Tuesday, November 02, 2010

ஆந்திர மாநிலமும் தெலுங்கானாவும்

ஆந்திர மாநிலமும் தெலுங்கானாவும்


ஆந்திரா ஒன்றாக இருக்கவேண்டும் - இல்லை அதனைபிரித்து தெலுங்கானா உருவாகவேண்டும் என்று இரண்டுகருத்துகளின் மோதல் தான் பிரச்சினை என்கிறார்கள். இந்த இடுகையின் மூலம் சில உண்மைகளைச் சொல்லாம் என்று கருதுகிறென்.

" ஒக்க ஆந்திரா"காரர்கள் புராணகாலத்திலிருந்து எப்படியிருந்தது என்று மகாபாரதம்,ராமாயணம் என்று ஆதாரங்களை வைக்கிறார்கள அப்படியானால் .எப்போது பிரிந்தது,எப்போது செர்ந்தது, இப்போது ஏன் பிரியவெண்டும் என்ற கேள்வி எழத்தானே செய்யும்.

அசாஃப்சாஹி வம்சம் ஆண்டபொது குண்டூர், கிருஷ்ணா,கோதாவர்,ராயலசீமா, மற்றும் தற்போதய தெலுங்கானா எல்லாமே ஒன்றாகத்தன் இருந்தது.கிழக்கிந்தியக் கம்பெனி வந்தபிறகு தான் சிக்கல் ஆரம்பமாகியது. 1776ம் ஆண்டு அசஃப்சாஹி அரசர் குண்டூர், கிருஷ்ணா,கோதாவரி மாவட்டங்களை கம்பெனிக்கு கொடுத்தார். அதே ஆண்டு ராயலசீமா மாவட்டங்களையும் கம்பெனிக்கு கொடுத்தார்.ஏன் கொடுத்தார்? அவர் அரசர்? இவர்கள் முதலாளிமார்கள்.கொடுப்பார்கள். வாங்குவார்கள். நாம் கேட்க முடியாது.1857 க்குப்பிறகு கம்பெனி சர்யாக ஆட்சி செய்யவல்லை என்று கூறி ஆங்கிளேய அரசு ஆட்சியை எடுத்துக் கொண்டது. அப்பொது கம்பெனியிடமிருந்து மதறாஸ் மாகாணத்திற்கு தெலுங்கு பேசும் மக்கள் சென்றது.கிருஷ்னா நதியும்,கோதாவரியும் பாய்ந்தாலும் வெள்ளமும்,வறட்சியும் மாறிமாறி அந்தப்பகுதியைச்சீரழித்தன. ஆங்கிலேயரசு கிருஷ்ணாவிலும்,கோதாவரியுலும் தடுப்பணைகளைக் கட்டியது.செழிப்பான வயல்களில் புகை இலையைப் போட்டால்-- பணப்பயிரென்று விவசாயியும், பிரிட்டிஷ் முதலாளிக்கு அபரிமிதமான லாபமும் கிடைக்குமே! பணக்கார விவசாயிகள் அரசியலிலும் பங்கெடுக்க வந்தனர்.

நிஜாம் ஆட்சியில் ஜமீந்தாரிமுறை அமலில் இருந்தது .மக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் நடந்தது. வளர்ச்சிப்பணி என்று எதுவும் கிடயாது.கொத்தடிமைகளாக வாழ்ந்தார்கள். கல்வி ,சுகாதாரம்,பொக்குவரத்து என்று எதுவுமே இல்லை.நீராதரங்கள் பூராவும் பிரிட்டிஷ் இந்தியாவின் கையில். பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வி கற்ற விவசாயிகள் அரசியல் உணர்வு பெற்றவர்களாக வளர்ந்தனர்.சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் இயகத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இவர்களின் துணையோடு தெலுங்கானா விவசாயிகள் ஆயுதப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் நடத்தினார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இது தொடர்ந்தது.ராஜாஜியும், நேருவும் இதனச்சாதகமாக்கி நிஜாமை வசக்கினர். நிஜாம் வளைந்தார்

புதிய இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தெலுங்கு பேசும் மக்கள் ஒன்றிணைய வெண்டும் என்பது நியாயம்தானே! ஆனால் நிஜாம் ஆட்சியில் ஏத.மற்றவர்களாக ஆகியமக்கள் எப்படி கல்வியிலும்,வசதியிலும் சிறந்த டெல்டா மக்களோடு போட்டி பொடமுடியும். ஆகவே சில சலுகைகளை அவர்கள் கெட்டனர்.ஒப்பந்தம் உருவாகியது.தெலிங்கானா பகுதியில் மற்ற பகுதியினர் நிலம் வாங்கக்கூடாது.வேலை வாய்ப்பில் தெலுங்கானா மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வெண்டும்.(இதனை முல்கி விதி என்பார்கள்) இந்த ஒப்பந்தம் சரியாக அமுலாக்கப்படவில்லை.(மூன்று ஆண்டுகள் தெலுங்கானாவில் வாழ்ந்தாக சான்று இருந்தால் முன்னுரிமை.ஏராளமான ராமசாமிகளும்,சுபிரமாணியங்களும் அரசு போலீஸ் பணிகளில் சேர்ந்தனர்.கேட்க ஆளிள்லை)

சென்னாரெட்டி கெட்டார். முதலமைச்சராக்கினர்கள்.கெட்பதை ந்றுத்திக் கொண்டார்.தெலுங்குதேசம், காங்கிரஸ் என்று அந்த மக்களை மாறி மாறி வஞ்சித்தனர்.சந்திர சேகரராவ் கெட்டார்.கங்கிரஸ் கூட்டணியில் மந்திரியானர். நிறுத்திக் கொண்டார்.

ஜார்கண்டு பிரிந்தது. சதீஸ்கர் பிரிந்தது. உத்திராஞ்சல் பிரிந்தது.அந்த மக்களூக்கென்னகிடைத்தது? அதேதான் தெலுங்கானாவுக்குமா?

மூலதனம் தனக்கு வேண்டுமென்றால் பிரிக்கும். சேர்ந்த்தால் லாபம் என்றால் சேர்க்கும்.இந்த விளையாட்டில் அப்பாவி மானவர்கள், இளஞர்கள்,உழப்பாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள்.

ஹைதிராபாத் இன்று ஒருகெந்திரமான தொழில் நகரமாக மாறிவிட்டது. D.B.R. மில்லும்,பிஸ்கட் கம்பெனியும், செங்கல் சூளையும் மட்டுமே இருந்தநகரம் இன்று பிரும்மாண்டமான தொழில் நகரமாகியுள்ளது. இதன் சொந்தக்காரர்களுக்கு ஹைதிராபாத்தை விட மனதில்லை. அவர்கள் வெளியிலிருந்து வந்த முதலாளிகள்.

அவர்கள் எதை விரும்புகிறார்களோ அது தான் நடக்கும்.

2 comments:

அப்பாதுரை said...

அறிந்திராத பல தகவல்கள்.
மற்ற மாநிலங்கள் பிரிந்த பின்னணியில் தெலுங்கானா போல் ஏதேனும் இருக்கிறதா?

Swaminathan K said...

சிறிய மாநிலப் பிரிவினைக் கோரிக்கைக்கும்
உலகமயப் பாதைக்கும் உள்ள தொடர்பையும் விவாதித்தால்
உங்கள் கட்டுரை மேலும் முழுமை பெறுமென்று
கருதுகிறேன்.
1 உலகமயம் ஏற்படுத்துகிற ஏற்றத் தாழ்வான
வளர்ச்சி இப்படிப்பட்ட சிறு மாநிலக் கோரிக்கைகளுக்கு வலு
சேர்க்கிறது,
2 சிறு மாநிலங்களாக இருப்பது பன்னாட்டு மூலதனம் பேரம்
பேசும்போது அதற்கு வசதியாக உள்ளது.
3 உலகமயம் ஏற்படுத்துகிற வேலையின்மை, விலைவாசி உயர்வு
போன்றவை மக்களிடம் விரக்தியை ஏற்படுத்தும் போது
அதற்கு எதிரான கோபங்களை திசைத் திருப்ப மத வெறி, பிராந்திய
வெறி ஆகியன கிளப்பப் படுகின்றன. அத்தகைய வடிகால்களாகவும்
இது போன்ற இயக்கங்கள் பயன்படுகின்றன.
4 மொழிவாரி மாநிலங்கள் என்ற கட்டமைப்பைச் சிதைப்பதன் மூலம்
மதவெறித் திரட்டலுக்கு வலு சேர்க்க முடியுமென்ற நோக்கமும் இதற்குள்
அடங்கியுள்ளது.

க சுவாமிநாதன்