Friday, July 12, 2013

ஐ .மாயாண்டி பாரதியும் ,

பவநகர் மகாராஜாவும் ........!!!

தீக்கதிர் பத்திரிகையின் 50ம் ஆண்டு நிறைவு விழா மதுரையில்நடந்தது!இந்திய சுதந்திர வேள்வியில் தங்கள் நரம்பையும் சதையையும் ஆகுதியாக சிந்தியவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது! 

சுதந்திர இந்தியாவின் மதறாஸ் மானிலமுதல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடந்தது ! கம்யூனிஸ்டுகள் ஆகப் பெரிய கட்சியாக வந்தனர்1 மற்ற கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைக்க வியூகம் அமைக்கப்பட்டது!

ஆளும் வர்க்கம் விடுமா! அரசியல் சூட்சியோடு ராஜாஜி பின்வாசல் வழியாக முதலமைச்சரானார்! மாநிலம் முழுவதும் கம்யூனிஸ்டுகள் நரவேட்டை யாடப்பட்டனர்! 

காமராஜ் வந்தார் ! நரவேட்டை நிற்கவில்லை!  சேலம் சிறையில் துப்பாக்கி சூடு நடந்தது ! நிராயுதபாணியான கம்யுனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்! கட்சி அணிகளுக்கு தாங்கமுடியாத சோகம்! ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அணிகளுக்கிடையே உலவியது!

அப்போது மாநில கவர்னராக இருந்தவர் பவநகர் மகாராஜா! கவர்னர் சுற்றுப்பயணமாக தூத்துக்குடி வருவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன! சென்னையிலிருந்து ரயில்  மார்க்கமாக வருவதாக ஏற்பாடு !

இரவில் பயணம் ! மணியாச்சி தாண்டி மீளவிட்டான் வரும் போது 
ரயில் தடம் புரண்டு கவிழ்ந்தது !

மறுநாள் காலை பத்திரிகையில் செய்தி வெளியாயிற்று ! மீலவிட்டன் அருகே சரக்கு ரயிலொன்று தடம் புரண்டு கவிழ்ந்ததாக !

அரசு கம்யூனிஸ்டுகளைக் கைது செய்தது ! அப்படி கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் ஐ. மாயாண்டி பாரதி ! 
வழக்குநடந்து விடுதலாயாகி வந்தார்!

தீக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்!

அவர்காலடியில் அமர்ந்து மார்க்சீயம் கற்கும்பாக்கியம் பெற்றவர்களில் அடியேனும் ஒருவன்!

97 வயதான அந்த பாரத புத்திரரை மேடையில் ஏற்றி பிரகாஷ் காரத் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார் !
 
கண்கள் கசிய "ஐ .மா.பா, ஐ. மா .பா" மனம் கூவ அந்தக்காட்சியை  தரிசித்தேன்!

ஐ.மா.பா  உங்கள் நூறாம் ஆண்டுவிழாவிற்கும் நான் வருவேன் !!

ஆசீர்வதியும் !!!















    


 

4 comments:

ஸ்ரீரசா said...

ஐ.மா.பா. பற்றிய உங்கள் பதிவு நன்று அண்ணா... ஐ.மா.பா.வின் நூற்றாண்டு நெருங்கிக் கொண்டுள்ளதுதான்... ஐ.மா.பா.வின் படம் அருமை அண்ணா...

கரந்தை ஜெயக்குமார் said...

ஐ. மாயாண்டி பாரதி ! போற்றப்படவேண்டியவர். நன்றி

'பரிவை' சே.குமார் said...

திரு. ஐ.மா.ப. பற்றி அறியத்தந்தீர்கள்...

ஒரு போற்றுதலுக்கு உரியவரின் போட்டோ அருமை.

S.Raman, Vellore said...

சிறப்பான பதிவு. தோழரே, நீங்கள் கௌரவிக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிடுங்களேன். தீக்கதிரில் சிறியதாகத்தான் வந்தது