தி.லி டவுண், சுடலை மாடன் கோவில் தெருவுக்குப் போனேன்.........
கைபேசி சிணுங்கியது. "வள்ளி நாயகம் பேசுதேன். பெரியவர் பெசனுங்காறு "
"சரி!கொடுங்க " கைமாறும் ஓசை .
"யாரு! காஸ்யபனா! ஐயா தெக்க வராப்ல கேள்விபட்டேன். சந்திக்கணும் . "
" கண்டிப்பா" "
" விருதுநகர்ல பாத்தது. பேசமுடியல. ரெண்டு மணி
நேரமாவது பேசணும்"
"மே 15 சாயங்காலம் 5 மணிக்கு உங்கவீட்ல இருக்கேன்!.சரியா "
"அம்மையாரோட வரணும் "
"வந்துருவம் "
மே 15ம தேதி மாலை 5 மணிக்கு சென்றேன் . அது எனக்கு ஆஸ்ரமம். என் கையில் பேனாவைக் கொடுத்து "எழுதும்யா " என்று கூறி என்னையும் ஒரு எழுத்தாலனாக்கிய திகசியின் வீடு எனக்கு மட்டுமல்ல முற்போக்கு எழுத்தாளர்கள் பலருக்கு அது ஆச்ரமம்தான்.
படிப்பு முடிந்த்தும் வங்கியில்செர்ந்தார். தொழிற் சங்கத்தை ஆரம்பித்தார். கருமுத்து தியாக ராஜ செட்டியார் விடுவாரா? ராமநாதபுரத்திற்கு மாற்றினர் .அங்கும் சங்கத்தை துவக்கினார் செட்டியார் கொயம்புத்துருக்கு தூக்கினார்..அங்கும் சங்கம் வந்த்து .எர்ணாகுளம் மாற்றினார்.. ஏ .எஸ் ..மூர்த்தி "என்னாய்யா! பெரியவேலை .விடும்யா ! இங்கவாரும் !"என்றார் .சோவியத் நாட்டில் சேர்நதார் .திகசி.."ராம்நாட்ல இருக்கும் போதே எபலசுப்ரமணித்தை பாப்பேன்.பி.ஆர்..ஜீவா ன்னு பழக்கமாச்சு"என்றார்..பின்னர் "தாமரை "யின் ஆசிரியரானார்.'எழு ஆண்.டுகள் தாமரையின் ஆசிரியராக இருந்தார் .அது தாமரையின் பொற்காலமாகும் ."பாவம் பாலம்மா"என்ற என் முதல் கதை 1962ம ஆண்டு தமரையில் பிரசுரமானது.ந்ன் சென்றபோது அவரும் எழுத்தாளர் முத்துகுமாரும் தான் அவர் வீட்டில் இருந்தனர்
" ஐயா!வாங்கய்யா! வாங்கம்மா!" என்று என்னை யும் முததுமினட்சியையும் வரவேற்றார்.வள்ளி யகமும் வந்து விட்டார்.. அவசரமாக உள்ளேசென்று இரண்டு போன்னாடைகளை கொண்டு வந்தார். எனக்கும் முத்துமினாட்சிக்கும் அணிவித்து "போட்டோஎடும்யா " என்று வல்லினாயகத்திடம் கூறினார்.என் கண்கள் கசிந்தன.
1962ம ஆண்டு.மதுரையில்வாசகர் வட்டம் என்ற அமைப்பின் நிகழ்ச்சி.சி.சு.செல்லப்பா,க.நா.சு , அடிகளார்,எஸ்.ஆர்.கே,டாக்டர் .கனகசபாபதி,தி.க.சி என்று பெரிய ஜமா. தி.க.சி நாவல் பற்றி கட்டுரை வாசித்தார்.அதுதான் ந்ன் அவரை முத்ன் முதலாக பார்த்தது..பின்னர் எழுத்தாளர் ந்வபாரதி முலம் நேரடி அறிமுகம் . "எண்பத்தியேழு வயசாயிட்டு.காது 60சத்ம் கேக்கல..என்றார்.
"நாம் முன்னணிப்படை வீரர்கள். மைநேர்ஸ் அண்டு சாப்பெர்ஸ் "என்றார்.வள்ளினாயகத்திடம விளக்கினேன் "பிரும்மாண்டமான யுத்தம்- இருப்பவனுக்கும்,இல்லாதவனுக்கும் வரும். அந்தப் போரில்படை செல்லுமுன்பு எதிர்களின் திட்டம்,அவர்கள் ஒளிந்திருந்து தாக்கும் இடம், அவர்கள் கண்ணி வெடிஎங்கு வைத்திருக்கிறார்கள் என்பவற்றை கண்டறிய ஒரு சிறு குழுவை அனுப்புவார்கள்.அதன முன்னணிப்படை என்பார்கள்.இந்
தச்சிறு படை எதிரி யின் வியுகத்திற்குள் செல்லும் .அங்குள்ள கண்ணிவெடியை அகற்றி ,அவர்கள் ஒளிந்திருக்கும் இடங்களைக் கண்டறியும். எதிரிகளின் தாக்குதல் இவர்கள் மிது தான் முதலில் இருக்கும். பின்னல் வரும் பெரும்படை இந்தத்தாக்குதலை நடத்தும் எதிரியின் இடத்தை எளிதாக கண்டுகொண்டு அவர்களை நிர்முலமாக்கும்." எதிரிகளை இனம் காட்டும் முன்னநிப்படைதான் எழுத்தாளர்களும் , கலைஞர்களும் என்பது தான் த.க.சி சொன்னதின் அர்த்தம் என்றேன் .
வள்ளிநாயகமும்,முத்துகுமாரும் திகசியப் பார்த்தார்கள். தெய்வ சன்னிதானத்தின் முன்பு
பக்தன் பார்ப்பது போல இருந்தது.
மணி 8 ஆகப்போகிறது பெரியவர் இரவு உணவு மருந்து என்று நேரமாவதை புரிந்து கொண்டு விடை பெற்றோம்...
"காஸ்யபன்!எழுதுங்க! அம்மாநிங்களும் எழதுங்க!"விடை கொடுத்தார் தி.க.சி.

4 comments:
மகிழ்ச்சி ஐயா.
உங்களது அருமையான சந்திப்பு பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி ஐயா.
உங்கள் வட்டம் பெருமைப்பட வைக்கிறது.
|தெய்வ சன்னிதானத்தின் முன்பு
பக்தன் பார்ப்பது போல இருந்தது//
நானும் அப்படித்தான் பார்க்கிறேன்
||உங்கள் வட்டம் பெருமைப்பட வைக்கிறது.//--அப்பாத்துரை.
என்னைப் பொறாமைப்பட வைக்கிறது.
அப்பாதுரை அவர்களே! சிவகுமரன் அவர்களே! நீங்கள் இருவருமே a bit emotional என்று கருது கிறேன்---காஸ்யபன்
Post a Comment