அந்த பாகிஸ்தானத்துக் கவிஞன் .......
மேரா ஜூதா ஹை ஜபானி , என் செருப்பு ஜப்பானிலிருந்து,
யே பத்லூன் இங்கிலீஸ்தானி , என் உடுப்பு இங்கிலாந்திலிருந்து ,
லால் டொபி ரூசி , என் சிவப்பு தொப்பி ரஷ்யாவிலிருந்து
பிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி ! என் இதயமோ இந்துஸ்தானத்திலிருந்து !
1955ம் ஆண்டு" ஸ்ரீ 420" என்ற திரைப்படம் வந்தபொது அதில் உள்ள இந்த பாட்டுதான் அன்று இளைஞர்களின் தேசீய கீதமாக இருந்தது.
இந்த பாட்டை எழுதிய கவிஞர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர்.ஷைலெந்திர என்ற அவர் 1923ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23ம் தேதி ராவல் பிண்டியில் (british india ) பிறந்தார்
சங்கர் தாஸ் கெசரிலால் என்பதுஅவருடைய பெயர்.புனை பெயர் ஷைலெந்திர.அவரும் பெற்றொரும் லக்னௌ வந்துதங்கினர் அப்பொது ஷைலெந்திராவுக்கு 20 வயது இருக்கலாம். அவருடைய தாயர் திடீரென்று மரணமடைந்தார்.வெருப்புற்ற கவிஞர் நத்திகராக மாறினார். சுதந்திர வேள்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
தனக்கென்று தனிப் பாணியை வைத்துக்கொண்டார். வண்டிப்பேட்டை, சந்தைப்பெட்டை ஆகிய இடங்களில் கூடும்சாதாரண மனிதர்களிடையே கவிதைகளை எழுதி வாசிப்பார்.உணர்ச்சியூட்டும் இந்தக்கவிதைகள் நேரடியாக என்மக்களைச்சென்றடைய இது தான் என் வழி என்பார். தொழிலாளர்களும் பாடுபடும் மக்களும் இவரை விரும்பி வரவேற்றனர். மெள்ள மெள்ள இடதுசாரி இயக்கங்களோடு தொடர்பு ஏற்பட்டது.இந்திய மக்கள் நாடக சங்கத்தில் இணைந்தார். (Indian People Theatre Association--I.P.T.A)
இதற்கிடையே இந்திய ரயில்வேயில் வெலை கிடைத்தது. அதனால் மும்பை பொக வேண்டியதாயீற்று. வேலை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆனாலும் இடசாரிகள் நடத்தும் கூட்டங்களில் பேசுவதையும் கவிதை வாசிப்பதையும் தொடர்ந்தார்.கவியரங்கங்களில் ஷைலேந்திரா வருகிறார் என்றால் மக்கள் மொய்த்தனர்.
அப்பொது மும்பையில் பிரித்விராஜ, ராஜ் கபூராகியோர் தங்கள் நாடக சினிமா முயற்சிக்காக கலைஞர்கள் கவிஞர்களைத் தேடிக்கோண்டு இருந்தனர். இடது சாரிகள் நடத்தும் கலைவிழாக்கள், கவியரங்கங்கள் தான் இவர்களின் மையம் . ராஜ் கபூர் ஒரு நிகழ்ச்சியில் ஷைலேந்திராவின் கவிதையைக் கேட்டிருக்கிறார். "பஞ்சாப் பற்றி எறிகிறது" என்ற தலைப்பில் அவர் பாடிய உணர்ச்சி மிக்க கவிதை ராஜ் கபூரை உலுக்கி எடுத்து விட்டது. உங்கள் கவிதைகளைத்தாருங்கள் புத்தகமாக பொடுகிறென் என்று கூறியுள்ளார்.இந்த தொடர்பு அவர் மரணம் வரை நீடித்தது.
ராஜ் கபூரின் "பர்சாத் " படத்திற்காக அவர் எழுதிய "பர்சாத்-கி " என்ற பாடல் நிலைத்து நின்றது.ராஜ் கபூர்,கே . ஏ. அப்பாஸ் ,சங்கர் ஜெய்கிஷன், ஷைலெந்திரா என்ற நலவர் குழு உதயமாகியது.
பால்ராஜ் சஹானி, செதன் ஆனந்த் (தெவானந்த்தின் அண்ணன்),ஹிங்கல், சலீல் சவுத்திரி, பிமல்ராய், நிமாய் கோஷ் , என்று இடதுசாரிகள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள் அப்பொது.
7 comments:
நல்ல பதிவு.
நல்ல விபரங்கள்.
அறிந்திராத புதிய தகவல்கள். . அரிய பொக்கிஷங்கள்.
\\இடதுசாரிகள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள் அப்பொது.//
கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தவர்கள் இப்போது யாருக்கோ காவடி தூக்கிக் கொண்டிருக்கிறார்கள். காலத்தின் கட்டாயமா ?
தெரிய வாய்ப்பே இல்லாத தகவல்கள். நன்றி.
இடதுசாரிகள் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள்... அப்போதும் யாரும் கவனிக்கவில்லை, இப்போதும் யாரும் கவனிப்பதில்லை ?
அப்பாதுரை அவர்களே! சிவகுமரன் அவர்களே ! பொராட்டதிலிருந்து நடிகர்களுக்கு விலக்கு அளித்த கட்சிகளையும் தெரியும்.விலக்கு வாங்கிய தமிழ் நடிகர்களையும் தெரியும்.பால்ரஜ்சகானி இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடதுசாரி என்பதற்காகமட்டும். நீதிமன்ற தலயீட்டின் காரணமாக நடிக்கமட்டும் அனுமதிக்கப்பட்டார். காலையில் சிறையில் களி தின்று விட்டு" ராயல் புளூ" பொலீஸ் வண்டியில்வந்து நடித்து விட்டு மாலை சிறைக்குச்செல்வார். நீங்கள் மனதார இடது சாரிகளிடம் கோபம் இல்லாதவர்கள் என்பதை நானுணர்ந்தே இருக்கிறென் .வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்
மிக நுணுக்கமான விவரங்கள் சார்.. கவிஞர்களின் மாறுபட்ட அணுகுமுறை என்றுமே வியக்க வைக்கும்.. மக்கள் கவிஞர்கள் இடது சாரியாய் ஒரு கட்டத்தில் இருப்பது தவிர்க்க இயலாதது..சிவகுமாரன் . இது இன்னமும் விவாதிக்கப் பட வேண்டிய விஷயம்..
Post a Comment