skip to main |
skip to sidebar
பிரான்ஸ் நாட்டின் ,
நிர்வாக சட்டம் ..... !!!
(Administerative law )
மக்கள் பணியில் ஈடுபடும் வ்வொரு நாட்டு அரசும் நிர்வாகத்தின் மூலமாகவும், அரசு நிர்வாகிகளின் மூலமாகவும் பணி செய்கிறது.
இந்த பணியினை செய்ய வேண்டிய நேரத்தில், செய்ய வேண்டிய முறையில் செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் இருந்தால் அதனால் பொது மக்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். தவறு செய்த நிர்வாகம் தண்டிக்கப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் தவறு செய்த நிர்வாகியும் தண்டிக்கப்படவேண்டும். இதனைத்தான் நிர்வாக சட்டம் Administerative law என்கிறார்கள்> இப்படிப்பட்ட சட்டம் பிரான்ஸ் நாட்டில் நடைமுறையிலுள்ளது.
இதே போன்ற சட்டம் என்ன காரணத்தாலோ இந்தியாவில் இல்லை.
சமீபத்தில் "ரஃபேல் " ஊழல் அம்பலமானது இதில் சம்மந்தப்பட்டுள்ளதாக கருதப்படும் அம்பானி கம்பெனிக்கு பிரான்ஸ் நாட்டு நிர்வாகம் கோடிக்கணக்கான ரூ மதிப்புள்ள வரிசலுகையை அளித்துள்ளது .இந்த சலுகை ரஃபேல் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு கொடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நா ட்டு ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன .
சம்மபந்தப்பட்ட நிர்வாகமும், நிர்வாகிகளும் நிர்வாக சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மாட்டிக்கொண்ட நிர்வாகிகள் இதன் முலகர்த்தாவான இந்திய அரசியல்வாதிகளை மாட்டி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அரூபத்தின் அற்புத வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.!!
இனிமேல் தான் வேடிக்கை இருக்கிறது !!!
0 comments:
Post a Comment