Tuesday, June 14, 2011

கள்ளப்பணம் வைக்க கிட்டங்கிகள் .............

கள்ளப்பணத்தின் கிட்டங்கிகள்.........

மதுரைச்செர்ந்தவர்களுக்கு "கிட்டங்கி" என்ற வர்த்தை தெரிந்திருக்கும் அங்கு வடக்குமாசிவீதி,கீழமாசிவீதி களில்கிட்டங்கி கடைகள் என்ற பலகைகளைப் பார்த்திருக்க லாம். இந்தக்கடைகளில்,உளுந்து,பருப்பு, வத்தல், சீனி போன்ற பொருட்களை மூடைமுடைகளாகவோ ,சிப்பங்களாகவோ வாங்கி மொத்தவியாபாரத்திற்காக வைத்திருப்பார்கள்.கம்பம்,தேனி, திண்டுக்கல்,காரைகுடி,ராமநதபுரம் வர்த்தகர்கள் மொத்தவிலைக்கு வாங்கிச்செலவார்கள். குடிதனக்காரர்களும் வருடாந்திரத்திற்கு தேவையான பொருட்களை மொத்தவிலைக்கே வாங்கிச்செல்வார்கள்.

இப்போது பணத்தை மூட்டை மூட்டையாக வைக்கவும் கிட்டங்கிகள் வந்து விட்டான. பணம் என்றால் கள்ளப் பணம்.வர்த்தகர்கள், சிறு தொழிலதிபர்கள், லெவாதெவிக்காரர்கள் ஆகியொரிடம் செரும் கள்ளப்பணத்தை கடைகளிளோ, அலுவலக்ங்களிலோ வைக்க முடியாது. இதனை வைக்க நம்பகமான ஒரு இடம் தேவைப்படுகிறது.இதனை சில வங்கிகள் (தனியர்) செய்து உதவுகின்றன.

எனகுத் தெரிந்த நண்பர் N.R.I. ஒருவர் ஆரம்பித்த தனியார் வங்கியில் வேலைக்குச்செர்ந்தார். அவருடைய வேலை? காலை பத்து மணிக்கு அவர் சென்றவுடன் மெனெஜர் ஒருகாரையும் கொடுத்துவிடுவார். சிலதொலை பேசி எண்களையும் கொடுப்பார். அந்த நபர்களொடு இவர் தொடர்பு கொண்டு அவர்களைச்சந்திக்க வேண்டும்.அவர்கள் 10லட்சம்,20 லட்சம் மூட்டைகளில் பணத்தை கட்டி தயாராக வத்திருப்பார்கள். அதனை எடுத்துக்கொண்டு வங்கியில் கொடுக்கவெண்டும். இதற்கு எந்த ரசீதும் கிடையாது. வங்கியில் உள்ள Money Godown என்ற அறையில் அதனை போட்டுவிடுவார்கள்.சொந்தக்காரர் எப்பொது வேண்டுமானாலும் எவ்வளவு வெண்டுமானாலும் எடுத்துக் கொண்டு பொகலாம். மெனெஜுருக்கும் அவருக்கும் எழுதப்படாத ஒப்பந்தம் (Gentlemens agreement !!!) அது தான்
இந்த வசதிக்காக வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கும் .

" அந்த அறையில் பணம் குவிக்கப்பட்டிருக்கும் .எனக்கு பார்க்கவே பயமாக இருக்கும். யார் வேண்டுமானாலும் எடுக்கலாம்.கணக்குவழக்கு கிடையாது. என்ன மொசடியோ என்னவோ என்று பயத்தில் அந்த வங்கி வேலையை விட்டுவிட்டேன்"என்றார் நண்பர்.

அந்த வங்கியை ஆரம்பித்தவர் பெயர் இந்துஜா.

1994ம் ஆண்டு ஆரம்பித்துவைத்தவர் அன்றய நிதி அமைச்சர்
Dr.மன்மொகன் சிங் .

7 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புதிய தகவல்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டு ஓட்டும் போட்டாச்சி.

hariharan said...

இந்துஜா என்பது அசோல் லேலண்ட் நிறுவந்த்தின் ஒரு பிரிவு தானே?

கள்ளப்பணத்தை போட்டு வைக்கும் வங்கிகளை ஆங்கிலத்தில் #tax heavens# என்று சொல்கிறார்கள். இந்த Heaven களை நடத்துவது ஐரோப்பிய நாடுகள். மனித உரிமைகளைப் பற்றி வாய் கிழியபேசும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த கள்ளப்பணம் ஏழைமக்களை சுரண்டிய பணம் என்று தெரியாதா? ஆயுதம் தாங்கிய தீவிரவாதத்தைவிட பொருளாதார தீவிர்வாதம்தான் மோசமானது.
கிட்டங்கிகளை வைத்து தான் சுவிஸ் நாட்டின் பொழைப்பே நடக்கிறது.

பாரதசாரி said...

ஆஷோக் லெய்லேண்ட் என்ற மாபெரும் நிறுவனம்,HTMT என்ற BPO நிறுவனம் இருந்தது தெரியும். ஆனால் indusInd வங்கியும் இவர்களைச் சேர்ந்தது என்பது ஆச்சரிய தகவல்.இதில் இவர்களின் தில்லு முல்லு செயல்பாடு பெரிய அதிர்ச்சி!
http://hindujagroup.com/global-investments/banking-finance/indusind-bank-limited.html

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஹரிஹரனின் ரெண்டாவது பத்தியின் கருத்துகளில் உடன்படுகிறேன்.

குறிப்பாக நிதி நிர்வாகம் குறித்த சட்ட திட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானவை அல்ல என்பதான தோற்றத்தையே முதலைகளைப் போஷிக்கும் அரசு தருகிறது.

யாரும் சொல்லாத விஷயங்கள்.

'பரிவை' சே.குமார் said...

புதிய தகவல்...

சிவகுமாரன் said...

வயிறு எரியுதுங்க.