Thursday, November 03, 2011

பி.லெனின் என்ற திரையுலகப் போராளி ....

பி .லெனின் என்ற திரை உலகப் போராளி ....

சமீபத்தில் தமிழ்நாடு சென்றிருந்தபோது லெனின் அவர்களைச்சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை முதன் முதலாக திருப்பரங்குன்றத்தில் நடந்த கலை இலக்கிய இரவில் சந்தித்தேன் .வெகு நேரம்பெசிக்கோண்டிருந்தோம்.
60-70ம் ஆண்டுகளில் தமிழ்த் திரை உலகம் மூன்று மூன்றெழுத்து நடிகர்களிடம் சிக்கிக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர்,சிவாஜி,ஜெமினி வைத்ததுதான் தான் சட்டம் என்று இருந்தது. இந்த நட்சத்திர ஆதிக்கத்தை உடைக்க பல முயற்சிகள் நடந்தன.எல்டாம்ஸ் ரொடும் மவுண்ட் ரொடும் சந்திக்கும் கீதாகபே முனையில் திரையுலகை மாற்றியமைக்க வேண்டும் என்று இளைஞர்கள் பெசிப்பேசி தொண்டை வரண்டுபோய் நிற்பார்கள். கிரமங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் லட்சியகனவோடு வந்த இளம் கலைஞர்கள் 93சி மவுண்ட் ரோடு மொட்டை மாடியில் பட்டினியால் புரண்டு புரண்டு தூக்கம் வராமல் நெளிந்தது தான் மிச்சம்.இவர்களிடையே செயலூக்கமிக்க மூன்று இளைஞர்கள் துடிப்போடு இருந்தார்கள்.கமல ஹாசன் ,பாரதி ராஜா, பி.லெனின் தான் அந்த மூவரும்.சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர்.
பாரதிராஜாவிர்கு " 16வயதினிலே " ஒரு பாதையைக் கொடுத்தது. கமலஹாசனுக்கும் அந்தப் படம் தூக்கிவிட்டது."சகலகலா வல்லவன்" என்றபடம் வந்ததும் கமல ஹாசன் நட்சத்திர ஜொதியில் கலந்து போனார்.வெற்றியின் பின்னால் முகிழ்ந்து பொன பரதி ராஜாவும் பாதயை மாற்றிக்கொண்டார். தன்னந்தனியாக அந்தப்பணியை லெனின் தொடருகிறார்.
"நாக் அவுட்" பட பாராட்டுவிழாவிற்காக திருப்பரங்குன்றம் வந்திருந்த லெனின் அவர்களோடு இது பற்றி பெசிக்கொண்டிருந்தேன்.பெரும் நட்சத்திரங்கள் நடிக்கும்படங்களை எடிட் செவதை தவிர்த்தார். புதியவர்களின் படங்களுக்கு மிகக் குறைந்த கட்டணம் வாங்கி தொகுத்தார். நட்டம் வந்தாலும் விடாமல் தன் போராட்டத்தை தொடருகிறார்.
1957ம் ஆஅண்டுவாக்கில் ஹைதிராபாத்தில் பணியாற்றினேன்.தெலுங்கானா விவசாயிகள் ஆயுதம் தாங்கி போராடி நேருவின் துரோகத்தால் தொல்வியடைததின் பின்னணியில் கம்மம்,வாரங்கல், காசிபெட்டு,குண்டூர்,நாகார்ஜுனசாகர்,என்று சுற்றி அலைந்த காலம் அது. தெலுங்கானா பொராளிகளுக்கு பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து சாதாரண மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து உதவியது நெஞ்சை நெகிழச்செய்யும்.
அந்தப் போராளிகளுக்கு திரை உலகமும் உதவியது என்பது ஆச்சர்யப்பட வைத்தது.சென்னையிலிருந்துசித்தூர்வி.நாகையா,ஜி.வரலட்சுமி,ரேலங்கி,சிவராம்,நாகபூஷணம்,நாடக நடகராயிருந்த ராமாராவ் ஆகியோர் உதவினர்.பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து.தெலுங்கானாவுக்குள் புகுந்து அங்கு கிராமம் கிராமமாக மக்களைத்திரட்டும் பணியில் "புர்ரகதா" நிகழ்ச்சிகளை ஜி.வரலட்சுமி என்ற நடிகை நடத்தியுள்ளார்.இந்ததகவலை உறுதிபடுத்த பல முயற்சிகளைச்செய்தும்தன்னந்தனியாக என்னல் முடியவில்லை.. இந்த நடிகர்களுக்கு துணையாக இருந்தவர்களில் ஒருவர் பீம்சிங். லெனினின் தந்தை .
லெனின் அவர்களடம் இது பற்றி பெசினேன். இந்த நடிகர்களின் வாரிசுகள், உயிரோடு இருக்கும் அவர்களுக்குத்தெரிந்தவர் ஆகியவர்களை அணுகி ஆவணப்படுத வேண்டும் என்று கெட்டுக்கொண்டேன்.வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய திரையுலகின் இந்தப் பங்களிப்பை ஆவணப்படுத்த என்னால் முடிந்ததை செய்வேன் என்று லெனின் கூறினார்.

11 comments:

சுந்தர்ஜி said...

லெனின் குறித்து அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி காஸ்யபன் ஐயா.

சிவகுமாரன் said...

அறியாத தகவல்கள் .
நன்றி அய்யா.

John Chelladurai said...

அருமையான தங்களது கட்டுரையை படித்த பின் தோன்றுகிறது, தமிழ் திரையுலகின் மத்திய (மெடிவல்) கால ஜாம்பவான்களான மூன்றெழுத்து மும்மூர்த்திகளுக்கு பதிலுரையாக வந்த மூன்றெழுத்து மும்மூர்த்திகள் ரஜினி கமல் லெனின் என கூறினால் மிகையாகாது என.
நன்றி அய்யா.

venu's pathivukal said...

மீண்டும் வரலாற்றுச் சுவடுகளில் இருந்து வியக்க வைக்கும் ஒரு துளியை மேலே தெறிக்கச் செய்திருக்கிறீர்கள்..நன்றி.

லெனின் ஓர் அற்புத மனிதர். திரை உலகின் வித்தியாசமான அரிய மனிதர்களில் ஒருவர். வெற்றி மடி மேல் விழக் காத்திருந்தும், புகழின் போதை தலைக்கேறும் வரம் பெற்றிருந்தும், ஆட்டம் போடாது இருந்தவர். அசராதவர். அதனாலேயே இத்தனை மதிப்பும், பேரும், புகழும் அதே துறையில் அவரால் பெற முடிந்தது. வாழ்த்துக்கள்.

எஸ் வி வேணுகோபாலன்

அப்பாதுரை said...

லெனின் ஏதாவது படம் தயாரித்திருக்கிறாரா அலல்து இயக்கியிருக்கிறாரா? அறியாத தகவல்கள். நன்றி. அவர் முயற்சி வெற்றியடையட்டும்.

எனினும், கமலகாசன் பாரதிராஜா எல்லாம் சிவாஜி எம்ஜிஆர் ஆதிக்கத்தை ஒழித்ததாகச் சொல்வது கொஞ்சம் கிண்டலாக இருக்கிறது. திறமை இருந்ததாலும் சரியான நேரம் கிடைக்கும் வரை பொறுமையாக இருந்ததாலும் பிழைத்தார்கள். அவ்வளவு தான். இன்றைக்கு கமலகாசன் ரஜனி ஆதிக்கம் - அதுவும் இல்லையோ?

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! "ஊருக்கு நூருபேர் " என்ற படம் இயக்கியதற்காக தெசீய விருது வாங்கியவர்.மிகச்சிறந்த எடிட்டர்.. அதற்காகவும் பல விருதுகளை வாங்கியவர்.கமலகாசனும் பாரதிராஜாவும் ஜோதியில் கலந்துவிட்டார்கள் என்று தான் எழுதியிருக்கிறேன்.லெனின் மட்டும் தன்னந்தனியாக போராடி வருகிறார்.திரைப்படத்துறையில் இருப்பவர்களுக்கே studiosystem, starsystem என்றால் புரிவதில்லை .இது பற்றி தனியாக பதிவிடலாம் என்று இருக்கிறேன்.வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

Harani said...

சரியான சொல்லால் பி.லெனின் பற்றிய புதிய பக்கத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள். திரைப்படம் எனும் சொல் ஆழமான அர்த்தம் பொதிந்தது என்பதை உலகத்திரைப்படங்களைப் பார்க்கும்போதெல்லாம் உணர்வேன். இப்போது லெனின் பாதை அந்த உணர்வைத் தமிழ் திரைப்பட உலகிலும் பதிக்கும் என்பதை உங்கள் பதிவு எனக்கு நம்பிக்கையூட்டுகிறது. நன்றி.

காமராஜ் said...

சாத்தூரில் நடந்த கலை இலக்கிய இரவுக்கு அவரை அழைத்திருந்தோம்.அவர் மட்டுமில்லை அவரது அருமையான படைபான’ நாக் அவுட்’ குறும்படமும் சாத்தூர் வந்திருந்தது.( இந்தப்படத்தில் சீயான் விக்ரம் நடித்திருந்தார்)அப்பொழுதுதான் அந்த எளிய போராளியைப்பார்த்தேன்.அவர் குறித்த தகவல்கள் அலாதியானது தோழர் வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

//கமலகாசனும் பாரதிராஜாவும் ஜோதியில் கலந்துவிட்டார்கள்

very funny!

சே.வேங்கடசுப்ரமணியன் said...

பவா செல்லதுரை அவர்கள் பி.லெனின் பற்றிய பதிவு முக்கியமான ஒன்று
http://bavachelladurai.blogspot.com/search?updated-max=2011-09-27T09%3A48%3A00-07%3A00&max-results=10

kashyapan said...

வெங்கடசுப்பிரமணியன் அவர்களே! பவா அவர்களின் இடுகையை படித்துள்ளேன் .மிகச்சிறப்பாக இருக்கும்.லெனின் பற்றி அவர் எழுதியுள்ளவை மனதை நெகிழச்செய்யும். எனக்கு லெனினைப்பிடிக்கும். அவர் தந்தை பீம்சிங் என்பதாலும் கூட ---காஸ்யபன்