Friday, November 12, 2010

திரைப்படத்தில் நான் நடித்த காதை...

திரைப்படத்தில் நான்  நடித்த காதை


த.மு.எ.ச நண்பர்கள் சிலர் செர்ந்து திரைப்பட்ம் எடுக்கலாம் என்று யோசித்தனர்."யுக சந்தி" என்ற கம்பெனியும் உருவாக்கப்பட்டது.மூத்த எழுத்தார்கள் கு.சி.பா, செந்தில்நாதன்,டி.செல்வராஜ் வேறு சிலர் இயக்குனர்களாக இருக்க சம்மதித்தார்கள். எந்த கதையை எடுப்பது என்ற விவாதத்தில்,தாகம்,தேநீர் என்ற இரண்டும் முன்னுக்கு வந்தன. இறுதியில்" தாகம் "முதலில் எடுப்பது என்று முடிவாகியது.கம்பெனியின் நிதி ஆகியவற்றை குசிபா அவர்களே கவனித்துக்கொண்டார்கள்.

த.மு.எ.ச நாடக நடிகர்களை அதிகமாக பயன் படுத்துவது என்றும் கூறப்பட்டது படத்திற்கு இசை அமைக்க இளைய ராஜா.. பாடல்கள் தணிகையால் எழுதப்பட்டன. "அன்னக்கிளி " ஆர்.செல்வராஜ் இயக்கம். செல்வராஜ் திரைப்படச்செய்திகளை "தீக்கதிர்"பத்திரிகைக்கு எழுதி நிருபராக இருந்தவர்.சுதந்திரப் போராட்டவீரரும் மார்க்சிஸ்ட் கட்சிதலைவர்களில் ஒருவருமான என்.சங்கரய்யா அவர்களின் சகொதரரின் மகன் தான் செல்வரஜ்.

விநியோகஸ்தர்கள் விருப்பம், வர்த்தக நுணுக்கம் கருதி நடிக நடிகைகள் தேர்வு இயக்குனரிடம் விடப்பட்டது.வளர்ந்து வரும் நடிகையான இ.வி.எஸ்.விஜயலட்சுமி காதாநாயகி.கன்னடத்தச்சேர்ந்த குமாரராஜா கதாநயகன்.தாகம் நாவலில் வரும் மாரப்பன் பாத்திரத்திற்கு சிலோன் சின்னையா. மதுரை பீப்பிள்ஸ் தியேட்டரைச்சார்ந்த துரைராஜ்,காஸ்யபன், சென்னையைச்சர்ந்த சீதராமன் ஆகியோரும் உண்டு

நாமக்கல்லிலிருந்து செல்லும் கொல்லிமலை அடிவாரத்தில் படப்பிடிப்பு நடந்தது.தயாரிப்பு பணியில் தன்னந்தனியாக பணியாற்ற வேண்டியதிருந்ததால் கு.சி.பா வால்கதைவசனத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனையும் இயக்குனரே கவனித்துக்கொண்டார்.கொஞ்சம் கொஞ்சமாக கதை தாகத்திலிருந்து திசைமாரியது தாகம் என்பதற்குப்பதிலாக."புதிய அடிமகள்" என்று பெயரும் மாறியது

நான் அலுவலகத்திற்கு செல்லாமல், சொல்லாமல் வந்திருந்தேன்.துரைராஜ் மில் தொழிலாளி.மிகக் குறந்த.வாழ்வாதரங்களைக் கொண்டவர்கள்.காலையில் படப்பிடிப்பிற்கான உடைகளை அணிந்து கொண்டு தயராக இருப்போம். யாருக்கு, என்று, எங்கே, படப்பிடிப்பு என்பது தெரியாத.நிலமை காமரா முன் அமர்ந்.திருக்கும் போதும் வசனம் எது என்று தெரியாது.எந்த விதமான திட்டமிடலும் இல்லை என்றே தொன்றியது.

