எங்கள் ஆழகேசன் சார் .....!!!
1942ம் ஆண்டு நான் முதல் வகுப்பில் சேர்ந்தேன்! அது நகராட்சி பள்ளி! அப்பொது பிரிட்டிஷ் ஆட்சி !
காலை எட்டரை மணிக்கு பள்ளி சென்று விடுவோம்! இறை வணக்கம் உண்டு! "ஆண்டவரே ! ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் அரசரை காப்பாற்றும் ! (god save our king ) என்று பாடிவிட்டுத்தான் "பொன்னார் மேனியனே " என்று படுவோம்!
பெரியகிளாசு அண்ணன் மார்கள் "அறம் செய விரும்பு " என்று ஆரம்பிக்க நாங்கள் திரும்பிச் சொல்லுவோம்! கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,குழிப்பெருக்கம்,என்று வாய்ப்பாட்டு சொல்லுவோம்! அதன் பின் தான் வகுப்புக்குள் செல்லுவோம்!
அப்போதெல்லாம் ஆரம்பப்பள்ளி ,நடுநிலைப்பள்ளி ,உயர்நிலை பள்ளி என்றுதான் உண்டு !
நான் தி.லி டவுணில் உள்ள மந்திர மூர்த்தி உயர்நிலைப்பள்ளியில் ஆறாப்புசெர்ந்தேன்!
வாரத்திற்கு மூன்று நாள்,ஓவியம்,கைவினை,நல்லொழுக்கம் என்று வகுப்புகளுண்டு ! மூன்று வகுப்புகளையும் அழகேசன் சார் தான் எடுப்பார்!
கோடு வரைய ,வட்டம் போட , அழுத்தமான கோடு, மெலிதான கோடு, கோட்டின் நிழல் என்று சொல்லிக் கொடுப்பார்!
கைவினை வகுப்பில்,உளி,சுத்தியல்,,இழைப்புளி,திருப்புளி ,திருகாணி ஆகியவற்றைக் கொண்டுவந்து அதன எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுப்பார்!
நல்லோழுக்கக்கிளாசில் நல்ல நல்லகதைகளை சொல்லுவார்! ஏழாம் வகுப்பில் எங்களுக்கு "ஏழை படும்பாடு " என்றகதையச் சொல்லுவார்! சோல்லும் போது அவர் குரல் பிசிறடிக்கும்! "uncle toms cabin " கதையச் சொல்லும் பொது எங்களுக்கும் அழுகைவரும் !
எட்டாப்பு படிக்கும் போது சிறு புத்தகங்களை படிக்கச் சொல்லுவார்! 20-30 பக்கமுள்ள நீல அட்டைபோட்ட புத்தகங்கள்! அவை ஐரோப்பிய நாட்டு தலவர்கள் வாழ்க்கை வரலாறாக இருக்கும்! ரூசோ ,சமுதாய ஒப்பந்தம்,வால்டயர்,மாஜினி, கரிபால்டி ,ஆலிவர் கிராம்வல்,என்று இருக்கும்!
"ஒரு முறை என்னிடம் வீட்டிற்கு கோண்டு போகாதே ! இங்கேயே படி" என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்! நீல அட்டையில் தாடி வைத்த ஒருபடம் போட்டிருந்தது! "கார்ல் மார்க்ஸ் " என்று எழுதியிருந்தது! அவர் ஜெர்மன் நாட்டில் இருந்தார் ! கணிதத்தில் கெட்டிக்காரர் ! ஒரு பணக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்! அவரை அரசுக்கு பிடிக்கவில்லை என்பதால் நாட்டைவிட்டு லண்டனுக்குசென்றார் ! அங்கு வறுமையில் கஷ்டப்பட்டார்! தன கஷ்டத்தை விட உலகமக்களின் கஷ்டத்தை போக்க பாடுபட்டார் " என்று அந்த புத்தகம் சொல்லியது!
நான் வளர்ந்து பெரியவனாகியதும் மார்க்ஸ் பற்றியும் மார்க்சீயம் பற்றியும் புரிந்து கொண்டேன்!
ஒல்லியான கருத்தகுட்டையான உருவம் கொண்டவர் அழகேசன் சார்! தங்க நிற ப்ரேமும் ,வெள்ளை காதர் ஜிப்பாவும் வெள்ளை வேட்டியும் கொண்ட அவரை -நான் இனி பார்க்கமுடியாது! எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்!
ஆனாலும் என்னால் அழகேசன் சாரையும் மறக்கமுடியாது !
மார்க்சையும் மறக்க முடியாது !!
