Monday, May 30, 2011

பாவலர் வரதராசன் ---என்ற பாடிப் பறந்த குயில்

பாவலர்வரதராஜன் --பாடிபறந்த குயில் ..........
அந்தக் குயில் தன் தம்பிகள் பாஸ்கர்,ராஜாசிங், அமர்சிங் என்ற மூன்ரு தம்பிகளை வளர்த்து தமிழ் திரைஉலகத்திற்கு தந்தது.
பாவலரோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டபொது அவருடைய தம்பிகள் சிறகு முளைத்து சென்னை சென்றிருந்தனர். அப்பொது நன் மதுரை பீபிள்ஸ் த்யெட்டர்ஸ் குழுவில் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். மதுரை அரசமரம் சந்தில் இருந்த பொதுத்தோழிலாளர் சங்கத்தில் தான் இரவு நாடக ஒத்திகை நடக்கும். இரவு வெகுநேரம் கழித்து மூன்று தொழர்களுடன் ஆர்மெனியப்பெட்டி,தபெலா ஆகியவற்றொடு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு படுக்க வருவார்.ஒடிசலான தேகம்,விரிந்த கண்கள், கூர்மையான நாசி .சட்டையின் மெல் ஒரு துண்டு .
1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு பொராட்டத்தில் உயிரிழந்த ராஜெந்திரன் தாயார் தன் மகனை இழந்த சொகத்தை வர்ணித்து அவர் பாட்டினால் கண்ணீர் சிந்தாதவர்கள் இருக்கமுடியாது.புதுப் புது பாடல்களை உருவாக்கி பாடுவார்."ரூப் தேரா மஸ்தானா " என்ற பாட்டின் மெட்டில் அவர் பொட்ட பாடல்மிகவும்பிரபலம் .
"லூப் தரான் சரீதானா-
மாட்டலைனா விடுறானா "
"ஆதித்தனாரும் பொதித்ததென்ன
போதித்த பின்னே சாதித்ததென்ன "
என்று பாடுவார்.
வறுமை அவரை பாடாய் படுத்தியது. பழக்கவழக்கங்கள் மாறின. இந்த மாற்றங்களை கட்சி ஏற்கவில்லை. நிகழ்ச்சிகள் இல்லை .அவருடைய ஆர்மெனியப் பெட்டியை
எங்கள் குழுவுக்கு கொடுத்தார். நாங்கள் கொஞ்சம் பணம் கொடுத்தொம்.
பண்ணைப்புரத்திலோ, கொடைக்கானலிலோ நிலத்தகாறாரில் சிக்கியுள்ளதாகவும் கே.டி. கே அவருக்காக வாதாடுவதாகவும் "ஜனசக்தியில் " செய்தி வந்தது. அவரை q பிரான்ச்விசாரிப்பதாக வதந்தி வந்தது. தி .மு.க. அவரை
மிரட்டியது. வேறு வழியில்லாமல் தி.மு.க.வில் சேர்ந்தார்.
1977ம் ஆண்டு .மார்க்ஸிஸ்டு கட்சியின் நாளேடான "தீக்கதிர்" பிரும்மாண்டமான கட்டிடம்கட்டி திறப்பு விழ நடத்த இருந்தது.
தி.மு.க.வில் செர்ந்திருந்த பாவலரின் முதல் நிகழ்ச்சி. மதுரை மில்லுக்கு எதிராக மேடை அமைத்திருந்தார்கள்.பிரும்மாண்டமான கூட்டம் .மார்க்ஸிஸ்ட் தொண்டர்கள் தான் அதிகம். பாவலர் பாடினார்."நீ இருக்கும்போது வரவில்லயே ---அண்ணா ' என்றபாடல் ஊனை உருக்கிவிட்டது.
"தீக்கதிர் " புதிய கட்டிடத் திறப்பு விழா. மதுரை ஜெயில் ரொடு வழியாக புறவழிச்சாலையை அடைந்து ஊர்வலம் செல்கிறது. அரசரடி திருப்பம் தாண்டி பள்ளிவாசல் அருகே ஊர்வலத்தில் தொழர்கள் "கசமுச"என்று பெசிக்கொண்டார்கள். விசாரித்தேன். பார்வையாளரகள் கூட்டத்தில் பாவலர் நின்று பார்த்துக்கொண்டிருப்பதாய் சொன்னார்கள். விலகி பார்வையாளர்கள் பக்கம் சென்றேன் .தலையில் துண்டை போட்டு முகம் மறைத்துக்கொண்டு செக்கச்சிவந்த கண்களொடு பரவசமாக பாவலர் பார்த்துக்கொண்டு நின்றார். என்னைப் பார்த்ததும் கூட்டத்துக்குள் மறைந்துவிட்டார்.
அது தான் நான் அவரைக்கடைசியாகப் பார்த்தது. .

6 comments:

ஹரிஹரன் said...

பாவலர் வரதராசன், அவர் தம்பிகள் இளையராஜா ஆகியொர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார்கள் என கேள்விப்படுகிறேன். எப்படி இளையராஜா் ஆத்திகராக கம்யூனிச இயக்கத்திற்கும் அவருக்கும் சம்பந்தமில்லாத அள்விற்கு சென்றார்?

திலிப் நாராயணன் said...

கங்கை அமரன் தொகுத்திருக்கிற பாவலர் வரதராசன் பாடல்கள் தொகுப்பின் முன்னுரையில் இளையராஜா இப்படிக்குறிப்பிட்டிருக்கிறார். எனது அண்ணனின் இறுதி நாட்களில் இடதுசாரிகள் உதவி செய்யவில்லை.

kashyapan said...

திலீப் அவர்களே! "வறுமை அவரைப்பாடாய்ப்படுத்தியது.----மாற்றங்களை கட்சி ஏற்கவில்லை " என்று குறிப்பிட்டிருக்கிறேன்.அப்பழுக்கற்ற நிருபன் சக்கரவர்த்தி மாறாக நடந்து கொண்டதால் காட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். சொம்நாத் சட்டர்ஜி விஷயமும் உங்களுக்கு தெரிந்திருக்கும். அண்ணன் வறுமையில் தவிக்கும் போது தம்பி என்ன செய்தார்? யுவன்,பவதாரிணி,பிரபு,எல்லாரும் திரைப்படத்துறையில் இருக்கிறார்கள். பாவலரின் மகன்...?---காஸ்யபன்

திலிப் நாராயணன் said...

பாவலரின் புதல்வர் ஸ்டாலின் வரதராஜன் என்ற பெயரில் ஒரு திரைப்படத்திற்கு இசையமைத்து அறிமுகமாவார் என்று ஒரு செய்தி பத்தாண்டுகளுக்கு முன்பு படித்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் அப்படி ஒரு நிகழ்வு தமிழ் சினிமாவில் நடந்தேறவில்லை. எல்லாமே SURVIVAL OF THE FITTEST என்றுதான் தோன்றுகிறது.

kashyapan said...

திலீப் அவர்களே! வடலூர் சிதம்பரம்தயாரித்த படம் என்று நினைக்கிறேன் . பாவலரின் மகன் என்பதால் ஓடிச்சென்று பார்த்தேன் . அதன் பிறகு....? .பாஸ்கரன் ஒருவர் தான் கட்சி நண்பர்களொடு தொடர்பில் இருந்தார்.மற்றவை பற்றி அதிகம் பேசாமல் இருப்பது நலம்.வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

சிவகுமாரன் said...

பாவலரை விடுங்கள். வறுமையின் காரணமாக திமுக பக்கம் போனார். த.மு.எ.ச. வளர்த்துவிட்ட திண்டுக்கல் லியோனி தானைத்தலைவர், தானைத்தலைவர் என்று கலைஞர் டிவியில் முழங்குவதைப் பார்த்தீர்களா?