குன்றின் மேல் ஏறியவர்கள் .............
டெல்லியின் மட்டத்திலிருந்து எழுணூறு மீட்டர் உயரத்தில் இருப்பதாக கருதப்படும் ஜனாதிபதி மாளிகையில் யார் ஐந்து ஆண்டுகளுக்கு வசிக்கப் போகிறார்கள் என்பது பற்றி பத்திரிகைகள் எழுதி வியாபாரத்தைப் பார்க்கின்றன.அந்த மாளிகை இருக்கும் இடம்தான் ரெய்சினா குன்று என்று கூறப்படும் பகுதி.
இந்த மாளிகை கட்டப்பட்டு முதன்முதலாக 1931ம் ஆண்டு ஜனவரி மாதம்
23ம தேதி அப்போது வைசிராயாக இருந்த இர்வின் பிரபு குடி புகுந்தார்
.பிரிட்டிஷ்
மன்னர் 1911ம ஆண்டு இந்தியாவிற்கு வந்தார் .அதுவரை கல்கத்தாவில் இருந்த தலைமை இடத்தை டெல்லி கொண்டு வர பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது.
லண்டனில் அதற்கான வரைபடங்கள் உருவாக்கப்பட்டன.
பிரும்மாடமான மாளிகை, அதன் அருகே செயலகங்கள் என்று முடிவாகியது. டெல்லியின் புறப்பகுதியிலிருந்த " ரெய்சினா " குன்று இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது .1912ம ஆண்டு கட்டுமான வேலை துவங்கியது. ஆனால் முதல் உலக யுத்தம் வந்ததால் கட்டிடப் பணி சுனங்க ஆரம்பித்தது. இந்த மாளிகையைக் கட்டிமுடிக்க பத்தொன்பது ஆண்டுகள் ஆகியது..
மாளிகை 4000 ஏக்கர் நிலப்பரப்பில் உருவானது. அதிலிருந்து வரும் சாலை கிழ்க்கு -மேற்காக செல்ல இரண்டு பக்கமும் வடக்கு- தெற்காக செயலக கட்டிடங்கள் வந்தன.
நான்கு மாடிகள்.மொத்தம் 360 அறைகள் புகழ் பெற்ற
"மொகல் கார்டன்ஸ் .". டெல்லி சென்றால் கண்டிப்பாக பார்க்கவேண்டிய கட்டிடம்..
எனக்கு எப்போதுமே கொஞ்சம் கிறுக்கு புத்தி உண்டு .
1984ம ஆண்டு பிரிட்டிஷ் அரசு நிலா ஆர்ஜித சட்டத்தைக் கொண்டு வந்தது.அதன் அடிபடையில் தான் குன்றை தன வசப்படுத்திக் கொண்டது..
அந்தக் குன்றில் இரண்டு கிராமங்கள் இருந்தன. பழ்ங்குடி
மக்கள் வாழ்ந்தனர்.சுமார் 300 குடும்பங்கள் இருந்தன. ரெய்சினா,பால்சா என்று அந்த கிராமங்களின் பெயர்..
அந்த கிராமங்களைக் காணவில்லை. அந்த மக்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரியவில்லை.
அந்த குன்றின் அடிவாரத்தில் "ரியல் எஸ்டேட் "காரர்கள்
2bhk ,3bhk பிளாட்டுகள் போட்டு விளம்பரங்கள் வருகின்றன.
.
3 comments:
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி- கணமேயுங் காத்தல் அரிது என்ற குறளையும் அதில் அமர்ந்த ப்ரமுகர்களையும்,துரத்தியடிக்கப்பட பழங்குடியின மக்களையும் ஒரே நேரத்தில் நான் நினைப்பது ஏதும் வியாதியின் அறிகுறியோ?
இந்த மாதிரி , பலர் நினைக்க ஆரம்பித்தால் , நாடு நலம் பெற வாய்ப்பு உள்ளது.;-)
தயவு செய்து, நேரமிருப்பின், என் பதிவுகளை படித்து , தங்கள் மேலான கருத்துகளை, கூற வேண்டி, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வணக்கம்.
அறியாத பல தகவல்கள் !
உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !
Post a Comment