"ஆஷ்"கொலைவழக்கும், பாரதி தாசனும்.....
மணியாச்சி சந்திப்பில் கலக்டர் ஆஷ் இருந்த பெட்டிக்குள் வாஞ்சி ஐயர் நுழைந்தபோது வெளியே சற்று தள்ளி வெள்ளை வெட்டி சட்டையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் என்று சென்ற இடுகையில்குறிப்பிட்டிருந்தேன். ஒரு வேளை வாஞ்சி யின் குறி தப்பிவிட்டல்,அசந்தர்ப்பமாக ஆஷ் கொல்லப்படவில்லையென்றால்,காரியத்தைக் கச்சிதமாக முடிக்க உதவிக்கு அனுப்பப் பட்டவந்தான் தள்ளி நின்றவன். ஆஷ்துரைசெத்தான் என்று தெரிந்ததும் அவன் தப்பிவிட்டான் தப்பிபயவன். பெயர் மாடசாமி.
இதெல்லாம் பிரிட்டிஷ் பொலீசுக்கு தெரிய ஒருமாதமாகியது. மூன்று பெரைப்பிடித்ததில் . சோமசுந்தரம் பிள்ளை அப்ரூவராக மாறி தகவல் கிடைத்தது. ஆஷை கொல்ல ஒருவர் அல்ல இருவர் அனுப்பப் பட்டிருந்தனர் என்பதே அதன் பிறகு தான் போலீசுக்குத்தெரியும். அதற்குள் மாடசாமி பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தப்பி பிரஞ்சு இந்தியாவுக்கு போய்விட்டான்.
அங்கு ஏற்கனவே பாரதி,வ.வெ.சு.ஐயர்,பி.பி.ஆசார்யா ஆகியொர் இருந்தனர்.ஆசார்யா கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ம்பித்த போதே உறுப்பினரானவர். வாஞ்சிகுழுவினருக்கு துப்பாக்கி வந்ததே இவர்கள் மூலம் தான் என்று ஒரு செய்தி உண்டு.கொல்லப்பட்டவன் பிரிட்டிஷ் கலக்டர். அரசுக்கு சவால். ஆகவே ஆங்கிலேயரின் நிர்ப்பந்தம் பிர்ஞ்சு அரசாங்கத்திற்கு இருந்த்தது. ஆங்கில பிரஞ்சு போலீசார் பாண்டிசேரி முழுவதும் மாடசமியைத்தேடி அலைந்தனர். பாரதி, வ.வே.சு ஐயர் ஆகியொர் கண்காணிக்கப்பட்டனர். மாடசாமி வந்தால் அடைகலம் கொடுக்கவும் மாற்று ஏற்பாடுகள் இருந்தன.
மாடசாமி பாண்டிச்சேரி வந்ததும் உடனடியாக அவனை வெளிநாடு அனுப்பவேண்டும்.பாண்டியில் இருப்பது ஆபத்து. ஐரோப்பாவுக்கு தமிழ் மட்டுமே தெரிந்த மாடசாமியை அனுப்புவது ஆபத்து. ஆகவே பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த வியட்நாமின் தலைநகரமான சைகோன் அனுப்புவது என்று முடிவாகியது. மாடசாமியை சைகோன் அனுப்பும் ஏற்பாட்டைக் கவனிக்கும் பொறுப்பு பாரதிதாசனுக்கு அளிக்கப்பட்டது
பாண்டிச்செரியில் பெரியகப்பல் கள் வராது. நடுக்கடலில் நிற்கும். கரையிலிருந்து தோணிகள் மூலம் பயணிகள், சரக்குகள் எடுத்துச்செல்லப்பட்டு கப்பலில் எற்றப்படும். மாடசாமியை ஒரு இருட்டான நட்ட நடுநிசியில் தோணியில் கொண்டுசென்று ஏற்ற முடிவாகியது.தோணியில் பாரதிதாசனும் மற்றவர்களும் ஏறிக்கொண்டனர். கூடவே ஒரு மீன் படகும் சென்றது.
கப்பலை நெறுங்குக்போது போலீசார் சுற்றி வளைத்துவிட்டனர். உள்ளே பாரதிதாசன் இருந்தார்.ஆனால் மாடசாமி யில்லை .தோணியை போலீசார் விட்டுவிட்டனர். இதனை எதிர்பார்த்த பாரதிதாசன் மாடசாமியை தோணியில் ஏற்றாமல் மீன்படகில் ஏறச்சொல்லியிருந்தார். போலீசாரைப் பார்த்த மீன் படகு கப்பலருகில்செல்லாமல் நடுக்கடலை நோக்கிசென்றது மாடசாமி என்ன ஆனார்?
( திருநெல்வேலியில் அந்தக்காலத்தில் T.M.B.S என்றொரு பஸ் கம்பெனி இருந்தது. அவர்களுக் லாரியும் உண்டு. அதற்காக சென்னையில் ஒரு .கிட்டங்கி வைத்திருந்தனர். சைகோன் பொகமுடியாத மடசாமி மீன் படகுமூலம் சிலோன் சென்றதாக ஒருபேச்சு உண்டு 1950 வாக்கில் வயதான மாடசாமி தன் குடும்பத்தைத்தேடி நெல்லை வந்ததாகவும்
அவர்களைப் பர்ர்க்கமுடியாமல் சென்னை சென்றதாகவும் கூறுகிறார்கள். சென்னயில் TMBS கம்பெனி கிட்டங்கியில்
காவலாளியாக பணியாற்றுவதாக தெரிந்து கொண்டு அவருடைய உறவினர்கள் விசாரித்துள்ளனர். அ.வர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கம்பனி அவர்களிடம் கூறியிருக்கிற்து.இவை உறுதி செய்யப்படவில்லை.)
14 comments:
கடந்த காலத்தின் இருளில் ஒளி பாய்ச்சுகிறது உங்கள் தகவல்.இதுதான் அடுத்த தலைமுறையினர் பள்ளிகளில் தெரிந்து கொள்ளவேண்டுமேயன்றி அசோகர் மரம் நட்டதும் குளம் வெட்டியது மட்டுமல்ல.நன்றி காஸ்யபன் ஐயா.
உங்கள் அனுபவக் கடலில் இருந்து வருபவை எல்லாம் வருங்கால சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷங்கள்
“ஆஷ் கொலை“ வழக்கில் மாடசாமி என்பவர் இருந்தார் என்பது வரலாற்றில் சொல்லப்படவில்லை.
சாமன்யர்கள் வரலாற்றில் இடம்பெற்றிருந்தாலும் அவர்கள் பாடநூல்களில்/ அச்சில் வரவில்லை.
மாடசாமியின் கதை கேள்விப் பட்ட எனக்கு பாரதிதாசன் ஈடுபட்டிருந்தது புதுத் தகவல் சார்! ரொம்ப நன்றி.
தோழர் காஸ்யபன்,
மாடசாமி என்ற பெயரிலிருந்து அவர் ஒரு தலித் என்பது புரிகிறது ( நமது கல்லூரிப்பேராசிரியர் எஸ். மாடசாமி சென்னையில் சென்று குடியிருப்புகளில் தங்க வீடு கேட்டபோது அவரது பெயரே தலித் என்ற அடையாளத்தைக்காட்டியது அல்லது கீழ் சாதிக்காரன் என்ற பெயர் அவருக்கு வீடு வாடகைக்கு கொடுப்பதை தடுத்தது) அதற்காகவே தலித் வகுப்பினரை "ன்" விகுதியில் அழைப்பதை நிறுத்துங்கள். எல்லோரும் அவரவர் அம்மாவின் வயிற்றில் பத்து மாதம்தான். வாஞ்சி ஐயர் என்பவர் ஆஷ் துரையை சுட்டதற்கான காரணம் தெரியுமோ உங்களுக்கு. ஒரு தலித் பெண்ணின் பிரசவ வலியைத்தாங்காமல் அவளை பிராமண வீதிகளில் சாரட் வண்டியில் ஆஷ் துரையின் மனையாட்டி அந்த தலித் பெண்ணை ஆசுபத்திரிக்கு அழைத்துச்சென்றதன் சனாதன தர்ம வெளிப்பாடுதான் ஆஷ் துரையின் கொலை என்பதை தாங்கள் அறிவீர்களா.....?
இதுவென்ன புதுக்கதை திலீப் நாராயணன். வேண்டாம் சாதிப்பூச்சுக்கள் விடுதலை வீரர்களுக்கு. பாரதியை கூட பிராமணர் என்ற வட்டத்துக்குள் அடைக்கப் பார்த்தவர்கள் உண்டு.
கோமாமிசம் தின்னும் மிலேச்சனைக்கொலை செய்யத்தயாராக உள்ளவர்கள் பட்டியலில் கூட தலித்துகள் யாரும் இருந்ததாகத்தெரியவில்லை. சனாதன தர்மத்துக்கு எதிரான அவனைக்(ஆஷ்)கொலை செய்வதுதான் குறிக்கோளாக இருந்திருக்கிறது.
விறுவிறுப்பான கதை போல் படிக்க முடிந்தது விவரங்களை. நன்றி.
இந்தியச் சுதந்திர விழிப்புணர்ச்சிப் பரவலில் நிழலாகவோ நேராகவோ இருந்த தீவிரவாதத்தின் பங்கை ஆய்ந்து எழுதவில்லை என்று நினைக்கிறேன். எதையோ இழந்தது போல் உணர்கிறேன்.
வாவ்! திலிப் நாராயண் சொல்லியிருப்பதும் தாக்கல் தான். என் நினைவில் ஆஷ் கொலையின் பின்னணி ஜல்யின்வாலாபாக் (?) நிகழ்ச்சி என்று படுகிறது. திலிப் சொல்லியிருப்பது போல் - அப்படி ஒரு காரணத்துக்காக கொலை நடந்திருந்தால் வருத்தப்பட வேண்டிய விவரம். அவர் மனைவியை அல்லவா தாக்கியிருக்கவேண்டும், ஆஷைத் தாக்குவானேன்?
திலிப் சொல்லியிருப்பது போல் - சுதந்திர போராட்ட வரலாற்றில் ஈடுபட்டதாக சொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் so called high society ஆசாமிகள் தான். (கஸ்யபன் எழுதிய அம்பேத்கர் விவரம் ஒரு உதாரணம்). இந்தப் போராட்டங்களில் கலக்க சாதாரணர்களுக்கு நேரமும் வசதியும் இருந்திருக்காது என்று தோன்றுகிறது. அப்படியே கலந்து கொண்டிருந்தாலும் முன்னணிக்கு வர இடம் கிடைத்திருக்காது.
இன்றைக்கு வாஷிங்கடனையும் ஜெபர்சனையும் விடுதலையின் முன்னோடிகளாகப் பார்க்கும் அமெரிகாவின் சுதந்திரப் போராட்டங்களில் கூட உள்ளூர் "இந்தியர்களின்" பங்கை யாருமே விவரிக்கவில்லை. Boston Tea Partyன் பின்னணியில் அமெரிக்க நேடிவ்களின் பங்கைப் பற்றி ஒரு வரி கூட பள்ளிப் புத்தகங்களில் பார்க்க முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு புரட்சியிலும் இதே கதை தான் போலிருக்கிறது.
விவரம் உண்மையாக இருந்தால் வருத்தப் பட வேண்டிய விஷயம் திலிப்.
அன்புள்ள தோழர் திலீப் நாராயணன் அவர்களுக்கு! ஏன்னுடைய மடிக்கணிணி சரியாக வெலை செய்யாததால் பின்னுட்டங்களை இன்று தான் பார்த்தேன்."ன்' விகுதியை. தவிர்க்க வெண்டும் என்ற தங்கள் கருத்து சரியானதே..நெல்லைமாவட்டத்தில் பிறந்தவன் தான் நான்.பெராசிரியர் (எஸ்.எம்) மாடசாமி அவர்கள் வீட்டில் தங்கியிருக்கிறேன்.அவருடைய வீட்டு திருமணத்திலும் கலந்து கொண்டிருக்கிறேன்.பெராசிரியர் என்ற பெயரில் சிறுகதையும் எழுதியிருக்கிறேன்.அற்புதமான மனிதர்..மாடசாமி,இசக்கி, பலவெசம்,பாவநாசம் என்ற பெயர்கள் எல்லாரும் வத்துக்கொள்கிரார்கள்.மெல்வகுப்பச்செர்ந்தவற்களும் அதில் உண்டு. தஞ்சையில் பாவநாசம் என்று ஐயர்கள் உண்டு. நெல்லையில் மறவ்ர்களிடையே இத்தகைய பெயர்கள் உண்டு.வாஞ்சி யின் பையில் இருந்த கடிதத்தில் வாஞ்சி ஐயர் என்று குறிப்பிட்டுள்ளதாக வரலாற்று ஆசிரியர் கூறுகிறர். மாடசாமி T.M.B.S குடும்பத்திற்கு உறவினர் என்ற் பெச்சு உண்டு. .உறுதியாகத் தெரியாது.ஆஷ் கொலைக்கான காரணம் பற்றி புதிய த்கவலுக்கு நன்றி---காஸ்யபன்.
நண்பர் தீலீப் புதிய தகவலை சொல்லியிருக்கிறார், வாஞ்சிநாதன் ஒரு புரட்சியாளராக இருந்தாலும் மததீவிரத்தன்மையோடு செயல்பட்டதால் அவரை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, ஒருவேளை அவர் இந்த சம்பவத்தில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இந்து மகாசபையில் இருந்திருப்பார் என்பது எனது ஐயம்.
அற்புதமான தகவல்கள். வாஞ்சிநாத ஐயர், மாடசாமி பற்றி நினைக்கும்போது பெருமையாக உள்ளது. வழக்கமாக தகவல் தரும்போக்கிலிருந்து புதுமையாக விலகி வரலாற்றில் இருக்கும் மாடசாமி பற்றிய குறிப்பு நெகிழவைக்கிறது.
திலீப் நாராயணன் அவர்கள் தந்துள்ள தகவல்கள் பற்றி நாம் வரலாற்றை மீண்டும் ஒருமறை பார்த்து உறுதிச் செய்யவேண்டும். திலீப் நாராயணன் சொல்வதில் ஏதோ ஒரு மறைக்கப்பட்ட வரலாறு இருப்பதாகத் தெரிகிறது.
,,மீண்டும் ஒருமுறை
Post a Comment