Friday, August 24, 2018








ஆடிட்டர் பேசியதில் ,

பாதிதான் உண்மை  !

மீதி .................................!!!




சமீபத்தில் மதுரையில் ஆடிட்டர்கள் கூட்டம் ஒன்று நடந்தது.அதில் வட மாநிலத்திலிருந்து வந்த ஆடிட்டர் ராஜிவ் குமார் என்பவர் பேசினார் .கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய ஆட் சி செய்த நடவடிக்கைகள் பற்றி வானளாவ புகழ்ந்து தள்ளினார்.இது போல் இந்தியாவில் எந்த ஒரு ஆட்ச்சியும் செயல்பட்டதில்லை என்று பேசினார் . அவர் ஆங்கிலத்தில் பேசினதை தமிழில் ஒருவர் மொழிபெயர்த்தார்.

அந்த மொழி பெயர்ப்பை வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.

" 2004ம் ஆண்டிலிருந்து 2014 ஆண்டுவரை வங்கிகள் 38 லட் சம் கோடி கடன் கொடுத்துள்ளது. மன்மோகன் சிங்  மற்றவர்கள் வாய் வார்த்தையாக  சொன்னதின் பேரில் இந்த கடன் கொடுக்கப்பட்டுள்ளது>ஒருநாட்டி ன் பொருளாதாரத்திற்கு வங்கிகள்   எவ்வ்ளவு முக்கியமானவை என்பது நமக்கு தெரியும் .அந்தக்கடன் வசூலாகவில்லை> அதனை வசூலிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது."  என்று அடித்தார்.

வங்கிகள் நாட்டுடமையானது 1969ல். ஏழைஎளியவர்களுக்கான "லொன்மேளா "நினைவிருக்கலாம் .முதலிலேயே முதலாளிகளுக்கு கடன் கொடுத்தால்  சிக்கல் வரும் என்று எளியவர்களுக்கு "கிள்ளி"கொடுத்தார்கள்.பின்னர் முதலாளி மார்களுக்கு அள்ளிகொடுக்க ஆரம்பித்தார்கள் .

இதில் காங்கிரஸ்,பாஜாக என்று பேதம் பார்க்க முடியாது. மோடியின் விமானப்பயணத்தில் முதல் சிட்டு அதா ணிகளுக்கும் அம்பாணி களுக்கும் தான் .அதாணிக்கு ஆஸ்திரேலிய சுரங்கத்திற்காக ஸ்டேட்வங்கி 6000 கோடி கொடுக்க பிரதமர் உத்திர விட்டார்> வங்கி சேர்மன் முடியாது என்றார். அவர் வெளிநாட்டு சென்றிருக்கும் பொது ஒரு குட்டி ஆபிசர் முலம் கடனை அளித்தார் நமது நிதி அமைசசர் !

ராஜிவ் குமார்ப்பேசும் பொது சேவை மற்றும் சரக்கு வரி பற்றி குறிப்பிட்டார். அத்தனையும் half truth ! 2019ம் ஆண்டு தேர்தலுக்கான பிரசாரத்தில் இந்த படித்த தொழில் வல்லுநர்களை பயன் படுத்த போகிறார்கள் . அதற்கான பிரம்மாண்டமான தயாரிப்பு வேலைகள் ஆரம்ப மாகிவிட்டன.


0 comments: