ஊழல் தெய்வீகமானது.....
"நகர்வாலா ஊழல்" பற்றி எழுதீயிருந்தேன்.பதிவர் ஒருவர் இது தான் சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் என்ரு கருதிவிட்டார்.மத்தாய் ஊழல்,பிஜு ஊழல், முந்திரா உழல் என்ரு நேரு காலத்து ஊழல்கள் பற்றி எழுத ஆரம்பித்தால், எழுதி மாளாது.
மகாயோக்கியர்கள் என்று கருதப்படும் பிரிட்டிஷ் ஆண்டகாலத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் தான் இதற்கான சுழியை பொட்டவர். அப்போது வங்காளத்தில் இரட்டை ஆட்சிமுறை நடந்து கொண்டிருந்தது.ஹூக்ளியின் கவர்னராக ராஜா நந்த குமார் இருந்தார்.அவர் நவாபால் நியமிக்கப்பட்டவர்.சிலபகுதிகளில் நவாபு ஆட்சியும் சில பகுதிகளில் ஆங்கிலெயர் ஆட்சியும்நடந்துகொண்டிருந்த காலம் அது.நவாபுக்கு வாரிசு இல்லை.அவர் மனைவி தத்து எடுத்துக் கொண்டார் கவர்னர் ஜெனரல் அதனை அங்கீகரிக்க வேண்டும் இல்லை யென்றால் நாடு நவாபுக்குப் பிறகு பிரிட்டிஷார் வசம் போய்விடும்.கவர்னர் ராஜா நந்தகுமார்.ராணியின் சார்பாக பேச்சு வார்த்தை நடத்தினார். ஒருலட்சம் வாரன்ஹேஸ்டிங்க்ஸ் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு அங்கீகாரமளித்தார்.நாணயமான மனிதர்.வாங்கிய லஞ்சத்திற்கு ரசீது கொடுத்திருந்தார்.ப்ரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுந்தது. பாராலுமன்ற உறுப்பினர் எட்மண்ட் பர்க் வாதிட்டார் Impeachment of Warren Hestings என்ற பர்க் கின் உரை ஆங்கில இலக்கியத்தில் ஒரு மைல்கல்.நான் படிக்கும் காலத்தில் .B.A. இலக்கியமானவ்ர்களுக்கு அந்த உரை பாடமாக இருந்தது. இந்த வழக்கை விசாரிக்க முதன் முதலாக இந்தியாவில் உச்சநீதிமன்றம் உருவாக்க பட்டது.முதல் நீதிபதியாக வாரன் தன் ஆப்த நண்பரை நியமித்தார்.
இதுதான் முதல் ஊழலா? இல்லை.வரலாற்றில் கொஞ்சம் பின்னால் செல்லவெண்டும்
தக்காண பீட பூமியில் நவாபுகள் ஆட்சி.ராமன் என்பவர் வரிவசூல் செய்து,கஜானாவில் கட்டவேண்டியவர்.வசூலித்து அவர் விருப்பம் போல் செலவு செய்துவிட்டார்.நவாபு அவரப்பிடித்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார். ராமனின் துன்பத்தைக் காணமுடியாத இரண்டு பெரியமனிதர்கள் ராமோஜி, லஷ்மணோஜி என்பவர்கள் ராமன் கட்டவெண்டிய வரிப்பணத்தைக்கட்டி அவரை விடுவித்தார்கள்.ராமன் கட்டிய கொவில் தான் பத்திராசலத்தில் உள்ளது. அந்தக் கொவீல் மூர்த்திகள் தான் ராமொஜியும்,லஷ்மணொஜியும். ராமன் தான் பக்த ராமதாஸ
இதுதான் முதலா? இல்லை. அதற்கு தாய் தமிழகத்திற்கு போகவேண்டும்.
மதுரையை பாண்டிய மன்னர் ஆண்டகாலம்.தன் படை பலத்தை அதிகரிக்க குதிரைகள் வாங்க ஏற்பாடு செய்தார். தன் மந்திரி யிடம் பொற்காசுகளைக்கொடுத்து அனுப்பினார் மந்திரி அதனை தனதாக்கிக்கொண்டார். மன்னர் கேட்டபோது திரு திருவென்று விழித்தார்..அப்போது தென்னாடுடைய சிவன் நரிகளைப் பர்களாக்கி அவரைக்காப்பாற்றினார்.மதுர அருகில் உள்ள திருமொகூர் ஆலயம் தான் மந்திரி கட்டியது." நரிதனை பரியாக்கி பரிதனை நரியாக்கி நாரைக்கு முக்தி கொடுத்த" பாடலுக்கு பத்மினி ஆட நாம் ரசித்துக்கோண்டிருப்போம்.
ஊழல் செய்த அதிகார்களையும் அரசியல் வாதிகளையும் தெய்வாம்சம் பொருந்திய பக்த ராமதாசாகவும் மாணிக்க வாசகராகவும் கொண்டாடும் பண்பாடு கோண்டவர்கள்நாம்
Scam is divine
ஊழல் தெய்வீகமானது
11 comments:
நல்ல பகிர்வு. நன்றி சார்.
ஆஹா ஆஹா! சபாஷ் காஸ்யபன் சார்.ஒங்க பீக் ஃபார்முக்கு வந்துட்டீங்க.
ஊழலின் ஊற்றுக் கண் தேடிய பயணம் அபாரம்.
ஆனால் இதை முடி அதைத் தருவேன் என்று ஒரு குழந்தைக்கு ஊழலின் அரிச்சுவடி ஒவ்வொரு வீட்டிலிருந்தும்தான் துவங்குகிறது என்பது என் அனுமானம்.
சரிதானே சார்?
எது அரசியல் அடுத்த பதிவு நேற்றுப் போட்டேன்.
நேரம் கிடைக்கும்போது நீங்கள் படிக்க விரும்புகிறேன்.
அன்பு காஷ்யபன் அய்யா அவர்களுக்கு,
நல்ல பதிவு இது... இது போன்ற உழல்கள் பற்றி படிக்கும்போது சுவாரசியமாக இருக்கிறது...
நரிகளை பரிகளாக்கியது கதையில்... மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் கொடுத்த தங்கக்காசுகளை தொலைத்ததாகத்தான் கதை என்று நினைக்கிறேன்... இதில் சிவனே தட்சினாமூர்த்திபோல வந்து மாணிக்கவாசகர் முன்னால் வந்து வேதபாடங்களை பயிற்றுவித்ததாகத் தான் என் அப்பா கதை சொல்வார், எது சரி என்று எனக்குத் தெரியவில்லை... இது ஊழலாகுமா?
வாரன் ஹாஸ்டிங்க்ஸ் கதை படித்திருக்கிறேன்... சிப்பாய் கலவரத்தின் போது கூட ஊழல் இருந்திருக்கிறது தானே... பிள்ளையாருக்கு ஞானப்பழத்தை கொடுத்ததில் கூட ஊழல்... ராஜராஜசோழன் காலத்திலும் நிலமுறைமையில் ஊழல் இருந்ததாக கதை கேட்டிருக்கிறேன்...
ஊழல் அன்று, நின்று கொல்பவர்கள் விவகாரம் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
ராகவன்
இது உங்களுக்கான ப்ரத்யேகக் கடிதம்.
நாம் இனி மாற்று குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் காஸ்யபன் சார்.
யாரின் பின்னும் இனிச் செல்லாது நாம் முன்நின்று அடிப்படையிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தைத் தொடங்குவது மிக அத்தியாவசியம்.
எல்லாக் கட்சிகளும் அவரவர் பங்குக்கு அவரவர் ஆட்சிக் காலங்களிலோ ஆளும் மாநிலங்களிலோ பல வகையான வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து தெளிவான சிந்தனையும் லாப நோக்கற்ற நெடுந்தூரப் பயணத்துக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்.
மதம் மொழி இனம் ஜாதி இவையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைபடட்டும்.
நம் கவனம் இனி திசைதிருப்புதல்களுக்கு ஆட்படாது யார் பெரியவர் சிறியவர் என்ற அகங்காரம் தொலைத்து ஒரு பெரும் இயக்கத்துக்கான நம்பிக்கையுடன் தமிழகத்திலிருந்து இந்தச் சுடரை ஏற்றுவோம்.
பிற மாநிலங்களுக்கும் பின் இந்தியா முழுமைக்குமான வெளிச்சமாயும் விடியலாயும் இது சுடர் விடட்டும்.
முதலடி எடுத்து வைக்க முனைவோம்.நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம்.அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.
காத்திருக்கிறேன் அருமை காஸ்யபன் சார்.
குறைந்த பட்சம் மருத்துவத்துறையிலும், கல்வித் துறையிலும் இந்த தெய்வீக லஞ்சம் இல்லாதிருந்தால், நன்றாக இருக்கும்.
போச்சு.... மாணிக்க வாசகரையே ஊழல்வாதி என்று சொல்லிவிட்டீர்களே. அவர் கட்டியது ஆவுடையார் கோயில் என்று இன்று வழங்கப்படும் திருப்பெருந்துறை
நாற்பது வருடமாக மதுரையில் இருந்தேன்.இப்போது ஐந்து வருடமாகத்தான் இங்கு இருக்கிறேன். உங்களுக்கு திருவிளையாடல் புராணம் பரிச்சயமாக இருக்கும்.திருமோகூர் போயிருக்கிறேன் நான் கேள்விப் பட்டதை சொன்னேன் நான் தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன். அரசு பணத்தில் அனுமதியின்றி பயன்படுத்தியதுஉண்மை. இறை நம்பிக்கை உள்ளவர்களை புண்படுத்துவது நோக்கமல்ல.தர்க்கரீதியாகப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.---காஸ்யபன்...
காஸ்யபன்!
அருமை தோழர். எல்லா அதிகார மையங்களுக்கு அடியிலும் ஊழல்கள் திளைக்கின்றன. தொடரட்டும் உங்கள் பணி!
தோழரே! நன்றாக சொல்லியுள்ளீர்கள். சிலர் ஊழல் என்பது இப்போது உருவானது போல் எண்ணுகிறார்கள். மன்னராட்சி,நிலப்பிரபு தொடங்கி முதலாளித்துவம் வரை ஏன் சோசலிஷ்த்திலும் கூட நீடிக்கலாம்.
ஊழலின் வேர் நிச்சயம் தனியுடமை தான், ஒரு தனிநபர் அரசாங்கத்தின் ஒரு கொள்கை மாற்றத்தால் பயன்பெற எண்ணும் போது அவர் லஞ்சம் தருகிறார். சமுதாயத்தில் தனிப்பட்ட அந்த நபர் அதனால் கஜானாவுக்கு ஏற்பட்ட இழப்பு ஊழல்.
பர்வர்த்தனை செய்யும் பொருள் /மதிப்பிற்கு அளவிற்கு அதன் தொகை இருக்கிறது. மாருதி உத்யோக் ஊழல் சில லட்சங்களில் இன்று பல லட்சம் கோடிகளில்..
படு சுவாரசியம்... மகாபாரதத்தில் நிறைய ஊழல் இருக்குதே?
Post a Comment