Saturday, November 19, 2011

திரைப்படம் பற்றியது அல்ல.....

திரைப்படம் பற்றியது அல்ல......

1954ம் வருடம் ."முன்னா " என்ரு ஒரு திரைப்படம் வந்தது. இந்தியில் பாட்டு இல்லாமல் வந்த முதல் படம்.குவாஜா அஹமது அப்பாஸ் எடுத்தது. கே.ஏ.அப்பாஸ் ஒரு இடது சாரி எழுத்தாளர். கலைஞர்.இயக்குனர். நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்


நேரு ஒரு திரைப்படப் பிரியர் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
"'முன்னா " படத்தை நேரு குடும்பத்தினர் பார்ப்பதற்காக அப்பாஸ் தனியாக ஏற்பாடு செய்தார்.நேருவுக்கு படம் பிடித்திருந்தது.அதில் நடித்த சிறுவன் மாஸ்டெர்.ரோமி யின் நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்திருதது.மருநாள் காலை ரோமியை தன் வீட்டிற்கு காலை உணவுக்கு அழைத்துவர முடியுமா என்று அப்பாஸிடம் கேட்டார்.

"நேரு அவர்களே! படக்குழுவினர் அத்துணை பெரையும் அழையுங்களேன் அவர்களும் பெருமைப்படுவார்கள்"என்றார் அப்பாஸ்.

நேரு அருகில் இருந்த மகள் இந்திராவிடம் மெல்லியகுரலில் "இந்த கூட்டத்திற்கு உணவு தயாரிக்க முடியுமா?முட்டை, மற்ற சாமான்கள் இருக்கிறதா ? என்று கேட்டார். சிறிது நேர யொசனைக்குப் பிறகு இந்திரா சம்மதித்தார்.

மறு நாள் விருந்து முடிந்து எல்லாரும் விடை பெற்றுக் கொண்டார்கள். அப்பாஸ் விடை பெறும் போது,இந்திராவிடம் " விருந்திற்கு அழைக்க உங்களிடம் தயக்கமிருந்ததே! ஏன்?" என்று கேட்டார்.

" என்னசெய்ய! அவர் மாதசம்பளம் வாங்குகிறார்.அவருடைய சம்பளம்மட்டும்தான். பல மாதம் பலசரக்கு கடை,பால்காரன் என்று பாக்கி விழுந்து விடுகிறது அப்பா நிலமை தெரியாமல் விருந்துக்கு கூப்பிட்டு விடுவார். அதனல் என்னிடம் கேட்காமல் விருந்துக்கு அழைக்கக் கூடாது என்று சொல்லியிருந்தேன்.. நெருவின் வெளிநாட்டு பதிப்பகத்தார் ஆண்டுக்கு ஒருமுறைதான் உரிமைப்பணத்தை அனுப்புவார்கள். அதைவைத்துக் கொண்டுதான் கடனை சரிசெய்வேன் "என்றார்.

கண்கள்கசிய மனம் நெகிழ அப்பாஸ் விடை பெற்றார் .

( ரஷீத் கித்வாய் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து.)

7 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

suvanappiriyan said...

தற்போதய அரசியல்வாதிகளை நினைத்து பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

vizzy said...

அப்படிப்பட்ட நேருவுக்கு இந்திரா மாதிரி மகளா?

இராஜராஜேஸ்வரி said...

கண்கள்கசிய மனம் நெகிழ அப்பாஸ் விடை பெற்றார் ./

பகிர்வு மனம் நெகிழவைக்கிறது..
பாராட்டுக்கள்..

அப்பாதுரை said...

நம்பவே முடியவில்லை. நேரு தான் சுதந்திர இந்தியாவின் முதல் கொள்ளைக்காரன் என்று நினைத்தேன். ஆனந்தபவனை நாட்டுக்குக் கொடுத்து நாட்டை ஆனந்தபவனுக்குக் கொண்டு போன குடும்பம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்! இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நேருவிடம் மன்னிப்பும் கோர வேண்டும் போலிருக்கிறதே!

சிவகுமாரன் said...

அப்பாத்துரையின் உணர்வுதான் எனக்கும்..

செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர் என்றல்லவா நினைத்திருந்தேன்.

அதிர்ச்சியான ஆச்சரியம்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! இந்தியாவின் தலைவர்கள் a bundle of contradiction and a mixer of confusion. சுதந்திரப் போராட்டத்தலைவர்களும் சரி அதன் பிறகு வந்த நேரு வரையிலும் பொதுவாக நன்றாகவே இருந்தது.---காஸ்யபன்