Monday, July 15, 2013

ஹிட்லருக்கு நாய்க்குட்டியைப் 

பிடிக்கும் ..........!!!


ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லருக்கு அவர் வளர்க்கும் நாய்க்குட்டியின் மீது கொள்ளைப் பிரியம் !

1933ம் ஆண்டு ஜெர்மன் அரசு ஒரு சட்டத்தை இயற்றியது! 
அந்த நாட்டில் கடல் நண்டுகளைப்  பிடித்து  சமைத்து  பிரபுக்களுக்கு பரிமாறுவார்கள் !  அது உயர்ந்த வகை உணவாகக் கருதப்படும்!

நல்ல பக்குவத்தில் நண்டு வேக வேண்டும்!  உயிரோடு நண்டுகளைப்  பிடித்து 
மிதமான சூட்டில் மெல்ல மெல்ல வேகவைக்க வேண்டும் ! நண்டு மெல்ல மெல்ல சாகும்! ருசியும் கூடுதலாகும்!

இந்த மிருக வதையை தடுக்கத்தான் சட்டம் வந்தது ! இதன்படி  நண்டுகளைக் கொன்று விட்டு சமைக்க உத்திரவிடப்பட்டது! 
அதேபோல் கடல்மீனை உயிரோடு பிடித்து துண்டு போடும்போது அதற்கு வலிக்குமே! அதனால் அதற்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு துண்டு போடவேண்டும் என்று உத்திரவு  வந்தது!

ஆனால் நாஜிகளின் தலைவன் ஹிட்லருக்கு யூதர்களை வதைப்பது பற்றி கவலையில்லாமல்போயீற்று !

நாய்க்குட்டி ஒன்று சக்கரத்தில் சிக்கி விட்டால் மிகவும் வருத்தப்படுவர இந்தியாவிலேயே நரேந்திர மோடி ஒருவர் தான்.!

முஸ்லிம்கள் நரவேட்டையாடப்பட்ட போது அவர் முதலமைச்சர்! பிரதமர் வாஜ்பாய் மத்தியில் தி மு.க ஆதரவோடு ஆட்சியிலிருந்தார்!

கோத்ராவில் ரயில் விபத்தில் இறந்தவர்கள் சடலத்தை பிளாட்பாரத்தில் போட்டு பிரேத பரிசொதனை   நடத்தினார்கள் !மக்கள்முன்னிலையில் ! இது சரியாக நடக்கிறதா என்று மேற்ப்பார்வை இட்டவர் மோடி!

துண்டு துண்டாக்கப்பட்ட சடலங்களை விஸ்வ இந்து பரிஷத்திடம் கொடுத்தார்! அவர்கள் அகமதாபாத் நகரில் ஊர்வலமாக எடுத்துச்சென்று மக்களின் உணர்வைத் தூண்டிவிட்டனர்! இதனை எதிர்த்த உள்துறை அமைச்சர் ஹரன் பாண்டே அரசு தலைமையகத்தில் காரிலிருந்து இறங்கும் பொது சுட்டுக் கொல்லப்பட்டார்!

நரேந்திர மோடியை பிரதமராக்க ஆர். எஸ் .எஸ். இயக்கம் துடிக்கிறது! 
பா.ஜ. க மண்டையை ஆட்டுகிறது !. 

நாம் என்ன செய்யமுடியும் !!! ???

(ஆதாரம் : 16-5-13 டைம்ஸ் ஆப் இந்தியா - நாக்பூர் பதிப்பு!)







1 comments:

அப்பாதுரை said...

நல்ல கேள்வி.
பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.. நேரு பரம்பரை என்ன கிழித்தார்கள் அந்த வகையில்..? இந்தியாவில் இனப்பகையை வளர்த்ததே அரசியல் தானே?