பாலு மஹேந்திரா என்ற அறிவார்ந்த மனிதர்......
80ம் ஆண்டுகளின் முற்பகுதியில் சென்னையில் நாவல் பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடத்தியது.
பிரபலமான நாவல்கள் தெர்ந்தெடுக்கப்பட்டு அதன் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர்.எழுத்தாளர்களில் ஒருவர் விமரிசிப்பார் . பின்னர் பயிற்சியாளர்கள் தங்கள் கருத்தினை சொல்வர்கள் வந்திருந்த ஆசிரியர் விளக்கமளிப்பார். இப்படி ஒரு பயிற்சிமுகமை இது வர யாரும் நடத்தியதில்லை என்னும் அளவுக்கு வெற்றிகரமாக நடந்தது.
அசோகமித்திரன், பொன்னீலன், என்று பலர் வந்தனர்.அசோகமித்திரனின் "தண்ணீர்" என்ற நாவலை விமரிசிக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமுக்கு பாலு மஹெந்திரா அவர்களும் கருத்துரையாளராக பங்கு பெற வந்திருந்தார்.மதிய இடை வேளையின் பொது பாலு அவர்களுடன் பெச வாய்பு கிடைத்தது.
உலக சினிமாவிலிருந்து,பேசினோம்.கோதார்து,டி சிகா,என்று இடதுசாரி கலைஞர்களை பற்றி விவாதித்தோம் .
" பாலு சார்! ஜப்பானிய திரைப்படம் ,பிரன்சு திரைப்படம், ஜெர்மனிய திரைப்படம் என்று இருக்கிற து. அவை அந்த நாடுகளின் கலாச்சார பண்பாடுகளை சித்தரிக்கின்றன. ஒட்டுமொத்த மாக " இந்திய சினிமா" என்று இருக்கிறதா? என்று கெட்டேன்.
மென்மையாகப் பேசுபவர் அவர்.கைப்பிடிச்சுவரிலிருந்து இறங்கி என் அருகில் வந்து எந்தோளில் கைபோட்டு குலுக்கினார்.என்னிடமிருந்து விலகி என் கண்களைப்பார்த்து " தமிழ் சினிமா இருக்கிறது.மலையாள சினிமா இருக்கிறது வங்காள .கன்னட மாராத்தி படங்கள் ,ஏன் இந்தி சினிமாவும் உள்ளது. இந்திய சினிமாவை நம் தான் உருவாக்க வேண்டும். " என்றார்.
13 comments:
மலரும் நினைவுகள்....
நல்ல பதிவு.
அரிய செய்திகளை தருகிறீர்கள்.
வாழ்த்துக்கள் ஐயா.
ஐயா உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிரும்போது எங்களையும் அந்த நிகழ்வுக்கே கூட்டிச்சென்றதை போல உணரமுடிகிறது, பாலுமஹேந்திராவின் படங்கள் இன்றும் பெயர் சொல்லக்கூடியவை.... அவர் சொன்ன கருத்து நச்... இந்திய சினிமாவை நாம் தான் உருவாக்கவேண்டும்..
அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு.
மிக அருமையான கலைஞர் பாலுமகேந்திரா. அவரின் வீடு போன்ற படங்கள் கவிக்கப்படாமலே போனது வருத்தமளிக்கும் விஷயம்.
பகிர்வுக்கு நன்றி.
சிவகுமரன் அவர்களே! பலு மஹேந்திராவின் "வீடு" திரைப்படத்திற்காக அர்ச்சனா என்ற நடிகைக்கு சிறந்த நடிகை விருது அளிக்கப்பட்டது.அந்தப் படத்திற்கும் விருது அளிக்கப்பட்டது. த.மு.எ.ச ஆண்டு தோறும் அளிக்கும் விருதும் அளிக்கப்பட்டது.---காஸ்யபன்.
அருமையான கலைஞர் பாலு மகேந்திரா அவர்கள்... அவர்களுடனான உங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி சார்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
இந்திய சினிமா என்று எப்படி ஒன்று எடுக்க முடியும்? இந்தியாவின் சிறப்பே அதன் பிரிவுகள் தானே?
பாலு மகேந்திராவைப் பற்றி அவ்வளவாக உயர்ந்த அபிப்பிராயம் எனக்கில்லை.
எல்லோருக்கும் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு உச்ச கட்ட நேரம் உண்டு. பாலுவுக்கும் அது பொருந்தும். தமிழ்நாட்டு சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. வங்காள சினிமா, கன்னட சினிமா என்றென்ன இப்போது எல்லாம் ஒரே மசாலாதான். ஒரு கதை ஒரு மொழியில் வந்து விட்டால் எல்லா மொழிகளிலும் அதை காபி பண்ணி விடுகிறார்கள்! இருப்பினும் அவர் சொல்ல வந்த ஆழமான கருத்து வேறு ஏதாவதாக இருக்கும்.
எழுபதுகளில் தஞ்சையில் பிரபுதாஸ் பட்வாரி (அப்போதைய ஆளுநர்) தலைமையில் எழுத்தாளர் விக்ரமன் இன்னும் சில பிரபலங்களோடு நடந்த தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் (முற்போக்கா என்று ஞாபகமில்லை!) என் தந்தை செயலர்!
ஸ்ரீ ராம் அவர்களே! உலகத் தமிழ் எழுத்தாலர்கள் அமைப்பு ஒன்று விக்ரமன் தலைமையில் இருந்தது. உங்கள் தந்தையார் பெயர் தெரிந்தால் என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியும் ---காஸ்யபன்
தெரிந்திருக்க நியாயமில்லை என்றே எண்ணுகிறேன். அவர் பெயர் பாலசுப்ரமணியம்.சுபாஷ்சந்திரன், பெரும்பண்ணையூரான் போன்ற புனைப்பெயர்களில் பத்திரிகைகளில் எழுதி வந்தார்.
ஒப்பிட்டு பேசுவதாக எண்ணவேண்டாம் காஷ்யபன்,பாலு மகேந்திரா போன்ற original creators -க்கு கிடைக்க வேண்டிய விருதுகள் யார் யாருக்கோ போகிறதே ஞாயமா.
விஜயன் அவர்களே! விருதுகள் வழ்ங்கப்பட வேண்டும். கலைஞர்கள் பெற்றுகொள்ள வேண்டும். இங்கு கொடுக்கப்படுகிறது.வாங்கிக் கோள்கிறார்கள்.---காஸ்யபன்.
அருமை. பகிர்விற்கு நன்றி.
Post a Comment