Saturday, June 09, 2012

vakai sooda vaa

                                                         
                                                           "  வாகை சூட வா "             

                   நாடக விற்பன்னரும் கவிஞருமான தோழர் பிரளயனின் கவிதை "களவாணி"    என்றபடத்தில் வருவதாக அறிந்தேன். அந்தப் பாடலை கலை இரவுகளில் கேட்டிருந்தாலும் திரைப்படத்தில்  எப்படி படமாக்கியிருக்கிறார்கள்(takings ) என்று பார்க்க ஆர்வமாக இருந்தது.படத்தைப் பார்த்தேன். மொத்த படமும் மனதை நெருடியது."ஒரு வசமான கை " திரைத்துறைக்கு கிடைத்திருக்கிறது "சற்குணம்" என்ற பெயரில் என்று மகிழ்ந்தேன். 

                                அவருடைய "வாகை சூட வா " என்ற படம் பற்றி பல பத்திரிகைகள் மிகவும் பாராட்டி எழுதியிருந்தன."அழகான,முழுமையான  சமுக பிரக்ஞைஉள்ள , படம்" என்று sify  எழுதியிருந்தது.மனித பலவினத்தை சித்தரித்தாலும் , மிகச்சிறியதாக இருந்தாலும் பரந்த இதயத்தை ,வாழ்க்கையின் வெற்றி பணத்தினால் பெறுவது அல்ல என்று times of india  குறிப்பிட்டிருந்தது சுவாரச்யம்  அற்ற  போழுது போக்கு படங்களின் மத்தியில் மனதை உருக்கும் கருவோடு , கிராமத்து நுண்ணறிவோடு கூடிய சிறுவர்களின் நகைச்சுவை கலந்த காட்சிகளைக் கொண்ட படம் என்று hindu பத்திரிகை குறிப்பிட்டிருந்தது .

                               சமிபத்தில்தமிழ்கம்சென்றிருந்த   பொது பார்க்கமுடியவில்லை. சென்றவாரம் தனியார் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

                                 அரசு பணியில் சேர குக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சிறுவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினால்  தன்னார்வத்தொண்டு நிறுவனம்  கொடுக்கும் சான்றிதழ்  உதவும் என்று கருதி  அங்கு  செல்லும்  வேலு  என்ற  இளைஞனின்  பாடுகள் தான் படம். செங்கற் சூளையில் பணியாற்றும் அந்த அப்பாவி மக்களும் கொத்தடிமையாக பாடுபடுகிறார். கள் .அவர்கள் மத்தியில் சிறுவர்களும் உழைக்கிரார்கள்.  அவர்களுக்கு கல்வி புகட்ட வேலு படும்பாடு , சிறுவர்களின்  குறும்பு,             டிக்கடைநடத்தும்    மதி என்ற பெண் ,வேலு-மதி  இடையே  உருவாகும்  பற்று  ஆகியவை  அற்புதமாக  சித்தரிகப்பட்டுள்ளது. 

                                  வேலுவுக்கு அரசுப்பணி கிடைத்தாலும் மனம் மாறி கற்பவர்களை விட்டுக் கொடுக்க மனமிலாமல்   அரசுப்  பணியை உதறிவிட்டு அந்த மக்கள் பணியத் தொடருகிறான்.

                                    விமல்,இனியா,பாக்கியராஜ்,தம்பிராமையா என்று சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்..கலைஇயக்குனர்  சீனு ஒரு குக்கிராமத்தையே நிர்மாணித்துள்ளார் . சிலோன் ரேடியோ வில் அறிவிப்பாளரின் குரலை  அப்படியே கொண்டுவந்த சிரத்தை  பாராட்டுக்குரியது.

                                      மிகவும் நுட்பமான முறையில் வேலு - மதி பற்றை வெளிப்படுத்திய பாங்கு சிறப்பு.விமலின் பார்வை,மதியின் துடிக்கும் உதடுகள்,கசியும் கண்கள்,ஆகியவை உணர்வுகளை அற்புதமாக அர்த்தப்படுத்துகின்றன.

                           
                                          சிறந்த தமிழ்ப்படமாக தேசிய விருது பெற்றுள்ளது .நார்வே நாட்டு விருதினையும் பெற்றுள்ளது

                                           தேடித்தேடி அலைந்து நல்லபடங்களை தேர்ந்தேடுக்கும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர்கள் சங்கம் இந்த ஆண்டின் சிறந்தபடமாக விருது"வாகை சூட வா " படத்திற்கு   வழங்க உள்ளது.






.





                                                                     

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

பாராட்டுக்குரிய பகிர்வுகள்..

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி ஐயா.

மோகன்ஜி said...

சார் ! நானும் கூட அந்தப் படம் பார்த்து அசந்தேன். அலட்டலில்லாத சித்தரிப்பு. உங்கள் பார்வை அதை உறுதிப் படுத்துகிறது

hariharan said...

தோழர்.இந்தப் படத்தை பார்ப்பதர்கு முன்னால் தான் சிங்கிஸ் ஐத்மத்தாவின் முதல் ஆசிரியர் குறுநாவல் வாசித்தேன்.படம் அந்த நாவ்லை தழுவியிருக்கிறது. புரட்சிக்குப்பிந்தைய சோவியத்தில் கம்சமோல் உறுப்பினர்கள் கிராமங்கள் தோறும் பள்ளிகள் அமைக்கிறார்கள். அப்படி ஒரு கம்சமோல் உறுப்பினர் குர்க்குரே கிராமத்திற்கு சென்று நிலப்பிரபுக்கள் விட்டுச்சென்ற குதிரைத்தொழுவத்தை பள்ளிக்கூடமாக மாற்றுகிறார். படிப்பு வாசனையே இல்லாத அந்த கிராமத்துச்சிறுவர்களை வீடு தேடிச்சென்று அழைத்துவந்து கட்சிப்பணியினூடே கல்வி அளிக்கிறார், பாடத்திட்டம் என்று ஒன்று இல்லாமலேயெ அவர் கற்றுக்கொடுக்கிறார். அப்படி அந்த கிராமத்தில் படித்த ஒரு பெண்மணி விஞ்ஞானியாக உருவாகி நீண்ட நாட்களுக்கு பின்னர் அந்த கிராமத்திற்கே வருகிறார், பள்ளிக்கட்டிடத்தை திறப்பு செய்கிறார். பாடம் கற்றுக்கொடுத்த அந்த ‘முதல் ஆசிரியர்’ தபால் கொடுத்துக்கொண்டிருக்கிறார் அப்போதும். மிகவும் அருமையான நாவல். நாவ்லை வாசித்தபின் இப்படிப்பட்ட ஆசிரியர்கள் சமூகத்தில் உருவானால் சிறந்த சமூகம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

kashyapan said...

ஹரிஹரன் அவர்களே! மிகவும் அருமையானதகவல்.நன்றி---காஸ்யபன்.

சிவகுமாரன் said...

நானும் படம் பார்த்து ரசித்தேன்.
பிரளயனின் எந்தக் கவிதை?