காலையில் சிற்றுண்டி. கோழிக்கறியோடு அருமையான இரவு உணவு. ஒரு வாரம் வரை என்னைப் பயன்படுத்தவில்லை. வெட்டியாக அமர்ந்திருப்பதும் சரியில்லை என்று தோன்றியது அவ்வப்போது கு.சி.பா சில வேலைகளைக் கொடுப்பார்.அதனைச்செய்வேன்.ஒருநாள் பரபரப்பாக இருந்தது.உடையலங்கார காசி எனக்கு படப்பிடிப்பு இருப்பத்தகக் கூறினார். ஒருவீட்டில் படப்பிடிப்பு. நான் என் மகனின் மனைவியை கற்பழிக்கும் காட்சி படமாக விருந்தது. காலையிலிருந்தே மனம் பதைபதைத்தது.என் மனை மக்கள் நினவாகவே இருந்த்து.

காமிரா முன் நான் பலியாடு மாதிரி நிண்றேன்.நான் கற்பழிக்கப்பட வேண்டிய நடிகை தாயாராக இருந்தார்.நான் காமத்தொடு அவரப்பார்க்கவெண்டும். அவருடைய மாரப்பு சேலையை உருவ வேண்டும். துணை இயக்குனர் லட்சுமி நாராயணன் சொல்லிக்கொடுத்தார். நான் நடிகையைப் பார்த்தேன்."சார்! உங்க மகளை பார்ப்பது போல் பார்க்காதீர்கள்."என்றார் இயக்குனர் செல்வராஜ். சுற்றிமுற்றும் பார்த்தேன்.வெளியிலிருந்து ஜன்னல் வழியாக.

படப்பிடிப்பை பலர் பார்த்துக்கொண்டிருந்தனர்.அதில் தெரிந்த அந்த முகம்.....என் நாடி நரம்பெல்லாம் ஒடுங்கிவிட்டது

(தொடரும்)

3 comments:

சிவகுமாரன் said...

ராஜேஷ்குமாரும் இந்திரா சௌந்திரராஜனும் தொலைந்தார்கள் போங்கள்.சஸ்பென்ஸ் மண்டையை உடைக்கிறது. அடுத்த இடுகை எப்போது? தொடர்கதை வேண்டாம். சிறுகதையாகவே எழுதுங்கள்

காமராஜ் said...

அந்தக்காலத்தில் எங்கதாத்தா வில்லுவண்டி வச்சிருந்தார் என்று பெருமை அடித்துக்கொள்கிறமாதிரி.இலக்கியச்சந்திப்பு நடக்கிற இடமெல்லாம் தேநீர்,தாகம் பேசப்படும்.ஆனால் அந்த திரைப்படச்சுருளுக்குள் நீங்களும் இருப்பீர்கள் என்பதுதெரியாது தோழா.இது ரொம்ப மகிழ்ச்சியான தகவல்.

ஒருவருத்தமும் விமர்சனமும்.
சின்னமா,எளிமையா,எல்லோருக்கும் போய்ச்
சேருகிற கதைகளை உதாசினப்படுத்தியது தான் சறுக்கிய இடம் என்பது என்கருத்து. நீங்க என்ன சொல்லுகிறீர்கள் தோழர்.

kashyapan said...

"மதர் இந்தியா" என்ற படம் மெஹ்பூப் எடுத் தார்.மெஹ்பூப் புரடக்ஷன் முத்திரை அரிவாள் சுத்தியல்.சக்கைபொடு போட்டபடம்."மா பூமி" தெலுங்கான பொராட்டத்தை சித்தரித்த படம்."பாதை தெரியுது பார்" படத்தை ஸ்டூடியொவில் காமிராவை முடுக்கிவைத்து ஆரம்பித்தவர் எம்.ஆர்.வெங்கடராமன்." ஏய் கொக்கிகள் உள்ளவராங்க. எப்படியாவது தடுத்துடணும்" என்ரு பக்கத்து தளத்திலிருந்து குரல் கொடுத்தவர் லட்சியநடிகர் ராஜேந்திரன்.நிறைய விவாதிக்க வேண்டும் காமராஜ்---காஸ்யபன்