நாற்பது வயதில் 4000 கோடியை சுருட்டிய முதல்வர் ......
மது கோடாவுக்கு 40 வயது ஆகிறது. அவர் தன் முப்பதாவது வயதில் சட்டமன்ற உருப்பினர் ஆனார். வாஜ்பாய், அத்வானி ,நரெந்திர மோடி, ஆகிய மூவரும் இந்த துடிப்பு மிக்க இளைஞருக்கு 2000ம் ஆண்டில் ஜார்கண்டு மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தனர்.
பாபுலால்மராண்டி தலைமையில் பா.ஜ .க ஆட்சி அமைத்தது. அதில் பஞ்சாயத்து அமைச்சர் மது கோடா. அடுத்து அர்ஜுன் முண்டா தலமையில் அமைச்சராக இருந்தார். அவரையும்கவிழ்த்துவிட்டு மது கோடா முதலமைச்சராக ஆனார்
இவருக்கு ஆதரவு காங்கிரஸ்,லல்லு,மற்றுமுள்ள கஜா முஜா கட்சிகள் ஆதரவு. முக்கியமாக மாவொயிஸ்டுகளும் ஆதரித்தார்கள்.
ஆண்டுக்கு 100 கோடி கணக்கில் 40 வயதில் 4000 கோடி அமுக்கியிருக்கிறார் மது கோடா. அதில் 30% மாவொயிஸ்டுகளுக்கு..
கோடாவுக்கு மும்பையில் மூன்று ஹோட்டல், இரண்டு கம்பெனிகள், தாய்லாந்தில் கம்பெனிகள், லைபீரியாவில் சுரங்கங்கள் உள்ளன. வெளிநாட்டுக் கம்பெனிகள் மலைவாழ் மக்களை விரட்டிவிட்டு சுரங்கங்களை நடத்துகின்றன. மலை வாழ் மக்களுக்காக ஆயுதம் தாங்கிய மாவொயிஸ்டுகள் 1200 கோடியை பெற்றுக் கொண்டு ... ஆயுதமாவது மண்ணாவது ...!
ஆந்திராவில் (கெண்டு) பீடி இலை ஒப்பந்தகாரர்கள் நிதி உதவி! உதவியா? செய்கிறார்கள் .
புரட்சியை மம்தாவோடும்,மது கோடாவோடும் சேர்ந்து கொண்டுவந்தால் நமக்கு என்ன வலிக்கவா போகிறது !
2 comments:
இவரெல்லாம்ஐம்பதாண்டுகள் ஆட்சி செய்து நூறாண்டுகள் வாழ்ந்திருந்தால் நாடென்ன ஆகும்.?இவரது காட்பாதர்கள் தான் ஊழலை ஒழிக்க போகிறார்கள்.இவரிடம் கோடை பெற்றவர்கள் தான் புரட்சி பண்ண போகிறார்கள்.........
எங்கே இருக்கிறது இத்தனை பணம்?
Post a Comment