Wednesday, June 29, 2011

முதுமை கம்பீரமானது ........

முதுமை கம்பீரமானது..........

ஜப்பானில் சுனாமி வந்து அந்தமக்கள் பேரழிவைச்சந்தித்தார்கள்.ஃபூகு சமா தீவில் அணு உலை வெடித்தது.ஒன்றல்ல.இரண்டு வெடித்தது.ஏராளமான சேதம்.பாவிகள் முழுவிவரத்தையும் சொல்லமாட்டார்கள்.இந்த விபத்தினைத் தடுக்க அரசு விஞ்ஞானிகளை அழைத்துக்கேட்டது."அணு உலையின் வெப்பத்தக் குறக்க வேண்டும்.சமுத்திர நீரை ஹெலிகாப்டர் மூலம் உலையின் மீது கொட்டினால் வெப்பம் குறையும்."என்று அவர்கள் ஆலோசனை கூறினார்கள்.

உலை தனியாருக்குச்சொந்தமானது.ஜப்பான் அரசு அவர்களிடம் அனுமதி கேட்டது.கதிர் வீச்சல் ஏற்படும் சேதம்,சமுத்திரநீரால் இயந்திரங்களுக்கு ஏற்படும் சேதம் இரண்டையும் முதலாளி கணக்குப்போட்டான்.இயந்திரத்தைப் பாதுகாக்க முடிவெடுத்தான். அதனால் சமுத்திரா நீரைஉலையின் மீது அரசால்கொட்டமுடியவில்லை.உலை வெடித்து கதிர்வீச்சு அமெரிக்காவின் கலிபோர்னியாவரை இருந்ததாகச்சொல்கிறார்கள்.

உலை இருந்த இடத்தில் கதிவீச்சு இருக்கும்.சுமார் ஆயிரம் வருடங்கள் வரை இருக்குமாம். கதிர்வீச்சு பரவாமல் இருக்க அதனை மூடவேண்டும்.மூடும் பணி ஜப்பானிய மொழியில் சொல்வதென்றால் "கிடானை,கிட்சுயி,கிசென் " என்கிறார்கள்.ஆங்கிலத்தில்Dirty, Difficult, Dangerous. தமிழில் அவலமானது, கடினமானது,ஆபத்தானது.எராளமான இளம் இஞ்சினியர்கள் தங்கள் உயிரைப் பணயமாக்கி இந்தப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் . கதிர் வீச்சால் அவர்கள்முடமாகலாம்.மலடாகலாம்.அவர்களின் சந்ததிகள் பாதிக்கப்படலாம்.தங்கள் நாடும் தங்கள் மக்களும் காப்பாற்றப்படவேண்டும் என்பதைதவிர அவர்களுக்கு வேறு சிந்தனையில்லை

யசுடெரு யமட என்பவர் இஞ்சினியர் எழுபத்தீரண்டு வயதாகிறது.ஸ்மிடொமோ மெடல் இண்டஸ்றிஸில் பணி . அவர் " எனக்கு வயதாகிவிட்டது. நான் ஒரு இஞ்சினியர். என்னால் இந்தப்பணிகளைச்செய்யமுடியும். கதிர்வீச்சினால் எனக்கு மலட்டுத்தன்மை வந்தால் என்ன? எனக்கு சந்ததிவேண்டாம். ஆண்டு அனுபவித்தவன் நான். நான் உலையை மூடும் பணியில் இறங்கப்போகிறேன். நம் நாட்டின் முதிய இஞ்சினியர்களே வாருங்கள் .கதிர் வீச்சைத்தடுப்போம்.இளைஞர்களையும் மக்களையும் காப்போம்" என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

அவர் பின்னல்முதியவர்கள் திரண்டு வருகிறார்கள்.

முதுமை கம்பீரமானது. .

8 comments:

மோகன்ஜி said...

இவர்களையா முதுமை அடைந்தவர்கள் என்கிறீர்கள்?
தீராத சிரஞ்சீவித்த்வம் பெற்றவர்கள்.

வயதாவது இந்த உடலுக்குத் தான்.. உள்ளத்துக்கு அல்ல..

அருமையான பதிவு சார்! நெகிழ்ந்து போனேன்

சிவகுமாரன் said...

ஆமாம்.
முதுமை கம்பீரமானது
உங்கள் எழுத்துக்கள் போல.

சிவகுமாரன் said...

ஆமாம்.
முதுமை கம்பீரமானது
சக்கர நாற்காலியில்
உருண்டு கொண்டிருந்தாலும்..

சிவகுமாரன் said...

ஆமாம்.
முதுமை கம்பீரமானது
இனமே அழிந்தாலும்
பணமே பிராதானமாகும் போது.

சிவகுமாரன் said...

ஆமாம்.
முதுமை கம்பீரமானது
சக்கர நாற்காலியோடு
பறந்து போய்
பதவிக்காக
போராடும் போது.

hariharan said...

இதல்லவோ முதுமையின் பக்குவம்.

அனுபவமிக்க இந்திய விஞ்ஞானிகள் விலைபோகிறார்களே? என்னவென்று சொல்வது. அவர்களை எதிர்க்கமுடியாமல் பெரிய பிம்பங்கள் கட்டப்பட்டிருக்கிறது. உண்மைக்கு அதை உடைக்கும் சக்தி உண்டு.

ஹரிஹரன்

பாரதசாரி said...

இந்தியாவில் வயசானாலும் நிறைய மனைவி - துனைவி - **வி எல்லாம் தேவை. ஜப்பானில் வேண்டுமானால் முட்டாள்தனமாக நாட்டுக்காக உழைக்கலாம். 88 வயது நிரம்பிய தமிழ் முதியவருக்கு வீட்டில் முடிக்க வேண்டிய கடமையே ஏராளம் இருக்கிறதே பாவம்.

நான் ரசித்த ஒரு மொழிபெயர்ப்பு சிறுகதை கீழே

http://tamil.webdunia.com/miscellaneous/literature/stories/0712/29/1071229005_2.htm

அப்பாதுரை said...

சாதனை என்றால் என்னவென்று சிந்திக்க வைக்கிறது.