Monday, April 29, 2019






"புனை" பெயரும் ,

பிரபல எழுத்தாளர்களும் ...!!!




"கணையாழி " என்று ஒரு தமிழ் பத்திரிக்கை டெல்லியிலிருந்து வந்து கொண்டிருந்தது. பின்னர் அது சென்னைக்கு மாறியது மாதம் ஒருமுறை வந்து கொண்டிருந்த அந்த பத்திரிகை  இப்போதும் வருகிறதா  தெரியவில்லை.

அந்த பத்திரிகையில் "முஸ்தாபா " என்ற பெயரில்  மாதம் ஒரு கட்டுரை வரும் .ஆரம்ப காலத்தில் அசோகா மித்திரன் அதனை எழுதி வந்தார்  பின்னர் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அதே பெயரில் எழுதி வந்தார்> அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் அதே பெயரில் எழுதினர் .

1950 ஆண்டுகளில் "குமுதம் " பத்திரிக்கை வர ஆரம்பித்தது.தமிழ் பத்திரிக்கை உலகையே புரட்டிப்போட்ட அந்த பத்திரிக்கை ஆரம்பத்தில் மாதம் ஒன்று தான் வரும் பின்னர் அதனை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலும் 15ம் தேதியிலும் மாதம் இரண்டாக கொண்டு வந்தார்கள்> அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி ,10 ம் தேதி, 20 தேதி என்று மாதம் மூன்றாக்கினார்கள் .பின்னர்  ஒவ்வொரு வியாழக்கிழமையும் வரும் வாராந்தரி யாக கொண்டுவந்தார்கள்.

"அ"ண்ணாமலை, "ர"ங்கராஜன், "சு"ந்தரேசன் என்ற மூவர் தான் ஆசிரியர்களாக இருந்தார்கள் ."அரசு "  என்ற புனை பெயரில் குமுதத்தில் கேள்வி பதில் ஒருகாலத்தில் பிரபலம்.அதனை இந்த மூவரும் தான் எழுதிவந்தார்கள் .

தவிர எஸ் ஏ பி , பாக்கியம் ராமசாமி, புனிதன் என்ற பெயரிலும் இந்த மூவரும் சிறுகதைகள் தொடர்கதைகள் எழுதி வந்தனர் ஒருகாலத்தில் இந்தியாவில் மிக அதிகமான விற்பனைகொண்ட ஒரே பத்திரிகையாக திகழ்ந்தது.

ஆன்மிக வாதிகளும் புனை பெயர்களில் எழுதி வந்துள்ளனர். தென் தமிழகத்தின் பாரம்பரியமிக்க  மடாதி பதி ஒருவர் அவ்வ்ப்போது "ஆதி " என்ற புனைபெயரில் எழுதியுள்ளார். 

அவர் வேறு யாருமல்ல !

முத்தவர் !   குன்றக்குடி அடிகளார்தான் !!

"தீக்கதிரில் " மட்டுமே அவர் எழுதிவந்தார்!!!


 

0 comments: