஓட்ட ஏற்பாடு செய்தான்.மந்திரவாதி என்ன  செய்தும் பேயை ஓட்டமுடியவில்லை.


"மகாராஜா ! நீங்கள் அரண்மனை சுவருக்கு செங்கல் வாங்கினீர்கள் இல்லையா ? அவை அத்தனையிலும் பேய் புகுந்துவிட்டதுஇதனை ஓட்டமுடியாது " என்றான் மந்திர வாதி..


நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலம் போனார் "அங்கு உங்கள்நாட்டு இளவரசி ருக்மனியை எங்கள் கிருஷ்ணன் மணந்தான் " என்றார் நாகபுரியில் உள்ள 8ம் வகுப்பு சிறுவன் " விதர்ப்ப தேசத்து இளவரசி ருக்மணி  அது நாகபுரியை சுற்றி உள்ள தேசம்."என்று பிரதமருக்கு பதிலளித்தான்.


பிரதமராகுமுன் மோடி திருசி  வந்தார்." வ.உ.சி தலைமையில்நடந்த உப்புசத்த்யாக்கிரகம் "என்று கூறி புதிய சரித்திரமெழுதினார் ..


கூடை செங்கல்லும் பிடாரி என்றால் என்ன செய்ய முடியும்.!!!


அறியாமை வேறு .!


புளுகுவது வேறு !!


இவர்கள் புளுகுணிகள்.!!!



0 comments: