எல்.ஐ.சி யில் இட ஒதுக்கீடு.....
1956ம் ஆண்டு ஆயுள் காப்பிட்டுத்துறை தேசீயமயமாக்கப்பட்டது.தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான சலுகைகள் 1972ம் ஆண்டுதான் வழங்கப்பட்டதுஅந்த ஊழியர்கள். கேட்ட போதெல்லம் எல்.ஐ.சி ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட.து. அதில் தலையிட முடியாது என்று அரசு கூறியது
1980 ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஒரு போராட்டம் நடந்தது.அங்கு மருத்துவக்கலூரியில்.தாழ்த்தப்பட்டவர்களுக்கான மேற்பட்ட படிப்பில் கொடுக்கப்பட்ட சலுகையை ரத்து செய்யவேண்டும். நோயாளிகளின் உயிரோடு விளையாடக்கூடாது. தகுதி அடிப்படையில் தான் கொடுக்கப்பட வேண்டும் என்று போராடினார்கள் பா.ஜ.க தன்னைத்தூக்கி.நிறுத்த கிடத்த சந்தர்ப்பமாக இதனக் கருதி.யது மெலும் நடுத்தரவர்க்கமும் இதில் முனைப்பாக நின்றது குஜராத்.மாநிலத்தில் ஒரூ விசேஷ நிலைமயும் அப்போது நிலவியது.
1950-60ம் ஆண்டுகளில் தாழ்தப்பட்டவர்களுக்கான சலுகைகள் மிகவும் கராராக அமல்படுத்தப்பட்ட மாநிலமாகும் அது.அதன் காரணமாக பழங்குடிகள் படித்து பட்டம் பெற்று பணியிலும் பதவியிலும் இடம் பெற்றார்கள்.தொழில்வளம் வளர்ந்து அதன் காரணமாக புதிய மத்தியதரவர்க்கம் . உருவாகியது அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப வேலை வாய்ப்பு இல்லை. இவர்களின் அதிருப்தியை விசிறி விட்டு குளிர்காய ப.ஜ.க விரும்பியது."உங்கள் துயரத்திற்கு காரணம் தாழ்த்தப்பட்டவர்களுக்கானா சலுகை தான்.பாருங்கள்.எப்படியிருந்த பழங்குடியினர் எப்படி உயர்ந்துள்ளார்கள்.உங்கள் வேலை வாய்ப்பை பறித்தவர்கள் இவர்கள் தான்" என்று பிரச்சாரம் செய்தார்கள்.பொராட்டம் நடந்தது.ஏமாந்த மத்தியதர வர்க்கம் மூர்க்கமாகப் பொராடியது.
பந்த் அறிவிக்கப்பட்டது அகமதாபாத்,சூரத்,பரொடாஎன்று மாநிலம் முழுவதும் பரவியது.மத்திய மாநில அரசுஊழியர்கள் ஆசிரியர்கள்,வங்கி உழியர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். ஆனால் எல்.ஐ.சி ஊழியர்கள் மட்டும் பங்கெடுக்க மறுத்துவிட்டனர்."சமுக நீதியின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஆடிமைபட்டிருந்தவர்களுக்கு,நியாயம் கிடைத்துள்ளது.இது பாரபட்சமானது அல்ல. இது நியாயத்தின் பாரபட்சம் ஆகவே இந்த.போராட்டத்தில்
கலந்து கொள்ளமாட்டோம்" என்று அறிவித்தனர்
பலம் பொருந்திய இந்த சங்கத்தை உடைக்க நிர்வாகம் சமயம்பார்த்துக்கொண்டிருந்தது. ப.ஜ.க ஆதரவாளர்கள் கருங்காலிகள் என்று குரலெழுப்பி தடுக்க எல்.ஐ.சி ஊழியர்கள் A.I.I.E.A LONG LIVE என்று கொஷம் போட்டுக்கொண்டு அலுவலகம் சென்றனர். அரசு ஊரடங்கு உத்திரவினப்போட்டது.ஊழியர் அசரவில்லை. கல்கத்தாவில் உள்ளதலமையை அணுகினர். "நிர்வாகத்திடம் வேலைக்கான 'பாசை" வாங்கிக்கோண்டு உள்ளே நுழையுங்கள்" என்றது அந்த தீரமிக்க தலைமை.காத்திருந்த நிர்வாகம் வழங்க மறுத்தது.ஊழியர்கல் அசரவில்லை".காப்பீட்டு ஊழியர் சங்கம் வாழ்க' என்று குரலெழுப்பியவாரே உள்ளே சென்று சமூக நீதியைக் காத்தனர்.
நான் ஓய்வு பெற்று பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. வங்கியில் என் ஓய்வூதியத்தை எடுக்கும் போதெல்லாம் என்மனம் A.I.I.E.A என்று குரலேழுப்பும். சுற்றுமுற்றும் .பார்த்துவிட்டு என் வாய் LONG LIVE என்று முணுமுணுக்கும்.
7 comments:
எல்.ஐ.சி ஒரு அரசு நிறுவனம் (State) என்ற நீதிமன்றத் தீர்ப்பை
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் பெற்றுத்தந்ததன
விளைவாகத்தானே இட ஒதுக்கீடு அமுலானது! ஆனால் இந்த
உண்மையை சிலர் மறைக்கிறார்கள், சிலர் மறந்து விட்டனர்
என்பதுதான் வேதனையானது. குஜராத்தில் மட்டுமா, மண்டல்
கமிஷனுக்கு எதிராக வட இந்தியா முழுதுமே கலவரம்
நிலவிய சூழலில் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உறுதியோடு
இருந்ததும் ஏ.ஐ.ஐ.இ.ஏ தானே! கட்டாக்கில் நடந்த அகில
இந்திய மாநாட்டில் கலந்து கொண்டீர்களா தோழர்?
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் உறுப்பினர்
அல்லாதவர்கள் கூட சமீபத்திய ஊதிய உயர்விற்குப் பின்பு
மனதுக்குள் சொல்கிறார்கள்
AIIEA LONG LIVE
இதுவரை தெரிந்து கொள்ளாத தகவல்.
பெருமையாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது காஸ்யபன் சார்.
இராமாயண ராமன் என்பவர் கூட ஒரு 14 ஆண்டுகள் மட்டுமே வனவாசம் சீதை மற்றும் லட்சுமணனுடன் சென்றிருக்கிறார்.ஆனால் ஜனத்தொகையில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பகுதியாக இருக்கும் தலித்துகள் அதையும் தாண்டி ஒரு 16 ஆண்டுகள் பரிதவிக்க வேண்டி இருந்திருக்கிறது எல் ஐ சியில் மட்டும் .
எத்தனை யுகங்கள் இனியும் சமூக நீதிக்காகக்காத்திருக்க வேண்டி இருக்கிறதோ....
ஆயுள் காப்பீடு 1956ம் ஆண்டு தேச உடைமையாக்கப்பட்டது..1972ம் ஆண்டு இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது.அதுவும் ஊழியர் சங்கம் வழக்குப் போட்டு வெற்றி பெற்றதினால்.திலீப் அவர்களே! தலித்துகளின் பாடுகளைக் களைய மற்ற பகுதி மக்களும் தயாராகி வருகிறார்கள்.நல்லது தானே!---காஸ்யபன்
திரு திலிப் அவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று
நினைக்கிறேன். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
எல்.ஐ.சி ஒரு அரசு நிறுவனம் என்ற தீர்ப்பைப் பெற்றுத்
தந்த பின்பு எஸ்.சி / எஸ்.டி மக்களுக்கான இட ஒதுக்கீடு
பணி நியமனத்திலும் சரி, பதவி உயர்விலும் சரி
முறையாக அமுலாக்கப்படுகின்றது. அதே போல்
மண்டல் கமிஷன் பரிந்துரை அமுலான பின்பு
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடும்
அமுலாகிறது. 1995 ல் சிறப்புத் தேர்வும் நடைபெற்று
பணி நியமனமும் நடந்தது. நீண்ட நாட்களாக
நின்று போயிருந்த பணி நியமனமும் சங்கத்தின்
விடா முயற்சியால் கடந்த ஆண்டு முதல் மீண்டும்
தொடங்கி விட்டது. சமூக நீதி என்பது நிச்சயமாய்
எல்.ஐ.சி க்குள் உள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ்
ஊழியர் சங்கம் இதனை உறுதிப்படுத்தும்.
காப்பீட்டு நிறுவனங்களில் எல்.ஐ.சி.க்கு இருக்கும் நம்பகத்தன்மைக்கு.அதன் ஊழியர் சங்கமும் ஒரு காரணமோ?
சிவகுமரன்!இந்த நம்பகத்தன்மையை உடைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. மன்மோகன், உங்கஊர் ப.சி,ஆகியோர் ஆதரிக்கின்றனர். 1956ம் ஆண்டு 5கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இன்றயகணக்கில் சுமார் 10,000கோடி டிவிடெண்ட் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்க போண்டி இன்சூரன்ஸ் கம்பெனிகள் கிளிண்டன் மூலம் நிர்ப்பந்தித்து முயன்றன."மன்மோகனும்,வாஜ்பாயும் சரி என்கிறார்கள் . அங்குள்ள பலம் பொருந்திய சங்கம் எதிர்க்கிறது" என்று புலம்பினார் கிளிண்டன்.நிதி நெருக்கடியின் போது உலகமே சிக்கி தவித்தபொது இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.காரணம் காப்பீட்டுத்துறையும் வங்கித்துறையும் பொதுத்துறையில் இருந்தது தான் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்---காஸ்யபன்..
Post a Comment