Monday, November 11, 2019





"பாபர்மசூதி" தீர்ப்பும் ,

இயக்குனர் அமீரின் 

கருத்தும் .....!!!


உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி  பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். "பருத்தி வீரன் " பட இயக்குனர் சமூக வலைத்தளத்தில்  பகிரங்கமாக தன கருத்தை சொல்லிவருபவர். அவர்  தீர்ப்பு பற்றி  தன்  கருத்தை சொல்லியிருக்கிறார் .

மிகவும் வித்தியாசமான அதேசமயம் ,முதிர்சசியான கருத்தினை சொல்லி இருக்கிறார் ..

" கொலைக்கு கொலை என்பதுஇஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளது தன் மகன் கொலைசெய்யப்பட்டான் என்றால் நான் ரத்த உறவுள்ள நான்  கொலை செய்ய உரிமை உள்ளவன்> அதற்காக யாரையும் கொலை செய்வ தில்லை . என்மகனை கோலா செய்தவனை கொலைசெய்ய எனக்கு இஸ்லாமிய சட்டமனுமதி அளிக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் இந்த சட்டம் நடைறைப்படுத்தப்படுகிறது "

"இது ஒருவகை நியாயம் . கொலைசெய்தவர் தவறாக  நடந்து விட்டது - இதற்காக நான் வருத்தப்படுகிறேன்.  ஏற்படும் நட்டத்தை பணம் மூலம் நிவர்த்தி செய்கிறேன் என்றும் சொல்லலாம்.சம்மந்தப்பட்டவர்கள் அவரை மன்னித்து அதனை ஏற்றுக்கொள்ளலாம்.இதுவும் இஸ்லாமிய சட்டத்தில் உள்ளது> "

"இந்த இரண்டும் தவிர மூன்றாவதாக ஒன்றும் உள்ளது.மகனை இழந்தவர் அந்த கொலையாளியை மன்னிக்கலாம் . இறைவன் அவருக்கு நல்லதையே செய்வான்"

"பாபர் மசூதி இடிக்கப்பட்டுவிட்டது . அந்த இடம் அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அறக்கட்டகை மூலம் அரசு அங்கு ஒரு கோவிலக்கட்ட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்துக்களின் நம்பிக்கையை மேலிறுத்தி  இப்படிகூறுகிறார்கள்.இது சரியா தப்பா  என்பதைவிட நானுறு ஆண்டுகளாக நாம் அனுபவித்தோம். இப்போது அமைதிக்காக அவர்கள் அனுபவிக்கட்டுமே . இஸ்லாம் வழிபாட்டுத்தலம் தான் வேண்டும் அது எந்த இடம் என்பதை சொல்வதில்லை " என்றார் .

மிகவும் வித்தியாசமானப்பார்வையை கொண்டிருக்கிறார் .

"அதேசமயம் இந்த இடி ப்பு விஷயம் இதோடு நின்றுவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார், சு.சாமி வகையறாக்கள் இந்தியா  முழுமைக்கும் ஒரு பட்டியலை தயார் நிலையில் வைத்துக்கொண்டு திரிகிறார்கள்> சமரசக்குழவில் இஸ்லாமியர் சார்பாக இத்தொடு  முடிவுக்கு வரவேண்டும் என்று உத்திரவாதம்  கேட்டபோது எதிர்தரப்பினர் அளிக்க மறுத்துவிட்டனர்" என்பதையும் அமீர் சுட்டிக்காட்டியுள்ளார் .

பெரும்பாலான இந்துக்கள் அப்படி ஒன்று நடப்பதை ஆதரிக்கமாட்டார்கள் என்ற தன்  நமபிக்கையும் அமீர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அமீருக்கு நம் பாராட்டுக்கள்.


0 comments: