Thursday, November 10, 2011

ஸ்டூடியோ சிஸ்டம் என்றால் என்ன?.......

ஸ்டூடியோ சிஸ்டம் என்றால் என்ன?
80 ம் ஆண்டுகளின்முற்பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலமாநாடு சென்னையில் நடந்தது. அதில் , நாவல்,கவிதை,சிறுகதை,நாடகம்,திரைப்படம் என்று துறைவாரியாக ஆய்வுக் கட்டுரைகள் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப் படவேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.

திரைப்படம் பற்றி திருச்சியைச்சேர்ந்த ஜகதீஷும் நானும் எழுதமுடிவாகியது..ஆரம்பகாலம் பற்றி நானும் நிகழ் காலம் பற்றி ஜகதீஷும் எழுத எங்களுக்குள் முடிவு செய்தோம்.

மாமேதை லெனின் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபொது மேற்கத்திய நாடுகளில் திரைப்பட்ம் என்ற புதிய வடிவம் உருவாகியுள்ளதைப் பார்திருக்கிறார். தன் நாட்டு மக்களுக்கும் இந்தவடிவத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு போதமூட்டவெண்டும் என்று நி னைத்தார். புரட்சி நடந்ததும் திரைப்படத்துறையை கல்வித்துறையொடு இணைத்தார். ஐசன்ஸ்டீன்,போடொவ்கின் ஆகிய இளைஞர்களை அனுப்பி திரைப்படம் பற்றி கற்றுவரச்செய்தார்.



இந்தியாவிலும் ஆரோக்கியமாகவே ஆரம்பமாகியது.தமிழகத்தில் ஸ்டூடியோ சிஸ்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக அஸ்திவாரமிட்ட முன்னோடிகளில் முக்கியமானவர் திரு.எஸ்.எஸ்.வாசன் ஆவார்.

தயாரிப்பாளர் சொந்தப்பணத்தில் பட்ம் எடுக்க வேண்டும் படம் எடுக்க தொழிற்கருவிகள் காமிரா, லைட்டுகள், சொந்தமாக இருக்க வேண்டும். படப்பிடிப்புக்கான தளங்கள் சொந்தமாக இருக்கவேண்டும் .தயாரிப்பாளர் வாசனுக்கு சொந்தமானதுதான் ஜெமினி ஸ்டூடியோ.

ஸ்டூடியோவோடு மாதச்சம்பளத்தில் நடிகர்களை வைத்திருந்தார். கணெசன்,புஷ்பவல்லி,சுந்தரிபாய் ,கொத்தமங்கலம் சுப்பு,நாகெந்திர ராவ் ,எம்.கே ராதா,ரஞ்சன் என்று அற்புதமான நடிகர்களை மாதாமாதம் சம்பளம் கொடுத்து வைத்திருந்தார்.

ஜெமினி கதை இலாகா என்று இருந்தது. ஆந்திராவின் இடதுசாரி எழுத்தாளர் ஆசார்யாவிலிருந்து, தேவன், சுப்பு,பட்டு, வென்று எழுத்தாளர்கள் மாதச்சம்பளத்தில் பணியாற்றினர்.

தயாரித்த படங்களை விநியொகம் செய்ய யார்தயவையூம் நாடாமல் ஜேமினி சர்க்யூட் என்ற அமைப்பும் இருந்தது.இவர்கள் ஊர் உஊராகச்சென்று படத்தை திரையிட்டு வர்வார்கள்.

அதனால் தான் அவரால் "சம்சாரம்","ராஜி என் கண்மணி" போன்ற படங்களை உருவாக்க முடிந்தது.

ஸ்டூடியோ சிஸ்டத்தில் ஒரு தயாரிப்பாளர் எதைக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை கொடுக்கமுடியும்.அவரே வினியோகம் செய்வதால் தன் தாயாரிப்பு பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.தமிழகத்தில் இதனை வெற்றிகரமாக செய்து காட்டியவர் திரு வாசன் அவர்கள்.

இந்த ஸ்டூடியோ சிஸ்டம் இற்று விழுந்து ஸ்டார் சிஸ்டம் வந்தது. எப்படி வந்தது ஏன் வந்தது என்ற வினாவுக்கான காரனங்களை திரை உலகுக்குள் தேடமுடியாது.அரசியல் பொறுளாதார சமுக காரணங்களால் அவை மாறின. அதனைத் தனியாக அடுத்த இடுகையில் பார்ப்பொம்.

6 comments:

ADMIN said...

உண்மைதான் ஐயா.! அந்தக் காலம் வேறு.. இந்தக் காலம் வேறு..!!

நீங்கள் சொல்வதில் முழுவதும் எனக்கு உடன்பாடே. அரசியல் பொருளாதார சூழ்நிலையாலேயே இந்நிலையை எட்டியிருக்கிறது என்பது யதார்த்தமான உண்மை.


பகிர்வுக்கு நன்றி ஐயா..!!

hariharan said...

மாதச்சம்பளம் வாங்கிய இயக்குனர்கள், நடிகர்கள் ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாம் சமூக மாற்றம் தான் தீர்மானிக்கிறது. சில நிறுவன வேலைகளிலும் ‘ஸ்பெசலிஸ்ட்’ களுக்கு ஊதியம் என்பதை பேக்கெஜ் என்கிறார்கள். குறிப்பிட்ட வேலையை குரித்த கால்த்திற்குள் மட்டும் தான். அப்புறம் அந்த ஸ்பெசலிஸ்ட் சுதந்திரசாலி. freelancer என்கிறார்கள்.

ஐசன்ஸ்டீன் இயக்கிய ‘உலகைக் குலுக்கிய 10 நாட்கள்’ ஆவணப்படத்தை நேற்று பார்த்தேன். ரஷ்யப்புரட்சிஅயி நேரில் பார்த்தது போல். போல்ஷ்விக் கட்சி சிபிஎம் ஐ நினைவூட்டுகிறது ...

சிவகுமாரன் said...

கலைஞர்கள் சம்பளத்திற்கு வேலை பார்த்தார்கள் என்னும் செய்தி புதியது.
இன்று சினிமாவில் அரசியலா , அரசியலில் சினிமாவா எது புகுந்து கெடுக்கிறது என்பது விவாதத்திற்குரியது .
பகிர்வுக்கு நன்றி அய்யா

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் ஐயா.

சே.வேங்கடசுப்ரமணியன் said...

இன்றும் சினிமா மாதச்சம்பளக் கம்பெனியாக இருந்திருந்தால் எண்ணற்ற கலைஞர்கள்,தொழிளாலர்கள்....தன் வாழ்வின் இறுதிநாட்களிலும்,வாழும்போதும் வருமையில் வாடியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது.பெரு முதலாளிகள்,லேவாதேவிக்காரர்கள்,சூதாட்டக்காரர்களின் கூடாரமாகப் போனதால் தான் இன்றய நிலை.

அப்பாதுரை said...

சுவாரசியமான வரலாறு.