Wednesday, April 17, 2019



எழுத்தாளர்கள்,

கலைஞர்கள் , 

வணிகர்கள் ,

ஆகியோருக்கு

நன்றிகள்...!!!

வணிகர்கள் சங்க தலைவர் வெள்ளையன். அவர் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். " பொதுவாக எங்கள் சங்கம் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவது வழக்கம் இல்லை.ஆனா ல் இந்தமுறை  நாங்கள் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்களித்து மார்க்சிஸ்ட் கடசி வேட்பாளர்களை வெற்றி பெற  செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளோம் .காரணம் அவர்களை எங்கள் பிரச் சினைக்காக கடுமையாக போராடினார்கள் " என்று கூறியுள்ளார். 

மதுரையில் சு.வெங்கடேசன் அவர்களுக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர்  ஒரு மாதத்திற்கு மேல் பிரச் சாரஞ் செய்து தேர்தலில் நேரடியாக  தங்கள் பங்கை செலுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள்,கவிஞர்கள் ,நாடக நடிகர்கள் ,திரை உலக பிரபலங்கள் ,ஓவியர்கள், என்று மதுரை நகரத்தையும் மேலூரை  யும்  தெருத்தெருவாக சுற்றிவந்து சு.வெங்கடேசனுக்காக பிரசசாரம் செய்தனர்..

வாக்காளர்கள் தங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,கவிஞர்கள் நேரில் வந்து  கேட்டதை சொல்லி சொல்லி  பரவசப்படுகிறார்கள்.

இவை சு வே அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு பழைய நினைவுகள்தட்டு கின்றன.

தோழர் நன்மாறன் எழுத்தாளர் சங்கத்தின் செயல்விரரும் கூட.கவிஞர் .மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர் குழுவில் நாடகத்தில் நடித்தவர் .எளிமையான மனிதர்>  மதுரை கிழக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட்  கட்சி சார்பாக சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டார்.சங்கத்தலைவர்  கே.முத்தையா அவர்களை தலைமையில் நடந்த கூட்டத்தில் நன்மாறனை ஆதரித்து நாம் செயல்பட வேண்டும் என்று நான் யோசனை சொன்னேன். அப்போது அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை..

"காஸ்யபன் ! கவலைப்படாதீங்க ! நாம இன்னும் அரசியல் படுத்தவேண்டும் "  என்றார் கே முத்தையா அவர்கள்.

அவர் விருப்பத்தை இன்றைய தமுஎகச தலைமை அமோகமாக நிறைவேற்றியுள்ளது.

எல்லாப்   புகழும்  தமுஎசவுக்கே!!!

0 comments: