முகெஷ் அம்பானியின் 27 மாடி வீட்டில் ஒரு நாள்...
. மும்பையில் 8000கோடி ரூபாயில் 27மாடி வீட்டில் தான் முகேஷ் அம்பானி வசிக்கிறார். அவருடைய வீட்டில் ஒரு நாள்.......
காலை 6மணிக்கு 15வது மாடியிலிருக்கும் அவருடையபடுக்கை அறையில் எழுந்து விடுவார்.எழுந்ததும் குளத்தில் போய் குளிப்பது அவருடைய வழக்கம்.
17வது மாடியில் அவருக்காகவே ஒரு குளம் கட்டப்பட்டுள்ளது. நீச்சல் குளம்.அங்கு போய் குளிப்பார்.
குளித்ததும் காலை சிற்றுண்டி வேண்டுமல்லவா! அதற்காக 19வது மாடிக்குச் செல்வார். அதன் பிறகு
வெளி வேலைகளுக்குச்செல்லவேண்டும்.உடைமாற்ற 14வது மாடிக்கு ச்செல்வார்.வெளியே செல்வதற்கு முன் அவருடைய தனி அலுவலகம் இருக்கும் 21வது மாடிக்குச்சென்று தேவையான கோப்புகள், கைபெட்டி ஆகியவற்றை எடுத்துக்கொள்வார்.
அவருடைய நீதபாய் அம்மையாரிடம் சொல்லிக்கொள்ளாமல் அவர் வெளியே சென்றதில்லை. அவரிடம் சொல்லுவதற்காக 16வது மாடிக்கு செல்வார். குழந்தைகள் 13வது மாடியில் தான் தங்குகின்றன போவதற்கு முன் அங்கு சென்று குழந்தைகளிடம் "டாடா" வங்கிக்கொண்டு புறப்படுவார்.
அவருக்கு எப்போதுமே மெர்சிடெஸ்-பென்ஸ் வண்டி என்றால் பிடிக்கும்.250லட்சம் ரூபாயில். (2.5கோடி) நிற்கிறது.கார்களை நிறுத்துவதர்க்காகவே மூன்றாவது மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எப்போதுமே அவருக்கு மெர்சிடெஸ்-பென்ஸ் காரை அவரே ஓட்டிச்செல்வதுபிடிக்கும். மூன்றாவது மாடிககுச்சென்று காரைத்திறக்க சாவியை எடுக்.... சாவியில்லை.பாண்ட் பாக்கட்டில் தெடினார். கோண்டுவரமறந்துவிட்டர். எங்கு விட்டிருப்பேன்? எந்த மாடி? 15ஆ?17ஆ? 13,16, 19,21? பணியாட்கள்,சமயல்காரன்,காரோட்டிகள், தோட்டக்காரன். எல்லாரும் தெடினார்கள். கிடைக்கவில்லை.வருத்தத்தோடு "அயோனா" வண்டியை எடுத்துக்கொண்டு போனார்.
அவருடைய வீட்டில் துணி துவைக்கும்பெண்வரவில்லை.தாற்காலிகமாக ஒரு பெண் வந்து கொண்டிருந்தார்.16வ்து மாடியின் பால்கனியில் உலர்த்தியிருந்த பாண்ட் காற்றில் பறந்துபோய்விட்டது சாவீ அந்த பாண்டில் தான் இருந்திருக்கும் என்று நீதுபாய் கருதுகிறார்.
இரண்டு நாள் கழித்து நீதுபாய் கேட்டார்" ராத்திரி பூராவும் ஒரே சத்தம்".விர்-விர்" என்ற சத்தத்தில் தூங்கவே முடியவில்லை.நீங்கள் லேட்டாக வந்தீர்களா?" என்று அம்பானியிடம் கெட்டார்." இல்லையே" என்றார் அவர்
மெர்சிடேஸ்- பென்ஸ் கம்பெனி ஜெர்மனியில் இருக்கிறது.சாவி தொலந்துவிட்டது அல்லவா? புது சாவி வாங்க ஜெர்மனி போன ஹெலிகாப்டர் சாவியோடு திரும்பிவந்து 27வது மாடியில் இறங்கிய சத்தம் தான் அது.
(நெட்டில் சுட்டு கொஞ்சம் விரிவாக்கப்பட்டது.)
5 comments:
யப்பா..... கற்பனை கூட பண்ண முடியவில்லை.
20 வருடங்களுக்கு முன்பு
" பத்துமாடிக் கட்டிடத்தில் சிலரும் - வீதிப்
பாலம் அதனடியில் பலரும் "-
என்று தான் நான் எழுதினேன். 27 மாடி என்று கற்பனையில் கூடத் தோன்றவில்லை.
நம்ம அரசியல்வாதிங்க கிட்ட அத விட அதிகமாகவே இருக்குமுங்க. தைரியமா, வெளிப்படையா அனுபவிக்க முடியல. அவ்வளவு தான்.
Nicely expressed comrade...
Corrupted politician can enjoy like ambani's life, but they have to register / start a company for show the income.
One of tamilnadu justice involved land scam with hundreds of dailt lands, later he starts a real estate company with his nephew name. Now no one question his improper income.
(sorry for typing tamil)
நல்லாருக்குங்க
ஹி ஹி ஹி (சாவி வாங்குறதுக்கு ஒரு வேலைக்காரரை அனுப்பியிருப்பாரு.. நீங்க வேறே)
நண்பர் எஸ்.வி.வி. மூலம் உங்களைக் கேள்விப்பட்டிருக்கிறென். இன்றுதான் வாய்க்கிறது.
முகேஷ் அம்பானி கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.இந்தப் பதிவும் அதில் ஒன்று.
Post a Comment