Saturday, August 13, 2011

தனிப் பயிற்சி மையங்களும்-தனியார் பள்ளிகளும்...

தனிப்பயிற்சி மைங்களும்- தனியார் பள்ளிகளும் ......

சமச்சீர்கல்வி பற்றிய சர்ச்சை முற்றிலுமாக முடியவில்லை. ஆனாலும் ஆகஸ்டு16 ம் தேதியிலிருந்து புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.இதில் ஆசிரியர் இயக்கங்களில் பெரும்பாலானவை இதனை ஏற்று ஒத்துழைப்பு கோடுக்கின்றன. இன்னும் தனியார் பள்ளி நிர்வகங்கள்சண்டித்தனம் செய்துவருகின்றன்."எங்கள் உயிரே பொனாலும் மெற்றிகுலேஷன் " என்ற பெயரை நீக்க மாட்டொம் .ஆங்கிலவழிக்கல்வியை தொடருவோம் "என்று கொக்கரிக்கிறார்கள் இருந்தாலும் நடந்ததுவரை நல்லதே.

மகாராஷ்ட்ற்றா,மத்திய பிரதெசம்,உ.பி,பீஹார் ஆகிமாநிலங்களில் நிலமை மிகவும் வித்தியாசமானது. இங்கு பள்ளிக்குச்செல்லாமலேயே ,வாசப்படியை மிதிக்காமலேயே +2 முடித்து பொறியியல் மருத்துவம் மற்றும் தொழில் முறைக்கல்லூரிகளில் சேர முடியும். இதற்கான சகல ஏற்பாடுகளையும் தனியார் பயிற்சி மையங்கள் செய்து கொடுக்கின்றன.உதாரணமாக தொடுவானம் பயிற்சி மையம், நம்பிக்கை மையம் என்று நாகபுரி நகரத்தில்மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மையங்கள் இருக்கின்றன.

இவர்கள் காலை 6மணியிலிருந்து 9மணிவரை பயிற்சி அளிப்பார்கள் மீண்டும் மாலை 5 மணியிலிருந்து 10 மணிவரை பயிற்சி அளிப்பார்கள் .ஒரு மணி நேரத்திற்கு ஒரு "பாட்ஸ் இது கிட்டத்தட்ட 8ம் வகுப்பில் ஆரம்பிக்கிறார்கள். பயிற்சி பெரும் மானவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம். மையங்களில் கொடுக்கும் வீட்டுப்பாடங்களை குறிப்புகளை வீட்டில் செய்து பார்க்க வேண்டும் 8,9,10,11,12 வகுப்பு பாடங்கள் நடத்தப்படும். மையங்களே தேர்வுகளை நடத்தும். இந்த மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி,என்.ஐ.டி,மற்றுமுள்ள பொறியியர்கல்லுரிகளில் ,மற்றும் பிரபலமான மருத்துவ கல்லுரிகளில் இடம் கிடைப்பதை மைய நிர்வாகிகளே கவனித்துக் கொள்வார்கள். ஐந்து ஆண்டுகளுக்கும் மொத்தமாக பல லட்சங்களை பெற்றுக் கொள்வார்கள்.

இவர்களுக்கும் அரசு அங்கீகாரம்பெற்ற பள்ளிகளுக்கும் tie-up உண்டு .பயிற்சி மையங்களில் படிக்கும் மானவர்கள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிப்பதாகவும், அவர்கள் தினம் பள்ளிவருவதாகவும் சான்றிதழ் தருவார்கள் .10 வகுப்பு,12ம்வகுப்பு அரசு தேர்வுகளுக்கு இந்த அங்கீகாரம் பெற்ற பள்ளி மாணவர்களாக அனுப்பப் படுவார்கள். இந்தப் பள்ளிகளுக்கு ஆகும் கட்டணச்சிலவு என்ன உண்டோ அதனை பெற்றொர்கள் கொடுக்க வேண்டும். அது மட்டுமே 5லட்சமாகும். (ஐந்துஆண்டுகளுக்கும்சேர்த்து)பள்ளிக்கே வராத மாணவனுக்கு கல்விக் கட்டணம் வந்தால் தனியார் பள்ளி நிர்வாகிக்கு கசக்குமா!

இந்த மையங்க ளை நடத்துபவர்கள் காங்கிரஸ்,பா .ஜ .க, சிவசேனை தலைவர்கள் . இவர்கள் பட்டா போட்டுக்கொண்டு விதர்ப்பா,மராதா, சாங்கிலி என்று ஏரியா பிரீத்துக்கொண்டு கல்விச்சேவை புரிகிறார்கள். மக்களவை சபாநாயகராயிருந்த ஜோஷி ,மகாஜன் , மாகே ஆகியோர் மிகச்சிறந்த கல்வி வள்ளல்கள் என்று சொல்வார்கள்.

மைய அரசு நடத்தும் தேர்வுகளில் குறிப்பாக பொறியியல் மருத்துவம் ஆகியவைகளில் கெள்வித்தாள்கள் out ஆவதற்கு காரணம் இந்த மையங்கள் தான் என்பது உலகறிந்த ரகசியம். ஏனென்றால் மையங்களை நடத்துபவர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்.
இந்த அனுபவத்தின் பின்னணியில் தமிழகம் பரவாயில்லை என்று சொல்லத்தோன்றுகிறது.

6 comments:

Anand said...

தெரியாத விசயங்களை தெரிந்து கொண்டேன், நன்றி.

hariharan said...

நம்ம ஊர் பரவாயில்லையே!

சரஸ்வதியை இப்படி கூவிக்கூவி விற்கிறார்களே? லட்சுமியைக் கொடுத்து சரஸ்வதியை வாங்குகிறார்கள்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
அரிய, ரகசியமான விஷயங்களை போட்டு உடைக்கிறீர்கள்.
நன்றி & வாழ்த்துக்கள் ஐயா.

அப்பாதுரை said...

interesting..
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி admissionகளில் இது போல் நிகழ்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சிவகுமாரன் said...

நம்ம மெட்ரிக்குலேசன் கொள்ளைக்காரார்களுக்கு நல்ல ஐடியா கொடுத்திருக்கிறீர்கள் அய்யா.
அவர்கள் தான் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி நிற்கிறார்கள். பாவம்.

butterfly Surya said...

அடப்பாவிகளா..:( தலை சுத்துது. பகிர்தலுக்கு நன்றி சார்.