Friday, August 10, 2018








அரசு ஊழியர் ஊதியமும் ,

ஆட்ச்சியாளர்களின் 

அறியாமையும்...!!!



பள்ளி ஆசிரியருக்கு மாதம் 82000 சம்பளமா? என்று பொருமி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.!

பட்டறிவும் கிடையாது ! படிப்பறிவும் கிடையாது ! என்ன செய்ய ?

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் நோக்கங்களில் ஒன்று இந்திய குடிமகன் ஒவ்வொருவனுக்கும் வாழ்வதற்கான ஊதியம் (livingwage) கொடுக்கப்படவேண்டும் என்பதாகும்.

இன்று livingwage  கொடுக்கப்படவில்லை. சரி ! நியாயமான  ஊதியமாவது (fairwage )கொடுக்கப்படுகிறதா ? இல்லை.அதுவும் சரி. குறைந்த பட்ச ஊதி யமாவது (minimumwage )கொடுக்கப்படுகிறதா ? இல்லை.


(போலி) தொழிற்சங்க தலைவர்களுக்கே இது என்ன என்று தெரியாது .

இந்தியா சுதந்திரம் அடைந்த பொது தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பது பற்றி விவாதம் நடந்தது .தொழிலாளர்கள் முதலாளிமார்,மற்றும் அரசு பிரதிநிதிகள் அடங்கிய கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் இது பற்றி விவாதித்ததும்> 1957ம் ஆண்டு இந்த கமிஷன் முடிவு செய்தது. இதனை முத்தரப்பு மாநாட்டு முடிவு என்பார்கள்.

ஒரு தொழிலாளி நாள் முழுவதும் வேலை செய்கிறான் மறுநாள் அவன் வந்து வேலை செய்ய அவன் முதல நாள் உழத்த சக்தியை  மீண்டும் பெற்றால் தான் முடியும். அந்த சக்தியை கலோரி என்பார்கள்> ஒருமனிதனுக்கு 2400கலோரி ஒவ்வொருநாளும் வேண்டும்.இந்த எரிசக்தியை கொடுக்க அவர் என்ன உணவை சாப்பிட வேண்டும் என்று கணக்கிட்டார்கள்> அதற்கான பணமதிப்பீட்டை சொன்னார்கள்> இது தவிர தொழிலாளிக்கு சமூக பொறுப்பு இருக்கிறது.அதன்படி அவன் அவன் மனைவி தாய் தந்தை  ஆகியோரையும் கவனிக்க வேண்டும் இது தவிர அவன் குழந்தை  !

இவர்களுக்கான உணவு உடை,தங்குமிடம் என்று சகலமும் கணக்கிடப்பட்டதுஇதன்படி  அவனுக்கு ஊதியம் நிணயிக்கப்பட்டது. இதைத்தான் டாக்டர் அக்ராய்டு பார்முலா என்பார்கள்.இந்த livingwage ஐ எங்களால் கொடுக்க முடியாது என்று முதலாளிமார் சண்டித்தனம் செய்தார்கள் 

முதலாளி மார்களால் கொடுக்க எவ்வளவு முடியும் என்ற பொது நியாயமான ஊதியம் (fairwage )என்ற கருத்து தோன்றியது. முதலாளிமார் இத்தனையும் கொடுக்க முடியாது என்கிறார்கள் .

அதன்பிறகுதான் minimumwage என்று வந்தது . இந்த மினிமம் wage கூட இன்றும் எந்த  தோழிலாளிக்கும் கொடுக்கப்படவில்லை 

முத்தரப்பட்டு மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. அரசு மட்டுமாவது அதனை நடைமுறைப்படுத்தவேண்டும் ஏனென்றால் அரசு ஒரு modelemployar ஆக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

kighwage islanders என்று அழை க்கப்படும் வங்கி எல் ஐ சி ஊழியர்களுக்கும் கூ ட இன்றும் குறைந்த பட்டாசு ஊதியம் அளிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

கிராமத்து வாத்தியாருக்கு எம்பிட்டு சம்பளம் என்று படித்த   நாமே வாய பிளக்கும் பொது எடப்பாடி சொல்வது ஆ ச்சாரியமில்லை.

நாம் நமக்கு கற்றுக்கொள்ளவே ஏராளம் இருக்கிறது> தோழர்களே !!!


0 comments: